எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வடகுத்து, ஜூன் 21- குறிஞ்சிப் பாடி ஒன்றியம் வடக்கு மேலூர் ஊராட்சியை சேர்ந்த ஆறுமுகம் - வள்ளி இணைய ரின் மகன் ஆ.மணிகண்டன் அய்.ஏ.எஸ். தேர்வில் தமி ழில் தேர்வெழுதி வெற்றி பெற்றவராவார். நெய்வேலி என்.எல்.சி. ஆண்கள் பள்ளி யில் மேல்நிலைக் கல்வியை முடித்தவர்.

அவருக்கு பாராட்டு விழா வடகுத்து - இந்திரா நகர் மாற்றுக்குடியிருப்பு அரசுயர் பள்ளியில் 13.6.2017 அன்று மாலை 4 மணியளவில் தலைமை ஆசிரியர் பெலிக்ஸ் தலைமையில் நடைபெற்றது. மாநில முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் வே.மணிவாசகம், டாக்டர் சின்னதுரை, தமிழ்ச் சங்கத் தலைவர் கோ.பாலகிருஷ் ணன், பேராசிரியர் செல்வ ராசு, கிங்மேக்கர்ஸ் அய்.ஏ. எஸ். அகாடமி சத்ய சிறீ பூமி நாதன், முன்னாள் ஊராட்சி தலைவர் ஆனந்தஜோதி ஆகி யோர் பாராட்டுரை வழங்கி னர்.

கழகப்பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் கழக சார்பில் நண்பர் மணி கண்டனை  பாராட்டி ஆடை போர்த்தி சிறப்பு செய்தார். பெரியார் அய்.ஏ.எஸ். கோச் சிங் சென்டரில் படித்தவர்கள் தான் நாங்கள் என்று மணி கண்டனும், பூமிநாதனும் கூறினர். பாராட்டுக்கு நன்றி தெரிவித்து ஆ.மணிகண்டன் ஏற்புரை ஆற்றினார். தொடக் கப்பள்ளி தலைமை ஆசிரியர் கனகசபை நன்றி கூறினார்.

அமைப்பாளர் சி.மணி வேல், மண்டல இளைஞரணி செயலாளர் வி.திராவிடன் ஆகி யோரும் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner