எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வடலூர், ஜூலை 1- வடலூர் ஞானசபை திடலில் 28.5.2017 அன்று மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை நேதாஜி சிலம்பக்கலை பயிற்சிப்பள்ளி 25ஆம் ஆண்டு விழா கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமை யில் நடந்தது.

ஆசிரியர் செந்தில்குமார் தொகுத்து வழங்கினார். சிலம் பக்கலை ஆசிரியர்கள் கே.சிதம் பரம், கோ.குமரகுரு, முத்து மோகன், பெருமாள், வீரசக்தி, கனகசபை, ஆரோக்கியதாசு, மூர்த்தி, ஏ.அலெக்ஸ், எம்.பெர் னான்டஸ் ஆகியோர் சிறப்பிக் கப்பட்டனர்.

பயிற்சிப் பள்ளி ஆசான் சிலம்புச் செல்வன் ஏ.ராசன், தலைவர் ஜோதிராமலிங்கம், செயலாளர் கே.தர்மன் ஆகி யோர் பொறுப்பில் பிரமாண்ட மானதாக இந்நிகழ்ச்சி நடந் தது. புலவர் சு.ராவணன் (வட லூர் கழக தலைவர்), வி.திரா விடன் (மண்டல இளைஞரணி செயலர்), டிஜிட்டல் ராமநாதன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), வடலூர் கழக செயலாளர் இரா.முத்தையன், மாநில கிராம நிர்வாக அலுவர் கள் சங்க தலைவர் சந்தான கிருஷ்ணன், வி.எம்.சூரிய மூர்த்தி, சிலம்பம் குப்புசாமி, பி.அமல்ராஜ், பார்வதிபுரம் வெ.இராமானுசம், பார்வதி புரம் இராதாகிருட்டிணன் ஆகி யோர் நிகழ்வில் கலந்து கொண்டு பேசினர்.

பல்வேறு குழு வீரர்கள் தங்களின் ஆற்றலை சிலம்ப விளையாட்டின் மூலம் வெளிப் படுத்தினர். இளம் மாணவர்கள் பலரும் குழு விளையாட்டாக வும் திறமைகளை வெளிப்ப டுத்தினர். அனைவருக்கும் நினை வுப் பரிசு வழங்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner