எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மண்மங்கலம், ஜூலை 3 கரூர் மண் மங்கலத்தில் தந்தை பெரியாரின் 138ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவும் மற்றும் மண்மங்கலத் தில் மேம்பாலம் அமைக்க மத் திய, மாநில அரசை வலியுறுத்தி விளக்கப் பொதுக்கூட்டம் மண் மங்கலத்தில் கடைவீதியில் நடை பெற்றது.

நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திராவிடர் கழக மாவட்ட தலை வர் ப.குமாரச்சாமி தலைமை தாங்கினார். திராவிடர் கழகம் மாணவர் அணி த.மணியம்மை வரவேற்புரை ஆற்றினார். மகளி ரணி தலைவர் இராஜாமணி, மாவட்ட மகளிர் பாசறை தலை வர் அம்பிகா, மாவட்ட மகளிரணி செயலாளர் இரா.தங்கம் ஆகி யோர் முன்னிலை ஏற்றனர். நிகழ்ச்சியில் ஈட்டிகணேசன் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார். சாமியார் களின் போலிமுகத்திரையை கிழித்தெறிந்து அவர்கள் செய்யும் மோசடிகள் பற்றியும், சித்து விளையாட்டுகள் பற்றியும், எல்லாம் மந்திரம் அல்ல தந் திரமே என்று செய்து காட்டினார்.

திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், பிஜேபி கட்சியின் இரட்டை வேடத்தையும், தமி ழர்கள் கலாச்சார பெருமை களையும் எடுத்து கூறினார். விடுதலை வாசகர் வட்டத் தலை வர் மா.கண்ணதாசன், துணை செயலர் அரியநாயகம், பொதுக் குழு உறுப்பினர் சே.அன்பு, மாவட்ட செயலர் ம.காளிமுத்து, இளைஞர் அணி அலெக்ஸ், செகநாதன், இராஜா, மாவட்ட துணைச் செயலாளர், வே.ராஜூ, நகர தலைவர் க.நா.சதாசிவம், செயலாளர் ம.சதாசிவம், பெரு மாள், காலனி கிருட்டிணன், துரை கந்தசாமி மற்றும் தோழர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் நன்றியுரையை மாணவரணி கவி யரசு கூறினார்.

வாங்கல்

தந்தை பெரியார் அவர்களின் 138ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவின், பகுத்தறிவுப் பரப்பு ரைப் பொதுக்கூட்டம் வாங்கல் பெரியார் திடலில் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திரா விடர் கழக தலைவர் ப.குமாரசாமி தலைமையேற்றார்.

முன்னதாக மந்திரமா? தந் திரமா? நிகழ்ச்சி தொகுப்பாளர் ஈட்டி கணேசன் அவர்களின் நிகழ்ச்சி நடைபெற்றன. சாமியார் களின் சித்து விளையாட்டுகள் மக்களை ஏமாற்ற அவர்கள் செய்யும் ஏமாற்று வேலைகளை செய்து காட்டினார். எல்லாம் மந்திரம் அல்ல தந்திரமே என்று எடுத்துக் கூறினார்.

திராவிடர் கழக தலைமைக் கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் அவர்கள் கலந்து கொண்டு மத்திய பிஜேபி ஆட்சி யின் அவலங்கள், நீட்தேர்வு, மாட்டுக்கறி பிரச்சினை, காவி பயங்கரவாதம், இந்தி திணிப்பு போன்ற பிரச்சினைகளை எடுத் துக்கூறினார்.

நிகழ்ச்சியில் விடுதலை வாச கர் வட்டம் தலைவர் மா.கண் ணதாசன், துணைச் செயலர் ம.அரியநாயகம், மாவட்ட செயலாளர் ம.காளிமுத்து, கரூர் ஒன்றியத் தலைவர் சு.பழனிசாமி, இளைஞர் அணி தலைவர் அலெக்ஸ், பெருமாள், துரை கந்த சாமி கலந்துகொண்ட இக்கூட்டத் திற்கு காலனி கிருட்டிணன் நன்றியுரை கூறினார்.

ஏராளமான பொதுமக்கள் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner