எழுத்துரு அளவு Larger Font Smaller Fontசென்னை, ஜூலை 15 ‘நீட்’ தேர்வு குறித்த தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கக்கோரி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவிப்புக் கிணங்க அஞ்சலட்டை மூலம் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் கழகத் தோழர்கள் பங்கேற்று, பேருந்துகளிலும், கல்லூரி மாணவர்களிடத்திலும்,  நாள்தோறும் பரப்புரையில் ஈடுபடுகின்றனர்.

பிராட்வே பேருந்து நிறுத்தம்

டவுட்டன் (இராட்லர்தெரு)

மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி

முத்துகுமாரசுவாமி சமஸ்தானம் பள்ளி

புரசைவாக்கம் நெடுஞ்சாலை

பெரம்பூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் அப்போராட்டத்தை விளக்கும் வகையில் வடசென்னை மாவட்ட மாணவரணி சார்பில் துண்டறிக்கை வழங்கப்பட்டது.

பங்கேற்றோர்

பசும்பொன் (இயக்குநர், பெரியார் சுய மரியாதை திருமண நிலையம்), நா.பார்த்திபன் (மாநில மாணவரணி துணைச் செயலாளர்), யாழ்.திலிபன் (மாநில மாணவரணி துணைச் செயலாளர்), பா.மணியம்மை (சென்னை மண்டல மாணவரணி செயலாளர்), கலைமதி, இ.ப.சீர்த்தி, இ.ப.இனநலம், காரல்மார்க்ஸ் பெரியார் திடல், மரகதமணி (மகளிர் பாசறை)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner