எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவர் தலைமையில் தோழமைக்கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்!சென்னை, ஜூலை 12, ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ் நாட்டுக்கு விலக்குக்கோரும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒரு மனதாக  நிறைவேற்றப்பட்ட இருமசோதாக்களுக்கு மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் ஒப்புதலைத் தரவேண்டுமெனவும், மாநில - மத்திய அரசுகள் அதனைப் பெற்றுத்தர வேண்டும் என்பதை வலியறுத்தியும் ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் இன்று (12.7.2017) காலை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலை நகரங் களில் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலை மையில், திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங் களவை உறுப்பினருமான வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அனைத்துக் கட்சித் தலை வர்கள் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

நுழைவுத்தேர்வு ரத்து

தமிழகத்தில் 2007ஆம் ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இதன் பயனாக தாழ்த்தப்பட்டோர், பழங் குடியினர், ஒடுக்கப்பட்டோர், மிகவும் பிற் படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் வகுப் பைச் சேர்ந்த மாணவர்கள் குறிப்பாக கிராமப்புற மாண வர்கள் மருத்துவக் கல் வியை பெற்று பெருமளவு மருத்துவர்களாகி மக்களுக்கு சிறப்பாகச் சேவையாற்றி வருகின்றனர்.

வாய்ப்பு பறிப்பு

நுழைவுத்தேர்வு இன்றி பிளஸ் 2 மதிப்பெண் அடிப் படையில் மருத்துவ கல்லூரிக்கு மாண வர்கள் சேர்க்கை நடை பெற்றதால் அது காலம் காலமாக வாய்ப்பு மறுக்கப் பட்டவர்களுக்கு நல்வாய்ப்புக் கதவுகளை திறந்து விட்டிருப்பதைத் தடுக்கும் வகை யில், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான வாய்ப் பைப் பறிக்கும் வகையில் மத்தியில் அமைந்திருக்கும் பிஜேபி அரசு ‘நீட்’ என்னும் நுழைவுத் தேர்வை புகுத்தியுள்ளது.

உரிமையை மீட்டெடுக்க...

இதை எதிர்த்து கிராமப்புற மாணவர்களின் உரிமையை மீட்டெடுக்க கடந்த 27.3.2017 அன்று சமூக நீதியின் பிறப்பிடமாம் பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட் டமைப்பு மதச்சார் பின்மை, சமூகநீதி, மாநில உரிமை இவற்றை பாதுகாக்கும் நோக்கத்தோடு உருவாக்கப் பட்டது.
இந்த ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட் டமைப்பு எச்சரித்தபடியே நடைபெற்ற ‘நீட்’ தேர்வின் முடிவுகள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மற்றும் கிராமப்புற மாணவர்களின் வாய்ப்பினைப் பறித் துள்ளது.

சமூக நீதி பாதிப்பு

நடந்த முடிந்த ‘நீட்’ தேர்வில் தமிழ்நாட்டில் 38.83 விழுக்காடு மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்திய அளவில் அதிக மதிப் பெண் பெற்ற முதல் 25 பேர்களில் தமிழ்நாட்டு மாணவர்கள் ஒருவர் கூட இல்லை என்பது ‘நீட்’ தேர்வால் சமூகநீதி பாதிக்கப் படும் என்ற ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட் டமைப் பின் எச்சரிக்கையை உறுதிப்படுத்தி யுள்ளது.

குதிரை குப்புறத் தள்ளியதோடு குழியையும் பறித்த கதையாக இடஒதுக்கீட்டில் இதுவரை  இட ஒதுக்கீடே இல்லாத பிரிவினருக்கு (Unreserved) 50.5 சதவிகித இடங்கள் அளிக்கப்பட உள்ளன.

நீதிமன்ற தீர்ப்பு மீறல்

அதிக மதிப்பெண்கள் பெறும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான பொதுப் போட்டியில் இனி அவர் களுக்கு இடமில்லை என்று ஆக்கியதன் மூலம் இட ஒதுக்கீடு சட்டப்படி இல்லாத உயர்ஜாதியினருக்கு 50.5 விழுக்காடு இடங்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி யிருப்பது சட்டம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு மீறலும் மோசடியுமாகும்.

குழப்பமான சொற்களை அகற்ற...

OC என்பது OPEN COMPETITION என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும்.

Others, Unreserved என்ற குழப்பமான சொற்கள் அகற்றப்பட வேண்டும்.

‘நீட்’ தேர்விலும் தகுதியை தேர்வு செய்ய ஒரே மாதிரியான அளவுகோலை மேற்கொள்ளாமல், மாநிலத்திற்கு மாநிலம் வேறு வேறான கேள்வித் தாள்களைக் கொடுத்துத் தேர்வு எழுதச் செய்தது மாணவர்களின் தகுதியை நிர்ணயம் செய்ய பொது அளவுகோலைக் கடைப்பிடிக்காதது பெருங் குற்ற மாகும்.

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்

எனவே, நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வை ஒட்டு மொத்தமாகவே ரத்து செய்து விட்டு, பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத் துவக் கல்லூரிக்கு மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று ஜனநாயக உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
இதையடுத்து 4.7.2017 அன்று சென்னை பெரியார் திடலில் ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், திராவிடர் கழகத் தலை வருமான ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலை மையில் நடைபெற்றது.

ஒரு கோடி மின்னஞ்சல்...

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களின் படி இரு வடிவங்களில் போராட் டத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி:-

1. குடியரசுத் தலைவருக்கு ஒரு கோடி மாணவர்கள் அஞ்சல் அட்டைக் கடிதம், ஒரு கோடி மின்னஞ்சல் அனுப்புவது குறித்து மக்கள் மற்றும்  மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து பெரும் பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும்
பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

2. தமிழக மாவட்டத் தலைநகரங்களில் மாண வர்கள் பெருமளவில் பங்கேற்கும் பெருந்திரள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தை 12.7.2017 அன்று நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ் நாட்டுக்கு விலக்குக் கோரும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்குக் குடி யரசுத் தலைவர் ஒப்புதலை மாநில - மத்திய அரசுகள் பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று (12.7.2017)காலை 11 மணியளவில் தமிழகம் முழு வதும் மாவட்டத் தலைநகரங்களில் ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் பெருந்திரள் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

சென்னை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்த மாபெரும் பெருந்திரள் ஆர்ப் பாட்டத்திற்கு இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யேற்றார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார்.

அனைத்துக் கட்சி தலைவர்கள் உரை

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்சு கஜேந்திரபாபு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், எஸ்.டி.பி.அய் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல்அமீது, திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன், விடு தலைச் சிறுத் தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பின ருமான வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி, ஆர்ப்பாட்டத் தின் தலைமை யுரையை திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிகழ்த்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவரின் தலைமை யுரையையடுத்து அவர் ஒலி முழக்கங்களை சொல்ல, மேடையில் இருந்த தலைவர்களும், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழர்களும் ஒலி முழக்கங்களை  தொடர்ந்து ஒலித்தனர்.

இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா.சற்குணம் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி, திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, திராவிடர் கழக வெளியுறவுச் செய லாளர் வீ.குமரேசன், மாநில மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர் மணியம்மை, சென்னை மண்டலச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் எஸ்.குமாரதேவன்,  தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்டச் செய லாளரும் துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பி னருமான பி.கே.சேகர்பாபு சிறப்பான ஏற்பாடு செய்திருந்தார். திமுக சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன் பெருந்திரளான மாணவரணித் தோழர் களுடன் ஆர்ப்பாட்டத் தில் பங்கேற்றார்.

திமுக வழக்குரைஞரணி கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜே.எம்.ஆருண் (காங்கிரஸ்), விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, செல்வம், செல்லதுரை, எழுத்தாளர் மதிமாறன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகி கே.எம்.நிஜாமுதீன், திராவிட இயக்க தமிழர் பேரவை தென்மண்டலச் செயலாளர் மாறன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

இப்பெருந்திரள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் மேற் கண்ட கட்சிகள் - அமைப்புகளின் நிர்வாகிகள் பொறுப் பாளர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரி ஒலி முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட

ஒலி முழக்கங்கள்

1.    மத்திய அரசே, பிஜேபி அரசே
‘நீட்’ என்ற பெயராலே
சமூக நீதியை
ஒதுக்காதே, ஒதுக்காதே!

2.    மத்திய அரசே, பிஜேபி அரசே
வஞ்சிக்காதே, வஞ்சிக்காதே
தாழ்த்தப்பட்டோரை
பிற்படுத்தப்பட்டோரை
‘நீட்’ என்ற பெயராலே
வஞ்சிக்காதே, வஞ்சிக்காதே
கிராமப்புற மக்களை
வஞ்சிக்காதே, வஞ்சிக்காதே!

3.    மத்திய அரசே, பிஜேபி அரசே
தமிழ்நாடு சட்டப் பேரவையில்
நிறைவேற்றப்பட்ட
‘நீட்’ தேர்வுக்கு
விலக்குக் கோரும்         
மசோதாவுக்கு  
ஒப்புதல் வழங்கு - ஒப்புதல் வழங்கு!

4.    தமிழ்நாடு அரசே, தமிழ்நாடு அரசே
வற்புறுத்து வற்புறுத்து
மத்திய அரசை  
வற்புறுத்து - வற்புறுத்து!

5.    திட்டமா திட்டமா?
இடஒதுக்கீட்டை
ஒழித்துக்கட்ட
திட்டமா திட்டமா?

6.    வேண்டாம் வேண்டாம்
விஷப்பரீட்சை வேண்டாம்
வேண்டவே வேண்டாம்!
எச்சரிக்கிறோம் எச்சரிக்கிறோம்
மத்திய அரசை எச்சரிக்கிறோம்!

7.    மாநில அரசே, மாநில அரசே
சரணடையாதே
சரணடையாதே
மத்திய அரசிடம்
சரணடையாதே
சரணடையாதே!

8.    மத்திய அரசே
மத்திய அரசே
கல்வியை  
மாநிலப் பட்டியலுக்கு
கொண்டுவா, கொண்டுவா!
பொதுப்பட்டியலிருந்து
மாநிலப் பட்டியலுக்கு
கொண்டுவா, கொண்டுவா!

9.    பறிக்காதே பறிக்காதே!
மாநில உரிமையை
பறிக்காதே பறிக்காதே!

10.    ஒன்றிடுவோம் ஒன்றிடுவோம்
வென்றிடுவோம் - வென்றிடுவோம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner