எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடர் கழக மருத்துவரணியின் சார்பில் இயங்கும்

கிராமப்புற மகளிருக்கான புற்றுநோய் ஆய்வு வாகனம்

அருணாசலம் - அமிர்தம்மாள் பெயரில் அழைக்கப்படும்

இறுதி நிகழ்வில் தமிழர் தலைவர் அறிவிப்பு

செய்யாறு, ஆக. 30  திராவிடர் கழக  மருத்துவரணியின் சார்பில் கிராமப்புற மகளிருக்கான புற்றுநோய்  கண்டறியும் ஆய்வு வாகனம் இனிமேல், அருணாசலம் - அமிர்தம்மாள் புற்றுநோய் கண்டறியும் ஆய்வு வாகனம் என்று அழைக் கப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்தார்.

மறைவுற்ற முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் செய்யாறு பா.அருணாசலம் அவர்களின் உடலுக்கு நேற்று (29.8.2017) மலர்மாலை வைத்து, இறுதி மரியாதை செலுத்தி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கலுரையாற்றி னார்.

அவரது இரங்கலுரை வருமாறு:

மிகுந்த சங்கடத்திற்கு...

மிகுந்த துன்பத்திற்கும், துயரத்திற்கும், வேதனைக்கும் இடையில் எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு செய்யாறுக்கு வருகின்றபொழுதெல்லாம், மிகுந்த உற்சாகத்தோடு, மகிழ்ச்சியோடு இங்கே வருகின்ற வாய்ப்பைப் பெற்ற நாங்கள், இன்றைக்கு மிகுந்த துயரத்தோடு, சொல்லொணா வேதனையோடு உங்களையெல்லாம் சந்திக்கக் கூடிய ஒரு அரிய வாய்ப்பினை மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்தவராகிவிட்ட முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் - வாழ்நாள் முழுவதும் இந்தக் கொள்கை யையே சுவாசித்துக் கொண்டிருந்த பெரியார் பெருந் தொண்டர் அய்யா செய்யாறு அருணாசலம் அவர்கள் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தியை நேற்று கேட்ட பொழுது, மிகுந்த சங்கடத்திற்கு ஆளானோம்.

தஞ்சையில் நேற்று பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா - அப்படிப்பட்ட சூழ்நிலை யில், வேறு சாதாரண பொதுக்கூட்டமாக இருந்தாலும், அதனை தள்ளி வைத்துவிட்டு வரக்கூடிய சூழலைப் பெற் றிருப்போம். ஏனென்றால், அவ்வளவு ஈடுபாடு அய்யா  அருணாசலம் அவர்கள்மீது.

எல்லோருக்கும்

ஆச்சரியமாக இருந்தது

அவர்கள் சற்று உடல்நிலை குறைவு ஏற்பட்ட நிலை யில், மருத்துவமனையில் ஏறத்தாழ ஓராண்டுக்கு முன் இருக்கலாம் என்று நினைக்கிறேன். நாங்கள் குடியாத்தம் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, இவரைப் பார்க்கவேண்டும் என்று வரும்பொழுது, மழை பெய்து கொண்டிருந்தது. அவர்கள் சற்று நினைவு தடுமாற்றமாக இருக்கிறார்கள் என்று நம்முடைய இளங்கோ அவர்களும், தோழர்களும் சொன்னார்கள். மீனாட்சி மருத்துவமனையில் அவரைப் பார்க்கச் சென்றபொழுது, எங்களைப் பார்த்தவுடன், என்னு டைய வாழ்விணையரைப் பார்த்தவுடன், கையைப் பிடித் துக்கொண்டு, வழக்கம்போல் அவர் உரையாட ஆரம்பித் தார். இதனைப் பார்த்த எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. காரணம், அவருக்கு இருந்த ஒரு தனித்த ஈடுபாடுதான்.

பா.அருணாசலம் - வேல்.சோமசுந்தரம் - திருச்சிற்றம்பலம்

அதுமட்டுமல்ல, அறிவாசான்  தந்தை பெரியார் அவர்கள் காலத்திலிருந்து திராவிடர் கழகம் என்று சொன்னால், இந்தப் பகுதியைப் பொறுத்தவரையில், முது பெரும் பெரியார் பெருந்தொண்டராக இருந்து, மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்தவராக இருந்து, தான் மறைந்தாலும், தன்னுடைய பிள்ளைகளில் ஒருவர் இந்தப் பணியை செய்வார்கள் என்று, எங்களுக்கு அடை யாளம் காட்டிவிட்டுச் செல்லக்கூடிய அளவில் சிறப்பாக வாழ்ந்து மறைந்த அய்யா வேல்.சோமசுந்தரம் அவர்களா னாலும்,

வேல்.சோமசுந்தரம் அவர்கள், அருணாசலம் அவர் களிடம் உரிமை எடுத்துக் கொண்டு பழகுவார்; அப்படிப் பட்ட நம்முடைய அருணாசலம் அவர்களானாலும்,

அதேபோல, மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்தவராக இருக்கக்கூடிய திருச்சிற்றம்பலம் அவர்களா னாலும்,

இன்றைக்கு அவர்கள் எல்லோரும், ஒருவர் பின் ஒருவராக மறைந்தார்கள் என்று சொல்லும்பொழுது, நம்மு டைய மூத்தவர்கள், எடுத்துக்காட்டானவர்கள் தொண்டே தம்முடைய தூய வாழ்க்கை என்று கருதியவர்கள் இன்று நம்மிடையே இல்லை என்று சொல்லும்பொழுது, எளிதில் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பான்மையை நம்மால் பெற முடியவில்லை.

ஒவ்வொரு பிறந்த நாளின்போதும்...

அதுமட்டுமல்ல, தனிப்பட்ட முறையில்கூட எங்களுக் கெல்லாம் அருணாசலம் அவர்களுடைய இழப்பு மிகப்பெரிய இழப்பாகும். அவரானாலும், அவருடைய வாழ்விணையர் அமிர்தம்மாள் ஆனாலும், அவர்கள் எந்த நேரத்திலும், எல்லோர் இடத்திலும் அன்பு காட்டுவார்கள்.  அருணாசலம் அவர்களுடைய ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், நாங்கள் இங்கே வந்து தடுமாறக் கூடாது என்று அவரே பெரியார் திடலுக்கு, தோழர்களை எல்லாம் அழைத்துக்கொண்டு வந்து, விருந்து வைத்து, இயக்கத்திற்கு நன்கொடை கொடுக்காமல் போகமாட்டார். அதோடு என்ன செய்யவேண்டும் என்றுதான் கேட்பார்.

அதேநேரத்தில், தன்னுடைய பிள்ளைகள், மருமகள்கள் ஆகியோர்களுக்கு என்னென்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்து வைத்துவிட்டேன் என்று சொல்வார்.

தலைமையிடம்

மிகவும் உறுதியாக இருந்தவர்

அவர்கள் இயக்கத்தை தன்னுடைய குடும்பம்போல் கருதினார். குடும்பத்து உறவுகளை மதிப்பதைவிட, இயக் கத்தை அதிகமாக மதித்தார். அதுமட்டுமல்ல, இதுவரையில், அய்யா அவர்கள், அம்மா மணியம்மையார் அவர்கள், அதற்குப் பிறகு அவருடைய வயதைவிட குறைந்த எங் களைப் போன்றவர்கள் தலைமையை ஏற்றுக் கொண்ட போது, அந்தத் தலைமையிடம் மிகவும் உறுதியாக இருந்தார்.

புத்தர் கொள்கையை ஏற்றவர்கள் மூன்று உறுதிமொழி களை சொல்வார்கள்.

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

என்று. இவர் ஏதோ மந்திரம் சொல்கிறாரே என்று நினைக்கவேண்டாம்.

புத்தம் சரணம் கச்சாமி என்றால் - தலைவனிடத்தில் என்னை ஒப்படைத்துக் கொண்டேன்.

தம்மம் சரணம் கச்சாமி என்றால் - இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டு, அதிலிருந்து வழுவாது வாழ்வேன்.

சங்கம் சரணம் கச்சாமி என்றால் - நான் ஏற்றுக்கொண்ட இயக்கத்திற்கு ஒருபோதும் துரோகம் செய்யமாட்டேன்.

தலைவன் - கொள்கை - இயக்கம் இந்த மூன்றையும் எள் மூக்கு முனையளவும்கூட வழுவாமல் அருணாசலம் அவர்கள் இறுதிவரையில் வாழ்ந்து வந்தார்கள். இப்படி அவருடைய பெருமைகளை எவ்வளவோ சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

பொறியாளர் நெடுமாறன்

ஆனால், ஒரே ஒரு ஆறுதல் இந்த நேரத்தில் என்ன வென்றால், நம்முடைய வேல்.சோமசுந்தரம் அவர்கள் மறைந்தாலும், அவருடைய மகன் பொறியாளர் நெடுமாறன் அவர்கள், அவருடைய பணியை செய்வதற்குப் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார். எங்களுக்கெல்லாம் பெரிய ஆறுதல் அது.

அதேபோன்று, அருணாசலம் அவர்கள், அவருடைய மகனான இளங்கோ அவர்களின் கைகளைப் பிடித்து நம்மிடையே கொடுத்துவிட்டார்.

சில மாதங்களுக்குமுன்  அருணாசலம் அவர்களுக்கு உடல்நிலை முடியவில்லை. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தில் உறுப்பினராக இருந்தார். அவரிடம் நான் கேட்டேன், ‘‘கூட்டங்களுக்குத் தொடர்ந்து வராமல் இருக்கக்கூடாது; இரண்டு, மூன்று கூட்டங்களுக்கு வர வில்லை என்றால், அதில் சட்ட சிக்கல்கள் ஏற்படும். ஆகவே, உங்களுக்குப் பதில் இளங்கோவை போட்டிருக் கிறேன்'' என்றேன்.

அருணாசலம் அவர்கள், ‘‘மிகவும் மகிழ்ச்சி'' என்றார் அவர்.

அதேபோன்று, காமராசர் அவர்கள்.

இவ்வளவு பெரிய துன்பத்திலும் இதுதான் ஒரு பெரிய ஆறுதல்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அருணாசலம் அவர்கள் நிறைவாழ்வு வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய மறைவு நமக்கு இழப்புதான். ஆனாலும், இயற்கையை எண்ணி, எது தவிர்க்க முடியாதோ, அதனை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.

நான் ஆறுதல் பெற வந்திருக்கிறேனே தவிர, உங் களுக்கு ஆறுதல் கூறுவதற்கு வரவில்லை.

எல்லோரிடமும் பண்போடு பழகுவது - யாருக்கும் உதவி செய்வது

அவர் எந்தக் கருத்துள்ளவர்களையும் ஈர்த்திருக்கிறார். இங்கே வந்திருக்கின்றவர்களைப் பார்த்தீர்களேயானால், திராவிடர் கழகத்துக்காரர்கள் மட்டுமல்ல. அவருடைய கொள்கைக்கு மாறானவர்கள் இங்கே இருக்கிறார்கள் என்றாலும்கூட, அவருடைய தனிப்பட்ட பண்பு இருக்கிறதே - நயத்தக்க நாகரிகத்தோடு பழகுவது- எல்லோரிடமும் பண்போடு பழகுவது - யாருக்கும் உதவி செய்வது - அதுதான் மிகவும் முக்கியம்.

இதுவரையில் அவர், பரிந்துரை என்று அய்யா அவர்களின் காலத்திலிருந்து வந்திருக்கிறார். மருத்துவக் கல்லூரி பரிந்துரை - பொறியியல் கல்லூரி பரிந்துரை - அதேபோன்று, பதவி மாற்றங்கள் பரிந்துரை - எந்தக் கட்சி ஆட்சியாக இருந்தாலும், அய்யா சொன்னால் கேட்பார்கள் என்று.

அதே மாதிரி, இவரிடம் பரிந்துரை கோரி வருகிறவர் களையும் சென்னைக்கு இவருடைய செலவிலேயே அழைத்துக் கொண்டு வருவார்.

அவருடைய கண்டுபிடிப்புகளிலே மிகவும் அற்புதமான கண்டுபிடிப்பு

அவருடைய பணி என்பது இருக்கிறதே - நிறைய இளைஞர்களை உற்சாகப்படுத்துவார். அவருடைய கண்டுபிடிப்புகளிலே மிகவும் அற்புதமான கண்டுபிடிப்பு - இன்றைக்கும் இயக்கத்திற்குப் பயன்படுகிறார்கள் என்று சொன்னால், நம்முடைய வெங்கட்ராமனும், அவருடைய துணைவியார் பேராசிரியர் தமிழ்மொழியும் ஆவார்கள். அவருடைய தந்தையார் அவர்களை அடையாளம்காட்டி, ஒவ்வொருவரைப்பற்றியும் சொல் வார்.

எந்தப் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னாலும், அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, என்ன செய்யவேண்டும் என்றுதான் கேட்பார்.

டில்லியில், பெரியார் மய்யம் அமைத்த நேரத்தில், அய்யாவுக்கு அங்கே சிலை வைக்கின்ற பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்று சொன்னார். அண்மையில்கூட நான் டில்லிக்குச் சென்றிருந்தபோது, அய்யா சிலைக்குக் கீழே அருணாசலம் அவர்களுடைய பெயர் இருக்கிறது.

அருணாசலம் - அமிர்தம்மாள் பெயரில் புற்றுநோய் ஆய்வு வாகனம்!

இங்கே நம்முடைய நெடுமாறன் அவர்கள் மிக அருமையாக  சொன்னார். அருணாசலம் அவர்களு டைய வாழ்விணையர் மறைந்தவுடன், என்ன பெயரில் செய்யவேண்டும் என்று என்னிடம் கேட்டபொழுது, நான் சொன்னேன், கிராமங்களில் உள்ள மகளிருக்கு  புற்றுநோய் ஏற்படுகிறது; பல மகளிர் அதனை வெளியில் சொல்வதற்குக்கூட வெட்கப்படுகிறார்கள்; கூச்சப்படு கிறார்கள். அவர்களைப் பரிசோதனை செய்வதற்கு, நம்முடைய பெரியார் மருத்துவரணி அங்கே சென்று அந்தப் பணியை செய்வதற்கு ஒரு வாகனம் வாங்கலாம்; அந்த வாகனத்திற்கு அவருடைய வாழ்விணையர் பெயர் வைக்கப்பட்டது. இனிமேல், அருணாசலம் அவர்களுடைய பெயரும் சேர்க்கப்படும். நாடு தழுவிய அளவில், திருச்சியை சேர்த்த மருத்துவர்கள் அந்தப் பணியை செய்துகொண்டிருக்கிறார்கள்.

எனவே, ஈதல் இசைபட, ஒருவர் மிக எளிய முறை யில் இருந்து முன்னேறியவர் என்று,  அவருடைய பேட்டியில் சொல்லியிருக்கிறார். நம்முடைய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் அந்தப் பேட்டியை பதிவு செய்திருக்கிறார்.

நான் மாணவப் பருவந்தொட்டு

இங்கே வந்திருக்கிறேன்

நான் இந்த ஊருக்குப் புதியவன் அல்ல. ஒரு வாரம் பொங்கல் விழாவை நடத்திய ஒரே ஊர் செய்யாறுதான் - திருவத்திபுரம்தான் என்று சொல்லக்கூடிய பெருமைப் படைத்த இந்த ஊருக்கு நான் மாணவப் பருவந்தொட்டு இங்கே வந்திருக்கிறேன்.

அன்றையிலிருந்து இன்றுவரையில் பார்த்தீர்களே யானால், எப்படிப்பட்ட ஒரு பெரிய மாறுதல் இல்லாத தோழர்கள் இந்தக் குடும்பத்தில் இருப்பவர்கள்.

அதைவிட, வயதான காலத்தில், அய்யா பாவாடை மூர்த்தி அவர்கள் - பெரியார் அவர்கள் வந்தால், அய்யா அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் இரண்டு பேரும் உரையாடிய நிகழ்ச்சி இதே  இல்லத்தில் எத்தனையோ முறை நடந்திருக்கிறது.

எனவேதான், அப்படிப்பட்ட ஒரு அரிய குடும்பம் - சிறந்த குடும்பம் - ஒரு சுயமரியாதைக்காரர் மறைந்தால், அது ஒரு சமூக விஞ்ஞானி மறைந்ததற்கு அடையாள மாகும். என்றாலும், அவர் சில காலம் உடல்நலக் குறை வாக இருந்தார்கள். அந்தக் காலத்திலும் பிள்ளைகள் அத்துணை பேரும் அவரை சிறப்பாகக் கவனித்தார்கள்.

எல்லோருக்கும் மேலாக, அய்யா ஆனந்த்  அவர் களுக்கு நாங்கள் மிகுந்த அளவிற்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம். அருணாசலம் அவர்களோடு நிழல் போன்று எப்பொழுதும்கூட இருந்து, உதவி யாளராக இருந்தார்.

மருத்துவர் சோபனாவிற்கு நன்றி!

எல்லாவற்றிற்கும் மேலாக, அய்யா அருணாசலம் அவர்கள் 91 வயதுவரை இருந்து நிறைவு வாழ்வு வாழ்ந்திருக்கிறார் என்றால், அவருடைய நோய்க்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிற அந்த நேரத்தில், அதனை செய்த பெருமை அவருடைய பேத்தி, சோபனா  அவர்களையே சாரும். அவர்களுக்கும் நான் இயக்கத்தின் சார்பில் நான் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன்.

இந்தக் குடும்பத்தில் அவர் மருத்துவப் படிப்பு படித்திருக்கிறார்.   பேரப் பிள்ளைகளிடம்தான் தாத்தாக் களுக்கு ஈடுபாடு அதிகமாக இருக்கும். சொந்தப் பிள்ளைகள், மரியாதையோடு பழகுவார்கள்; ஆனால், பேரப் பிள்ளைகள்தான் தோழமையோடு பழகுவார்கள்; எல்லா குடும்பங்களிலும் வழக்கமாக.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன்றைக்கு சோபனா அவர்களுக்கும் இந்த அரங்கத்தில், இயக்கத் தின் சார்பில் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

என்றாலும், ஒரே ஒரு வேண்டுகோள் என்னவென் றால், ஏற்கெனவே அவர் இணைப்பை ஏற்படுத்தி விட்டுத்தான் சென்றிருக்கிறார், இளங்கோவன் மூலமாக.

கொள்கைக் குடும்பமாக

என்றைக்கும் திகழுங்கள்!

எப்படி அருணாசலம் அவர்கள் இருந்தால், இந்தக் குடும்பம் இயக்கத்தில் ஒரு பெரிய ஈடுபாடோடு இருக் குமோ, எந்த நிலையானாலும், இயக்கக் கொள்கையோடு, அந்தக் கொள்கை வழுவாமல் நடந்துகொள்வார்களோ, அதே அளவிற்கு கொள்கைக் குடும்பமாக நீங்கள் என்றைக்கும் திகழ்ந்து,

அய்யா அருணாசலம் அவர்கள் இருந்தால், நாங்கள் எப்படி இந்தக் குடும்பத்தோடு இருப்போமோ, அதே போல்தான் இயக்கமும் இருக்கும் என்பதை எடுத்துச் சொல்லி, இளங்கோ அவர்களுக்கு நன்றியை சொல்லி,

அதேபோல், அய்யா அருணாசலம் அவர்களின் மறைவால் வாடுகின்ற, அவருடைய மகன்கள், மகள்கள், மருமகப் பிள்ளைகள், மருமகள்கள், பேரப் பிள்ளைகள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அத்துணை பேருக் கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து,

அய்யா அருணாசலம் அவர்களுக்கு

வீர வணக்கம்!

மறைந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதை வீரர் அய்யா அருணாசலம் அவர்களுக்கு நம்முடைய வீர வணக்கத்தை அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று தெரிவிப்போம்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இரங்க லுரையாற்றினார்.

இறுதி நிகழ்வு -

வீரவணக்கக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு முது பெரும் பெரியார் பெருந்தொண்டரும், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிர்வாகக்குழு உறுப்பினரும், மாவட்ட, மண்டல திராவிடர் கழக தலைவராக பொறுப்புகள் வகித்தவரும், பல கல்வி நிறுவனங்களில் அங்கம் வகிப்பவரும், செய்யாறு நகர வியாபாரிகள் சங்க ஆலோசகரும், செய்யாறு கழக மாவட்ட தலைவர் அ.இளங்கோவனின் தந்தையாருமான, மக்களால் பாசத்தோடு ‘தாடி' என அழைக்கப்பட்ட 91 வயது நிறைந்த பா.அருணாசலம் அவர்கள் 28.8.2017 காலை 5 மணியளவில் இயற்கை அடைந்தார்.

மூத்த பெரியார் பெருந்தொண்டர் செய்யாறு பா.அருணாசலம் அவர்களின் மறைவு தகவல் அறிந்ததும் தஞ்சையில் முகாமிட்டிருந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மோகனா அம்மை யார் ஆகியோர் நேற்று (29.8.2017) காலை 9 மணிக்கு செய்யாறு நகருக்கு நேரில் வந்து பா.அருணாசலம் அவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து வீர வணக்கம் செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

இல்லத்தில் நடைபெற்ற வீரவணக்கம் கூட்டத் திற்கு தலைமையேற்று வீரவணக்க உரை நிகழ்த் தினார்.

இந்நிகழ்வில்  ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), ஒரத்தநாடு இரா.குணசேகரன் (த.செ.குழு உறுப்பினர்), ஊமை ஜெயராமன்  (அமைப்பு செயலாளர்), வி.சடகோபன் (வேலூர் மண்டல தலைவர்), சேத்பட் நாகராஜ் (மாவட்டச் செயலாளர்), திண்டிவனம் தாஸ் (விழுப்புரம் மண்டல தலைவர்), பழ.வெங்கடாசலம் (தர்மபுரி மண்டல தலைவர்), மூத்த மருமகன் திருவேங்கடம், வியாபாரி சங்கத்தலைவர் அருணகிரி ஆகியோர் வீரவணக்க உரையாற்றினர்.

மறைவு செய்தியறிந்து அன்னாரின் உடலுக்கு திராவிடர் கழகத்தினரும், பல்வேறு அரசியல் கட்சி களைச் சேர்ந்தவர்களும் மலர் மாலை வைத்து மரியாதை செய்தனர்.

அவர்களின் விவரம் வருமாறு:-

திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், சி.வெற்றிச் செல்வி, வடசென்னை மாவட்ட தலைவர் சு.குமார தேவன், துணைச் செயலாளர் செம்பியம் கி.ராம லிங்கம், ‘விடுதலை' தலைமை செய்தியாளர் வே.சிறீதர், பெரியார் திடல் ஆனந்த், கலைமணி, செய்யாறு மாவட்டச் செயலாளர் சேத்துப்பட்டு அ.நாகராசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன், வி.தேவகுமார், பேரா. மு.தமிழ்மொழி, செல்வி

வெ.எழில்மதி, செய் யாறு நகர தலைவர் தி.காமராசன், மருதாடுமணி (வந்தவாசி நகர தலைவர்), டி.என்.கஜபதி, அரிசி ஆலை என்.வி.கோவிந்தன், டாக்டர் டி.ரமேஷ், ஆர்.மகேஸ்வரி, சாந்தி காமராசன், நெய்வேலி படிகலிங்கம், நகர செயலாளர்

எஸ்.சீனுவாசன், ஆர்.ஆறுமுகம், பகுத்தறிவாளர் கழக செயலாளர் திருநாவுக்கரசு, தங்கம் பெருமாள் - சுண்டிவாக்கம், சென்னை மண்டல திராவிடர் கழக தலைவர் தாம் பரம் இரா.இரத்தினசாமி, நகர செயலாளர் சு.மோகன்ராஜ், சன்ஆரியாஸ், மா.குணசேகரன், செந்தமிழ் சேகுவாரா, அர்ஜூனன், ஏசா அருணாச்சலம், மணிகண்டன், வெள்ளையன். திமுக மாவட்டச் செயலாளர் ஆரணி

ஆர்.சிவானந்தம், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் செய்யாறு வ.அன்பழகன், அசனமாப்பேட்டை ஆர்.வேல்முருகன், தெள்ளாறு டி.டி.துரை, சமூக ஆர்வலர் டி.வடிவேல், குடியாத்தம் டி.தமிழ்ச்செல்வன், இந்துமதி, விசாகப்பட்டினம் டாக்டர் டி.குமுதா.

கல்விக்காவலர் பா.போஸ், புதுச்சேரி எம்.டி.முத்து, வழக்குரைஞர்கள் டி.ஜி.மணி, டி.ஜி.எழிலரசன், ஆர்.கே.மெய்யப்பன், டி.வினாயகம், வாலாஜா சி.பாண்டுரங்கன், சம்பந்தமூர்த்தி, பல கல்வி நிறுவனங் களின் முதல்வர்கள், பேராசிரியர்கள், பள்ளி தலை மையாசிரியர்கள், ஆசிரியர்கள்.

இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சோலை.பழனி, எம்.தாமோதரன், டி.வெங்கடேசன், ஆர்.நாராயணன், பி.சுப்பிரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நகர செயலாளர் மு.தெய்வ சிகாமணி, தமிழரசன்.

சு.பன்னீர்செல்வம், முனு.ஜானகிராமன் (பொதுக் குழு உறுப்பினர்), சுந்தரமூர்த்தி, எம்.எஸ்.பலராமன், சுந்தர், கு.பஞ்சாட்சரம் (வேலூர் மண்டல செயலாளர்), டாக்டர் ஜெகன்பாபு (வேலூர்),  செல்வநாதன் (வேலூர்), நாகம்மை (வேலூர்), தாண்டவராயன் (வேலூர்), வடசேரி சுமதி (வேலூர்), ஆத்துறை முத்து, நகர தலைவர் காமராஜ் (செய்யாறு), டாக்டர் ரமேஷ் (செய்யாறு),  பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், திருவண்ணாமலை டி.எஸ்.கவுதமன், ஆர்.விஜய குமாரி நாகராசன், அண்ணா சரவணன் (மா.ப.க.து.த), வினாயகம் (ஆர்காடு ந.தலைவர்), வி.சிவாஜி (தருமபுரி), தம்பி பிரபாகரன் (கடலூர் மண்டல மாண வரணி தலைவர்), செய்யாறு தோழர்கள் ஆறுமுகம், முனுசாமி, உமாபதி, சீனிவாசன், தங்கம் பெருமாள், கஜபதி, ஈசுவரி (குடியாத்தம்), திமிரி குருநாதன், வினாயகம் (ஆற்காடு), வீராசாமி (ப.க.ஆ.அணி), கோவிந்தன் (செய்யாறு), அண்ணாதாசன் (தி.மலை செயலாளர்), திருமலை (மாவட்ட இளைஞரணி), திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் பட்டாபி ராமன் ஆகியோர் மறைவுற்ற பெரியார் பெருந் தொண்டர் பா.அருணாசலம் அவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தி இறுதி நிகழ்விலும் பங்கேற்றனர்.

இறுதி நிகழ்வு ஏற்பாடுகளை செய்யாறு பி.உமாபதி, எஸ்.குணாளன், எஸ்.ராமச்சந்திரன், எம்.சத்தியமூர்த்தி, மு.ராஜராஜன், வி.பரணிகுமார், ஆனந்தன், ஏழுமலை ஆகியோர் செய்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner