எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருத்துறைப்பூண்டி, செப். 16 திருத் துறைப்பூண்டி கழக மாவட்ட தலைஞாயிறு ஒன்றிய தலைவர் அய்.பாஸ்கரன் - பானுபிரியா இல்ல திருமண விழா 9.9.2017 அன்று தலைஞாயிறு திருமண அரங்கில் மாவட்ட செயலாளர் ச.பொன்முடி தலைமையிலும் நகர தலைவர்  சு.சித்தார்த்தன் முன்னிலையிலும் வாழ்க்கை இணை ஏற்பு விழா நடைபெற்றது.

இத்திருமண விழாவில் தி.குணசேகரன் உறுதிமொழி கூற திராவிடர் கழக தோழர்கள் முன்னிலையில் உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டு திருமண விழா நடைபெற்றது. அனைவரையும் மாவட்ட இளைஞரணி தலைவர் நா.கவிதம்பி வரவேற்றார்.

ஒன்றிய தலைவர் இரா.அறிவழகன், ஒன்றிய செயலாளர் ந.செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.மதன், மாவட்ட மாணவரணி செயலாளர் அஜெ.உமாநாத், மாவட்ட மகளிரணி அமைப் பாளர் சி.கலைவாணி, ஒன்றிய இளை ஞரணி தலைவர் பாங்கல் கேஜி.லோகநாதன், பகுத்தறி வாளர்கள் பண்ணைத்தெரு சுரேஷ், மன்னார்குடி சி.கார்த்திகேயன், மன்னார்குடி பாஸ்கர் ஆகி யோர் கலந்து கொண்டனர். அன்று மாலை திருத்துறைப்பூண்டி ஏஆர்வி திருமண அரங்கில் தமிழ் தலைவரிடம் வாழ்த்துப் பெற்று மண மக்கள் அய். பாஸ்கர் -- பானுப்பிரியா சார்பாக அரை ஆண்டு விடுதலை சந்தா வழங்கப்பட்டது.

 

தந்தை பெரியார் பிறந்த நாள் - திராவிடர் பெருவிழா !

 

காவேரிப்பட்டணம், செப். 16 கிருட்டிணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 9.9.2017 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு காவே ரிப்பட்டணம் தந்தை பெரியார் குடிலில் ஒன்றியச் செயலாளர் சிவ.மனோகர் தலைமையிலும், மாவட்ட துணைத் தலைவர் தா.சுப்பிரமணியம், மாவட்ட ப.க.துணைத் தலைவர் செ.ப.மூர்த்தி ஆகியோர் முன் னிலையிலும், ஒன்றிய துணைச் செயலாளர் சி.இராசா வரவேற்புரையாற்றியும் கூட் டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கோ.திராவிடமணி, மாவட்ட இளைஞரணி செய லாளர் வே.புகழேந்தி கருத் துரையாற்றினர். ஒன்றிய கழக அமைப்பாளர் வெ.செல்வம் நன்றி கூறினார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

இரங்கல் தீர்மானம் 1: நீட் நுழைவு தேர்வை எதிர்த்து தன் உயிரை மாய்த்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா மறைவிற்கு காவேரிப்பட் டணம் ஒன்றிய கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தையும் தெரிவித்து இரண்டு மணித்துளிகள் அமைதி யான முறையில் மரியாதை செலுத்தப்பட்டது.

தீர்மானம் 2: அறிவுலக பேராசான் உலக மனித நேய மாண்பாளர் பகுத்தறிவு பகல வன் தந்தை பெரியார் 139ஆவது ஆண்டு செப்டம்பர் 17 அன்று காவேரிப்பட்டணம் ஒன்றியம் முழுவதும் கிளை கழகம் தோறும் தந்தை பெரியார் படம் அலங்கரித்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அய்யா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3: காவேரிப் பட்டணத்தில் அறிவுலக பேராசான் உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்திலிருந்து பெரியார் சிலை வரை பெரியார் பட ஊர்வலமாக சென்று அய்யா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொள்கை பிரச்சார எழுச்சி, தமிழர் இனமான மீட்பு, திரா விடர் பெருவிழாவாக கொண் டாடுவது என தீர்மானிக்கப் படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner