எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடந்தை, செப்.26 குடந்தை 16.09.2017 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் தந்தை பெரியார் 139-வது பிறந்தநாள் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப் பட்டது. குடந்தை நீதிமன்ற வழக்குரை ஞர்கள் சார்பாக ஏற்பாடு செய்யப் பட்டது. விழாவில் நீதிபதிகள், வழக்கு ரைஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள், வழக்குரைஞர் எழுத்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு வழக்குரைஞர் இர. கு.நிம்மதி தலைமையேற்றார். வழக்கு ரைஞர் பீ.இரமேசு வரவேற்புரையாற்றி னார். வழக்குரைஞர்கள் சார்பாக குடந் தை வழக்குரைஞர்கள் சங்க தலைவர் மா.இராஜசேகர் உரையாற்றினார்.

நீதிபதிகள் சார்பாக குடந்தை கூடுதல் மாவட்ட நீதிபதி மதிப்பிற்குரிய செம் மல் தந்தைபெரியாரின் சமூகநீதி கருத் துக்கள் பற்றி உரையாற்றினார். நிறைவாக குடந்தை வழக்குரைஞர்கள் சங்க மேனாள் தலைவர் சங்கர் நன்றி கூறினார்.  நிகழ்ச்சியில் மதிப்பிற்குரிய குடந்தை சார்பு நீதிபதி அய்யப்பன் பிள்ளை, கூடுதல் சார்பு நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், மாவட்ட உரிமையியல் நீதிபதி வசந்தில்குமார், மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிபதி இரவிச் சந்திரன், மாவட்ட கூடுதல் உரிமையியல், குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணபவன், குற்றவியல் நீதித்துறை நடுவர் செல்வபாண்டி ஆகியோர் கலந்து கொண்டு தந்தைவபரியார் படத்திற்கு மலர்துவி சிறப்பு செய்தனர்.

நிகழ்ச்சியல் மூத்த வழக்கறிஞர்கள் சக்ரபாணி, கலியபெருமாள், நெடுஞ்செழியன், முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வாசுதேவன், செயலாளர் ஆ.இளங்கோவன், சந்திரமோகன், சுந்தர், கார்த்தி, கர்ணன், சுமன், ராபர்ட், காஸ்ப்ரோ, கு.நா.செல்வக்குமார், இரா.அழகிய மணாளன் மற்றும் திரளான வழக்குரைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நீதிமன்ற உணவு இடை வேளையில் குடந்தை மாவட்ட கழகத் தலைவர் கு.கவுதமன், பெரியார் பெருந் தொண்டர் வை.இளங்கோவன், விடு தலை வாசகர் வட்ட செயலாளர் க.குரு சாமி, ஒன்றிய தி.க, துணை தலைவர் ஆ.தமிழ்மணி, சோழபுரம் மதியழகன், திருவிடைமருதுர் ஒன்றிய தலைவர் மு.ந.கணேசன், சன்னா புரம் வழக் குரைஞர் சு.விஜயகுமார், வழக்குரைஞர் சா. சக்திவேல் மற்றும் திரளான அரசு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு தந்தை பெரியார் படத்திற்கு மலர்த்துவி சிறப்பு செய்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner