எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, செப்.27 24.9.2017 ஞாயிறு அன்று பெங்களூர், சிறீராமபுரம் சிறு மலர்   உயர் நிலைப் பள்ளியில் தந்தை பெரியார் நினைவு  அறக்கட் டளை சார்பில் பெரியார் 139 ஆவது பிறந்தநாள் விழா நடை பெற்றது.

கருநாடக மாநில திராவிடர் கழகத் தலைவர் மு. சானகி ராமன், துணைத் தலைவர் வீ.மு.வேலு, க. வேலு ஆகி யோரின் முன்னிலையிலும் திரு வள்ளுவர் மன்ற தலைவர் ப. இளவழகன் தலைமையிலும் நடைபெற்றது.   திருவள்ளுவர் சங்க செயலாளர் பேராசிரியர், ம.சி.மணி குறள் வாழ்த்து பாடினார். எம்.ஆர்.பழனி வர வேற்புரையாற்றினார்.

மு.சானகிராமன், செயலாளர்  இரா.முல்லைக்கோ துணை தலைவர் வீ.மு.வேலு, க. வேலு ஆகியோர் கருத்துரை வழங்கி னார்கள்.  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் , ஆ. வந்தியத்தேவன் தந்தை பெரியார் அவர்களின் படத்தை திறந்து வைத்து ‘பெரி யாரை துணைக் கொள்’என்ற தலைப்பில் பெரியாரின் மனித நேயம் பற்றியும் தன் கொள் கைக்கு மாறுபட்ட கருத்து   உடையவர்களாக இருந்தாலும் அவர்களிடம் எவ்வாறு நடந்து கொண்டார் என்றும் தற்போது பார்ப்பனர் மனதிலும் பெரி யாரின் கருத்துக்கள் பதிந்து விட்டது  என்றும் பேருரை  ஆற்றினார்.    திருவள்ளுவர் சங்க தலைவர், பேராசிரியர் ம.சி.மணி நன்றி கூறினார்.

நிகழ்ச்சி முடிவில் க.வேலு சார்பில் சிறு விருந்து  அளிக்கப் பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner