எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடலூர், செப். 27- கடலூர் மாவட்ட திராவிடர் கழக செயல் வீரர்கள் கூட்டம் 11.9.2017 மாலை 6 மணியளவில் கடலூர் துரை விடுதி கருத்தரங்க அறையில் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமையில், பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் முன்னிலை யில் நடந்தது.

தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா பற்றியும், அக்டோபரில் கடலூரில் நடை பெற உள்ள பொதுக்குழு மற் றும் பொதுக்கூட்டம் சிறப்புற நடத்துவது பற்றியும் விவாதிக் கப்பட்டது. மண்டல செயலா ளர் சொ.தண்டபாணி கடவுள் மறுப்பு கூறி வரவேற்புரை யாற்றினார். தொடர்ந்து வட லூர் கழக தலைவர் புலவர் சு.ராவணன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் இரா.குண சேகரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் முனியம்மமாள், குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் செ.வேல்முருகன், கடலூர் ஒன்றிய தலைவர் கோ.குப்பு சாமி, கடலூர் நகர செயலாளர் இரா.சின்னதுரை, மருவாய் கழக தலைவர் எ.திருநாவுக் கரசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் ராம நாதன், மணக்குப்பம் தர்மன், சுந்தர், குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக தலைவர் கோ.இந்திரசித், சிதம்பரம் நகர பொறுப்பாளர், செல்வரத்தினம், மாவட்ட செயலாளர் நா.தாமோதரன், மாவட்ட தலைவர் தென்.சிவக்குமார், மண்டல தலைவர் அரங்க.பன்னீர்செல்வம் ஆகி யோர் உரையாற்றினர்.

நன்கொடை

கடலூரில் கழக பொதுக்குழு மற்றும் பொதுக்கூட்டம் சிறப் புற நடைபெற கீழ்க்கண்ட தோழர்கள் நன்கொடை அறிவித்தனர்.

தென்.சிவக்குமார் ரூ. 25000, அரங்க.பன்னீர்செல்வம் ரூ. 10000, நா.தாமோதரன் ரூ. 10000, புலவர் ராவணன் ரூ. 5000, மாதவன் ரூ. 5000, தர்மன் பொறுப்பில் ரூ. 15000, துரை. சந்திரசேகரன் ரூ. 10000, மற்ற வர்கள் பின்னர் அளிப்பதாக தெரிவித்தனர்.

கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் வழி காட்டுதல் உரை வழங்கினர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழாவினை மாவட்டம் முழுவதும் சீரும் சிறப்புமாகக் கொண்டாடுவது எனவும், மரக்கன்றுகள் நடுதல், பள்ளி மாணவர்களுக்கு இனிப் பும், எழுது பொருளும் வழங் கியும், பொதுமக்களுக்கு துண் டறிக்கையும் இனிப்பும் வழங் கியும் கொண்டாடுவது என வும், தெருதோறும் பெரியார் படங்கள் மக்கள் பார்வைக்கு வைத்து அய்யா சிலைகளுக்கு மாலை அணிவித்து மக்கள் விழாவாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது.

2) தந்தை பெரியார் பட ஊர்வலம் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி ஆகிய ஊர்களில் நடத்துவது என முடிவாற்றப்பட்டது.

3) கழகத் தலைவரின் வழி காட்டுதலுக்கு இணங்க கடலூ ரில் கழக பொதுக்குழு மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் அக்டோபரில் நடத்துவது எனவும், கடலூரில் பொதுக் குழு நடைபெற வாய்ப்பளித் திட்ட தமிழர் தலைவருக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

முடிவில் மண்டல இளை ஞரணி செயலாளர் திராவிடன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner