எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காஞ்சி, அக். 1- பாடப் புத்தகங் களைத் தாண்டி மற்ற புத்தகங் களைக் கற்கும் வாய்ப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காட்டாங்குளத்தூர் அரசு உயர் நிலைப்பள்ளிக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.

2013ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட சென்னை புத்தகச் சங்கமம் மக்கள் தாங்கள் பயன்படுத்திய புத்தகங்களை நன்கொடையாக அளிப்பவர்களுக்கு புத்தகக் கொடைஞர் என்ற விருதும் பாராட்டுப் பத்திரமும் அளிக்கப் படும் என்றொரு அறிவிப்பு செய் திருந்தது. அதன் படி பெறப்பட்ட ஏராளமான புத்தகங்கள் கிராமங் களில் உள்ள நூலங்களுக்கு அளிக் கப்பட்டும் வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த சனவரி மாதம் உலக புத்தக நாளை முன் னிட்டு 2017 சனவரியில் சென்னை பெரியார் திடலில்  நடைபெற்ற சென்னை புத்தகச் சங்கமம் நிகழ்ச் சியில் தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்கள் புழல் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்கு செந்துறை இராசேந்திரன் மூலமாக புத்தகங் களை அன்பளிப்பாக அளித்தார். அதன் பிறகும் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்தது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 8.-9.-2017 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள காட்டாங் குளத்தூர் அரசு உயர் நிலைப் பள்ளிக்கு 20,000 மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டது. சென்னை புத்தகச் சங்கமத்தின் சார்பில் பொம்மலாட்டக் கலை ஞர் கலைவாணன்  அவர்கள் புத் தகங்களை வழங்க பள்ளியின் தலைமையாசிரியர் லதா பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் சென்னை புத் தகச் சங்கமத்தின் ஒருங்கிணைப் பாளர்களில் ஒருவரான பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் களம் தலைவர் இறைவி, காட் டாங்குளத்தூர் 17 ஆவது வார்டு மேனாள் நகரமன்ற உறுப்பினர் கோகுலகிருஷ்ணன், பள்ளிக் கல் விக் குழு உறுப்பினர் குமார், பெற் றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் கோகுல் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண் டனர். கவுரா பதிப்பகத்தின் உரி மையாளர் இராசசேகரன் அவர்க ளின் அம்மாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி மதிப்புள்ள புத்தகங்களை தமி ழகமெங்கும் உள்ள அரசு பள்ளி களுக்கு உரியவர்கள் மூலமாக கொடுக்க வேண்டும் என்று திட்ட மிட்டிருந்தார். அதன்படி சென்னை புத்தக சங் கமம் பொறுப்பாளர்க ளிடமும் புத்தகங்களை ஒப்ப டைத்திருந்தார்.

அதன்படி தொடர்ந்து அளிக்கப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner