எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

குடியாத்தம், அக்.1  26.09.2017 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்கு குடியாத்தம் திருவள் ளுவர் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில், குடியாத்தம் மக்கள் மய்யம் ஏற்பாடு செய்த புத்தக திருவிழாவில் மணியம்மையார் சிந்தனைக்களம், மகளிர்பாசறை மற்றும் மகளிரணி சார்பில் மகளிரே பங்கேற்ற பேச்சரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ந.தேன் மொழி தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி தலைவர் ச.ஈஸ்வரி வரவேற்புரை ஆற்றி னார். குடியாத்தம் நகர மகளிர் பாசறை தலைவர் சி.லதா, மகளிர் பாசறை ச.இரம்யா, உஷாநந்தினி, இன்னர்வீல் விஜயலட்சுமி ராம மூர்த்தி ஆகியோர் முன் னிலை வகித்தனர். வேலூர் மண் டல தலைவர் வி.சடகோபன், மாவட்ட தலைவர் வி.இ.சிவக் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்க விழா தொடங்கியது.

“தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்புவோம்.” என்ற பாரதிதாசன் பாடலுக்கு கிருத் திகா, சனாசிறீ நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர். “அச்சமில்லை அச்சமில்லை”  என்ற பாடலுக்கு நடனம் ஆடி அரங்கை மகிழ்வித்தனர்.  மோகன பிரியங்காவும், வைஷ்ண வியும். பெண்களின் எழுத்தும் ஆளு மையும்” என்ற தலைப்பில் வசந்தி லட்சுபதி அவர்கள் உரை யாற்றினார். தன்உரையில் பெண் களில் எழுத்துத்துறையில் சிறந்து விளங்கிய எழுத்தாளர்கள் பற்றி யும் அவர்களில் உரிமை மறுக் கப்பட்ட பின்பும் எழுத்துத் துறையில் சிறந்து விளங்கிய ஹாரிப்பாட்டர் அவர்களைப் பற்றி குறிப்பிட்டுப் பேசினார்.

“பெண்களும் சமூக நீதியும்” என்ற தலைப்பில் வேலூர் மாவட்ட மகளிர்பாசறை அமைப் பாளர் தி.அனிதாதாரணி   உரை யாற்றினார், தன் உரையில் பெண் களுக்கு மறுக்கப்படும் சமூகநீதி குறித்து கவிதை மூலமாகவும் நகைச்சுவையாகவும் கூறினார்.

“பெண்களும் முற்போக்கு சிந்தனைகளும்” என்ற தலைப் பில் வேலூர் மாவட்ட இளை ஞரணி ஓவியா அன்புமொழி  பேசும் போது, பெண்களின் முற்போக்குத்தனம் ஊடகங்கள் மூலம் எவ்வாறு மழுங்கடிக்கப் படுகிறது என்றும் போலி சாமி யார்களின் ஆட்டம் அதிகரித்து வர பெண்களின் பிற்போக்குத்த னம் காரணமாக இருக்கிறது என் றும் தன் பேச்சில் குறிப்பிட்டார்.

குடியாத்தம் அருவி நிதிநிறுவனம் சார்பில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 25 பிள்ளை களுக்கும் ரூ.50 மதிப்புள்ள கூப்பன் கொடுக்கப்பட்டு அந்த பிள்ளைகள் அங்கிருந்த புத்தக நிலையத்தில் புத்தகம் தாங்களே தேர்ந்தெடுத்து வாங்கும்படி ஏற்பாடு செய்தனர்.

மக்கள் மன்றம் குழுசார்பில் கவிஞர் சகுவரதன் நன்றி கூற விழா நிறைவுற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner