எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பலே, பலே!

ஜப்பானில் பெரியார் - அம்பேத்கர்

வாசகர் வட்டம் தொடக்கம்!

கவாசகி, அக்.2 டோக்கியோ அருகில் இருப்பது கனகவா மாவட்டம். இங்குள்ள கவாசகி நகரத்தில், அர்பன்வியூ அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பை எழுத்தாளர் வே.மதிமாறன் இணைய வழியில் உரையாற்றி தொடங்கி வைத்தார். மேலும் பங்கேற் பாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். தொடர்ந்து வி.சி.வில்வம் வாழ்த்துரை வழங்கினார்.

ஜப்பான் வாழ் தமிழக இளைஞர்கள் முழுமதி அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அமைப்பு வைத்துள்ளனர். அந்த அமைப்பின் மூலம் அரசு பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் உதவிகள் செய்து வருகின்றனர். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை மற்றும் நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை ஆகிய பகுதிகளில் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்துத் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

இதுதவிர ஜப்பான் வாழ் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பேச, எழுதக் கற்றுக் கொடுப்பதும், திருக்குறள் வகுப்புகள் நடத்துவதும், மாணவர்களுக்குப் பறைப் பயிற்சிகள் வழங்கியும் பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றி வருகின்றனர்.

மேலும் தமிழர் திருநாள் பொங்கல் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டின் நீட்டுக்கு எதிரான தமது கண்டனத்தைப் பல்வேறு வழிகளில் இவர்கள் பதிவு செய்துள்ளனர்.

அந்த வகையில் இந்த இளைஞர்களால் பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  நிகழ்ச்சியில் தமிழக மக்கள் தவிர்த்து மகாராட்டிரா உள்ளிட்ட வட  மாநில இளைஞர்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner