எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, அக்.2 சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் மன்றத்தில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் 2,261ஆம் நிகழ்வாக 37 ஆம் ஆண்டு கலை விழாவில் தந்தைபெரியார் 139ஆவது பிறந்த நாள், அறிஞர் அண்ணாவின் 109ஆவது பிறந்த நாள், 37ஆம் ஆண்டு கலை விழா பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர்   மயிலை நா.கிருஷ்ணன் தலைமையில் 29.9.2017 அன்று மாலை நடைபெற்றது.

பெரியார் நூலக வாசகர் வட்ட பொருளாளர் ச.சேரன் வரவேற்றார். விழா ஏற்பாட்டினை செயலாளர் சத்தியநாராயண் உள்பட பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். துணை செயலாளர் பா.மணியம்மை இணைப்புரை வழங்கினார்.

விழாவில் கழகத் துணைத் தலைவர் பெரியார் பேருரை யாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார். தந்தை பெரியார், அண்ணா படத்தை எழும்பூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் வழக்குரைஞர் கே.எஸ்.இரவிச்சந்திரன் திறந்து வைத்து உரையாற்றினார்.

பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்ய நூலகர் கோவிந்தன், பெரியார் களஞ்சியம் தொகுப்பு நூல்கள் பணியாற்றிய மதியழகன், வை.கலையரசன்,  பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் முன்னாள் நிர்வாகி கு.தென்னவன், முன்னாள் நிர்வாகிகளின் குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்   பயனாடை அணிவித்து பாராட்டினார். மறைந்த மாணிக்க சண்முகம் மகன் குமணன், சூளை நடேசன் வாழ்விணையர் நல்லம்மாள், சுப்பிரமணியம் வாழ்விணையர் பவளக்கொடி, மனோகரன் மகள் அமுதராணி ஆகியோர் பாராட்டப்பெற்றனர்.

பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் ஆண்டு தோறும் நடைபெறுகின்ற விழாவில் அறிவியல் ஆய்வாளர்கள் அடையாளம் கண்டு பாராட்டப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சுற்று சூழல் ஆய்வாளர் பேராசிரியர் டாக்டர் முருகவேள் அவர்களைப் பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கினார். பெரியார் நூலக வாசகர் வட்ட புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அனைவரையும் பாராட்டி பயனாடை அணிவித்து, இயக்க வெளியீடுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர்

எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து, இயக்க வெளியீடுகளை வழங்கி சிறப்பு செய்தார்.

பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு  பயனாடை அணிவித்து, புத்தகங்களை  வழங்கினார். எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன், அம்புஜம் அம்மாள்  ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து மகிழ்ந்தார்கள்.

முதல் நாளில் இயல் விழாவாகவும், முதல் நாள் விழா பெரியார் நூலக வாசகர் வட்டக் குடும்ப விழாவாகவும் சிறப்புற நடைபெற்றது. விழா முடிவில் தென்.மாறன் நன்றி கூறினார். இரண்டாம் நாள் நாடக விழாவில் ‘பெரியார்' திரைப்படம் திரையிடப்பட்டது. பெரியார் நூலக வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner