எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஓசூர், அக். 3- தந்தை பெரியார் 139வது பிறந்த நாள் அறிஞர் அண்ணா அவர்களின் 109ஆவது பிறந்த நாளையொட்டி ஓசூர் அசோக் லைலான்ட் யூனிட் 2இல் தொ.மு.ச. மற்றும் அமைப்பு சாரா மற்றும் கட் டுமான திராவிடர் தொழிலாளர் சங்கம் இணைந்து திராவிடர் இயக்க தலைவர்களுக்கு பிறந்த நாள் விழா நடத்தியது.

இந்நிகழ்ச்சிக்கு அசோக் லைலேன்ட் தொழிலாளர் ச. ராஜாராம் தலைமையில் கட்டு மான திராவிடர் தொழிலாளர் சங்கம் சு.வனவேந்தன், திமுக தலைமை கழக பேச்சாளர் அப்துல்ரகுமான் பாரி, மு.ச. பாலமுருகன், எஸ்.சரவணன், கு.ராமையா, கோ.வேலு, சேகர், முருகன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஓசூர் திமுக நகர செயலாளர் என். எஸ்.மாதேஸ்வரன் தொடக்கவு ரையாற்றினர். திராவிடர் கழக தலைமை கழக சொற்பொழி வாளர் அண்ணா சரவணன் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் கிருட்டிண கிரி மாவட்ட தலைவர் மு.துக் காராம், மாவட்ட அமைப்பா ளர் ப.முனுசாமி, ஓசூர் நகர தலைவர் சி.மணி, திமுக தலைமை செயற்குழு உறுப்பி னர் சுகுமார், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் திமுக விவசாய அணியின் பொறுப்பா ளர் பி.வெங்கடசாமி மற்றும் தொ.மு.ச. சங்க நிர்வாகிகள் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அனை வருக்கும் பெரியார் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

இறுதியாக சரவணன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner