எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தருமபுரி, அக்.5 தருமபுரி மண்டல அளவிலான திராவிடர் கழக மகளிரணி - மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் 26.09.2017 செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் கிருட்டினகிரி புதுப்பேட்டை வெல்கம் மகாலில் நடைபெற்றது.

தந்தைபெரியாரின் புரட்சி நூல் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ தீவிர பரப்புரை கிருட்டினகிரியில் தொடங் கியது.

தருமபுரி மண்டல அளவிலான மகளி ரணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத்திற்கு கிருட்டினகிரி மாவட்ட மகளிரணி தலைவர் செல்விசெல்வம் தலைமை வகித்து பேசினார்.

கிருட்டினகிரி மாவட்ட மகளிரணி செயலாளர் ம.லதாமணி அனைவரையும் வரவேற்றார்.

திருப்பத்தூர் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் மு.இந்திராகாந்தி, தருமபுரி மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.சாந்தி, சமூக காப்பணி மகளிர் இயக்குநர் வெ.அழகுமணி, திருப்பத்தூர் மாவட்ட மகளிரணிச் செய லாளர் இ.வெண்ணிலா, மத்தூர் ஒன்றிய மகளிரணி மு.சவுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

திராவிடர் கழக மகளிர் பாசறை மாநில செயலாளர் கோ.செந்தமிழ்செல்வி, மகளிரணி, மகளிர் பாசறை செயல் பாடுகள் குறித்து பல்வேறு கருத்துகளை எடுத்துக்கூறி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதல்படி சிறப்பாக செயல்படுவதை விளக்கி சிறப்புரையாற்றி னார்.

பகுத்தறிவாளர் கழக மாநில செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து மகளிரணி செயல்பட வேண்டிய முறைப்பற்றி பல்வேறு கருத்துகளை எடுத்துக்கூறியும், மகளிரணி தோழர்களும் தந்தைபெரியார் கூறிய புரட்சிப் பெண்களாக தமிழர் தலைவர் ஆசியுடன் அவர்கள் தலை மையில் செயல்படுவோம் என்று கூறினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக திரா விடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் தருமபுரி ஊமை செயராமன், தருமபுரி மண்டலத் தலைவர் பழ.வெங்கடாசலம், கிருட்டினகிரி மாவட்டத் தலைவர் மு.துக்காராம், தருமபுரி மண்டலச் செய லாளர் கரு.பாலன், கிருட்டினகிரி மாவட்டச் செயலாளர் கோ.திராவிடமணி, மாவட்ட துணைச் செயலளார் அ.செ.செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப் பாளர்களாக கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார்.

கூட்டத்தில் எம்.காசியம்மாள், செ.வாகினி, பீ.அருணா, ப.புஷ்பா, சி.முரும்மாள், மா.மங்களதேவி, பி.சுதா, நா.கலைபாரதி, மாவட்ட துணைத் தலைவர் தா.சுப்பிரமணியம், மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.புகழேந்தி, ஓசூர் நகரத் தலைவர் சி.மணி, கிருட் டினகிரி நகரச் செயலாளர் கா.மாணிக்கம், காவேரிப்பட்டணம் ஒன்றியச் செயலாளர் சிவ.மனோகர், ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அகரம், நாத்திகம் நா.சதீஷ்குமார், கி.குஷ்ணகிரி, கோ.தங்க ராசன், ச.நாகராஜ் உள்பட மகளிரணி, மகளிர் பாசறை திராவிடர் கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும், கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

கூட்டத்தின் தொடக்கத்தில் பெரியார் பிஞ்சு நா.சிந்துமதி, கடவுள் மறுப்பு கூறி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

ஓசூர் நகரத் தலைவர் சி.மணி அவர் களின் மகள் பெரியார் பிஞ்சு ம.நன்மதி, தந்தை பெரியாரைப் பற்றிய கவிதையை கூறி அனைவரின் பாராட்டுதலையும் பெற்றார்.

பெண் ஏன் அடிமையானாள்? என்ற நூலை இல்லதோறும் சேர்க்க வேண்டும் என்பதை மாநில திராவிடர் கழகச் செயலாளர் தருமபுரி ஊமை செயராமன் 15 புத்தகங்களை பெற்றுக் கொண்டு புத்தக பரப்புரையை தொடங்கி வைத் தார்.

கழகப் பொறுப்பாளர்களும், தோழர் களும் கூட்டத்தில் 45 புத்தகங்களை பெற்றுக் கொண்டு மாநில மகளிர் பாசறை செயலாளர் கோ.செந்தமிழ்ச் செல்வி அவர்களிடம் அதற்கான தொகை ரூ.1800அய் வழங்கினர். மேலும் ஒரு மாவட்டத்திற்கு தலா 85 என்று வழங் கப்பட்டுள்ளது. கிருட்டினகிரி மாவட்ட மகளிர் பொறுப்பாளர்கள்,  தருமபுரி மாவட்ட மகளிரணி பொறுப்பாளர்கள் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி பொறுப்பாளர்களிடம் தலா 85 புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இறுதியாக காவேரிப்பட்டணம் மகளிரணி தோழியர் ம.புஷ்பா நன்றி கூறினார்.

கூட்த்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள்:

1. ‘நீட்’ தேர்வை எதிர்த்து தன் உயிரை மாய்த்துக் கொண்ட இலட்சியத்திற்காக உயிரையே துறந்த அரியலூர் மாணவி அனிதாவுக்கு வீரவணக்கம் தெரிவித்து இரண்டு மணித்துளிகள் மவுனம் காக்கப் பட்டது.

2. திருச்சியில் எழுச்சியோடு நடை பெற்ற பெண்ணுரிமை பாதுகாப்பு மாநில மாநாட்டினை சிறப்பாக நடை பெற முழு ஒத்துழைப்பை வழங்கி தருமபுரி மண்டல தோழர்கள் அனை வருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டு தலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

3. திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை அமைப்பினை வலுப்படுத்தும் விதமாய் தோழர்களை அதிகப்படுத்துவது மற்றும் அமைப்பு பணிகளை மேலும் உருவாக்கி சிறப்பாக செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது.

4. தந்தை பெரியாரின் கொள்கை வாரிசு (சுயமரியாதை நாள் டிச.2இல்) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளை கொள்கை பிரச்சார விழா வாக திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழக, பகுத்தறிவு ஆசிரியரணி, மகளிரணி, மகளிர் பாசறை இணைந்து குருதிகொடை முகாம், துண்டறிக்கை வழங்குதல், மரக்கன்று நடுதல் என சிறப்பாக தமிழர் தலைவர் பிறந்தநாளை கொண்டாடுவது என்றும் தீர்மானிக்கப் பட்டது.

5. திருச்சியில் கடந்த மே மாதம் 27ஆம் தேதி எழுச்சியோடு நடைபெற்ற பெண்ணுரிமை பாதுகாப்பு மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களால் அறிவிக் கப்பட்ட பெண் ஏன் அடிமையானாள்? என்னும் நூலினை திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் இல்லம்தோறும் கொண்டு செல்வது என தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் நிறைவாக திருப்பத்தூர் மாவட்ட மகளிரணித் தலைவர் ம.கவிதா சார்பில் மாவட்ட மகளிரணி பொறுப் பாளர்கள், மாநில மகளிர் பாசறை செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்விக்கு பயனாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கினர்.

மண்டல தலைவருக்கு பாராட்டு

தருமபுரி மண்டல திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரை யாடல் கூட்டம் வெகு சிறப்பாக குறுகிய நாளில் அனைத்து மகளிரணி பொறுப் பாளர்களுடனும் தொடர்பு கொண்டு சிறப்பாக ஏற்பாடு செய்த தருமபுரி மண்டல திராவிடர் கழகத் தலைவர் பழ.வெங்கடாசலம் அவர்களுக்கு, திரா விடர் கழக மகளிர் பாசறை மாநில செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி பாராட்டுதலையும் நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner