எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, அக்.7 பகுத்தறிவு பகலவன் பிறந்த நாளான கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதியன்று தரணி எங்கும் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

அதன் விவரம் வருமாறு:

பொத்தனூர்

பொத்தனூரில் காலை 9 மணிக்கு நான்கு சாலையிலும், கொடிக்கம்ப வளாகத்திலும், தந்தை பெரியார் சிலை முன்புறமும் கழகக்கொடியேற்றப்பட்டது. தோழர் அன்பு மணி கடை முன்புறம் ஒலிபெருக்கி வைத்து கழகப் பாடல்களும் தலைவர்களின் பேச்சுக்களும் ஒலிபரப்பப் பட்டன.

காலை 9.30 மணிக்கு தந்தை பெரியார் சிலைக்கு விடுதலை வாசகர் வட்டச் செயலாளரும் நூங்கள் இலக்கியக் கழக தலைவருமான ஏ.பி.காமராஜ், வழக்குரைஞர் இளங்கோ கழக இளைஞர் அணி சந்திரசேகரன் அவரது 2 மகன்கள் பெரியார் பிஞ்சுகள், தோழர் அன்புமனி, பொத்தனூர் திமுக க.ச.செங்குட்டுவன், தினேஷ், சுரேஷ், சுரேந்திரன்,தலைவர் கே.எஸ்.அசைன், செயலாளர் சுரேஷ், பரமத்தி ஒன்றியச் செயலாளர் தோழர் செங்கோடன், மதிமுக வீரமணி, செல்லையன், சின்னசாமி மற்றும் தோழர்கள் புடைசூழ பெரியார் அறக்கட்டளைத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களும், தோழர்களுடன் கலந்து கொண்ட மதிமுக செயலாளர் இளங்கோ அவர்களும் மாலை அணிவித்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

திமிரி

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 139ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திமிரி நகர திராவிடர் கழகத்தின் சார்பாக 17.9.2017 அன்று மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றோர்: தமிழக இலக்கிய பேரவை தலைவர் இரா.கருணாநிதி, வேலூர் மா.துணை தலைவர் உ.ச.குருநாதன், நகர கழக தலைவர் ஜெ.பெருமாள், வி.சி.க செயலாளர் ஆர்.நாகராஜன் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

ராமியம்பட்டி

17.9.2017 அன்று காலை 8 மணியளவில் தந்தை பெரியார் சிலைக்கு ராமியம்பட்டி முன்னாள் ஒன்றிய தலைவர் வே.சாமிக்கண்ணு தலைமையில் குருபரஹள்ளி கழக தோழர் ராமியம்பட்டி நாகராசன், திமுக பாலசமுத்திரம் அன்பழகன், ஜடையன் இவர்கள் முன்னிலையில் குருபரஹள்ளி கழகத் தோழர் தனசேகரன் மாலை அணிவித்தார். கலந்துகொண்ட இருபதுக்கும் மேற்பட்ட தோழர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

செங்கற்பட்டு

செங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக 17.9.2017 அன்று காலை 9 மணியளவில் செங்கற்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 139ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மாவட்ட தலைவர் அ.கோ.கோபால்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர் செங்கை பூ.சுந்தரம்  மாலை அணிவித்தார். இக்கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் இரா.கோவிந்தசாமி, க.தனசேகரன், நகர தலைவர் நா.நாகப்பன், மாவட்ட அமைப்பாளர் பொன்.இராசேந்திரன், ம.நரசிம்மன், அ.பா.கருணாகரன், மாவட்ட இளைஞரணி தலைவர் ம.கருணாநிதி, ம.மனோகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செங்கற்பட்டு ரயில் நிலையத்தில் அமைந்துள்ள பெரியார் படத்திற்கு மாலை பொ.இராசேந்திரன் அணிவித்தார். மாவட்ட மய்ய நூலகத்தில் ம.கருணாநிதி மாலை அணிவித்தார். ஆட்டோ இராஜா உடனிருந்தார்.

மிட்டப்பள்ளி

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட் டத்துடன் இணைந்து அம்பேத்கார் பெரியார் கலை இலக்கிய மன்றம் மற்றும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் இணைந்து தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மிட்டப்பள்ளியில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மிட்டப்பள்ளி அறிஞர் அண்ணா சிலையிலிருந்து பறை இசை முழங்க ஏராளமான இளைஞர்கள் தந்தை பெரியார் வாழ்க என்று ஒலிமுழக்கமிட்டு பேருந்து நிலை யத்தில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் படங்களுக்கு மாலை அணிவித்து ஊர்வலம் அரசு தொடக்கப்பள்ளியில் நிறைவடைந்தது

அரசு துவக்கப்பள்ளியின் கூட்ட அரங்கில் தந்தை பெரியார் பிறந்த நாள் கருத்தரங்கம் துவக்கியது.இக் கருத்தரங்கிற்கு ஏலகிரி தென்போஸ்கோ கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர்.குமார் தலைமை தாங்கினார், ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் துணை செயலர் சித வீரமணி, ஆசிரியர் சுகந்தர், சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆசிரியர் ராஜீவ் காந்தி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட் டத்தின் செயலர் பழ. பிரபு அனைவருக்கும் தந்தை பெரியார் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி தொடக்க உரையை நிகழ்த்தினர் விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் தணிகை

ஜி.கருணாநிதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பொன் செல்வக்குமார் அவர்கள் பெரியாரும் சமூக மாற்றமும் என்கிற தலைப்பில் தந்தை பெரியார் அவர்களின் பண்பு நலன்களை விவரித்து அவரால் ஏற்படுத்தப்பட்ட சமூக மாற்றங்களை பட்டியலிட்டு மிக அருமையான உரை நிகழ்த்தினார் வருகை தந்த அனைவருக்கும் பெரியார் சுய மரியாதை பிரச்சார நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன நிறைவாக திருமால் நன்றி கூறினார். இனி வரும் காலங்களில் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்துடன் இணைந்து அம்பேத்கார் பெரியார் கலை இலக்கிய மன்றம் செயல்படும் என்று உறுதி அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் அண்ணா அப்பாசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செ.சிவராஜ், ஊற்றங்கரை நகர தலைவர் இர.வேங்கடம், நகர செயலர் த.சந்திரசேகரன், விடுதலை வாசகர் வட்ட துணைத்தலைவர், வழக்குரைஞர் ஜெயசீலன், மேனாள் ஒன்றிய பொறுப்பாளர் பொன்முடி, ஒய்வு பெற்ற அலுவலர் சங்கப் பொருளர் வே.முருகேசன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் உலகநாதன், உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner