எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

கோபி, அக். 8- மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம் 30.9.2017 அன்று மாலை 5 மணி அளவில் கோபி மின்நகர் நகராட்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் கே.எம்.கருப் பணசாமி தலைமையில் பொருளாளர் வி.சிவக்குமார், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் அ.குப்பு சாமி முன்னிலை வகித்தனர். பகுத்தறி வாளர் கழக மாநில பொதுச் செயலாளர் மா.அழகிரிசாமி அவர்களும், பகுத்த றிவு மாநில ஆசிரியர் அணி அமைப் பாளர் சி.ரமேஷ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்ட செயலாளர் வெ.குணசேகரன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கோ.ப.வெங்கிடு, முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் வி.பி. சண்முகசுந்தரம், கோபி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.சீனி வாசன், இராசமாணிக்கம், சிவக்குமார், கவுரிசங்கர், வழக்குரைஞர் சென்னியப் பன், அருண்,  சோமசுந்தரம், வெற்றி வேல், சரவணன், கோமதி மற்றும் இரு பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன:

தீர்மானம்: 1

இரங்கல் தீர்மானம்

சமூகநீதிக்குச் சவக்குழி தோண்டி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மருத்துவ கனவை தகர்க்கும் "நீட்" நுழைவு தேர்வினால் பாதிக்கப்பட்டு மனமுடைந்து உயிர்நீத்த மாணவி அரி யலூர் அனிதா அவர்களுக்கும், இந்து வெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கருநாடக பகுத்தறிவு எழுத்தாளர் கவுரி லங்கேஷ் அவர்களுக்கும் இக்கூட்டம் ஆழ்ந்த இரங்களையும், வீர வணக் கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2: மூட நம்பிக்கை ஒழிப் புச் சட்டத்தினை கருநாடகத்தில் நிறை வேற்றிய மாநில அரசையும், அம்மாநில முதல்வர் சித்தராமையா அவர்களையும் இக்கூட்டம் பாராட்டுவதோடு அதே போன்ற மூட நம்பிக்கை சட்டத்தை தமிழக அரசும் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3: தந்தை பெரியாரின் 139ஆ-வது பிறந்த நாளினை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச் சுப் போட்டிகளை நடத்துவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 4: பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசியரணிக்கு அதிக உறுப் பினர்களை சேர்ப்பது எனவும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கலந்துரையாடல் கூட்டங்களையும், நீட், புதிய கல்விக் கொள்கை, நவோதயா கல்வியின் ஆபத் துக்களை விளக்கிடும் வகையில் ஒரு நாள் கருத்தரங்கம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 5: டிசம்பர் 2இல் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாளினை முன்னிட்டு ஈரோட்டில் நடைபெறும் 15 ஆயிரம் விடுதலை சந்தாக்கள் வழங் கும் விழாவிற்கு பகுத்தறிவாளர் கழ கம், பகுத்தறிவு ஆசிரியர் அணியின் சார்பில் 50 விடுதலை சந்தாக்கள் வழங் குவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 6: வரும் ஜனவரி 2018, 5, 6, 7இல் திருச்சியில் நடைபெறும் உலக நாத்திகர் மாநாட்டிற்கு ஏராளமான தோழர்களைப் பங்கேற்க செய்வது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner