எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கா.பெரியார்செல்வன் - ப.கிருத்திகா இணையேற்பு விழா

தமிழர் தலைவர் நடத்தி வைத்து வாழ்வியல் உரையாற்றினார்

ஜெயங்கொண்டம், அக். 14- அரியலூர் மண்டல தலைவர் சி.காமராஜ் - கலைச்செல்வி ஆகியோரது மகன் கா.பெரியார் செல்வனுக்கும் செந் துறை வஞ்சினபுரம் வே.பன்னீர்செல் வம் - சுமதி ஆகியோரது மகள் ப.கிருத்திகாவிற்கும் வாழ்க்கை இணையேற்பு விழா 11.10.2017 அன்று காலை 10 மணியளவில் செயங்கொண்டம் சுபம் திருமணக் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மண்டல தலைவர் சி.காமராஜ் அனைவரையும் வரவேற்க, கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேக ரன் குடும்பத்தின் சிறப்புகளை இயக்கத் தொடர்பை விளக்கி வாழ்த் துரை வழங்கினார். பெரம்பலூர் திமுக முன்னோடி ஓவியர் முகுந்தன், தா.பழுர் ஒன்றிய திமுக செயலாளர் க.சொ.க.கண்ணன், தொண்டறச்செம் மல் விருத்தாசலம் அகர்சந்த், என்.ஆர்.அய்.ஏ.எஸ் அகாடமி நிறுவனர் விஜயாலயன், அரியலூர் மாவட்ட கழக செயலாளர் க.சிந்தனைச்செல் வன், மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ச.அ.பெருநற் கிள்ளி, திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சுபா.சந்திர சேகர், அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.சிவசங் கர், கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு ஆகியோர் வாழ்த் துரை வழங்கிய பின்னர் தமிழர் தலைவர் வாழ்வியல் உரையாற்றி மணவிழாவை நடத்தி வைத்து சிறப்பித்தார்.

தமிழர் தலைவர் தமது உரை யில்:- வாழையடி வாழையாக பெரி யார்கொள்கை குடும்பமாக திகழக் கூடிய குடும்பம் காமராஜ் குடும்பம் என்பது பெருமைக்குரிய ஒன்று. இந்த கொள்கையை ஏற்றுக்கொண்ட வர்கள் வென்றே தீருவார்கள். சுய மரியாதை திருமணத்திற்கு 92 வயது ஆகிறது. எதிர்வரும் நவம்பர் மாதத் தில் சுயமரியாதை திருமணம் சட்ட மாகி பொன்விழா ஆண்டு வருகிறது. இது சாதாரணமானதல்ல. திராவிடர் இயக்கத்தின் வெற்றி எனக்கூறி சிறப்புரையாற்றினார். மணமக்கள் நன்றி கூறினர்.

பங்கேற்றோர்

கழகப்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார், மாநில இளைஞரணி செய லாளர் த.சீ.இளந்திரையன், ஜெயங் கொண்டம் ஒன்றிய திமுக செயலா ளர் தன.சேகர், நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி, அதிமுக தொழிலதிபர் டி.எம்.டி.திருமாவள வன், பெரியார் வீரவிளையாட்டுக் கழக தலைவர் ப.சுப்பிரமணியன், திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக் கியராஜ், கழகப்பேச்சாளர் பூவை. புலிகேசி, திருச்சி மண்டல செயலா ளர் ஆல்பர்ட், அரியலூர் மண்டல செயலாளர் சு.மணிவண்ணன், மாவட்ட அமைப்பாளர் இரத்தின.இராமச்சந்திரன், துணைத்தலைவர் இரா.திலீபன், மாவட்ட ப.க. தலை வர் தங்க.சிவமூர்த்தி, அ.அன்பரசன், மண்டல இ.அ.செயலாளர் மு.ராசா, மாவட்ட இ.அ.தலைவர் பொன்.செந்தில்குமார், மாவட்ட இ.அ. செயலாளர் க.கார்த்திகேயன், மாவட்ட துணைச் செயலாளர் சோ.க.சேகர், பொதுக்குழு உறுப்பினர் கே.பி. கலியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பி னர் பேராசிரியர் தங்கவேல், ஒன்றிய நிருவாகிகள் ஜெயங்கொண்டம் மா.கருணாநிதி, துரை பிரபாகரன், கே.எம்.சேகர், லெ.அர்ச்சுனன், மந்திரமா? தந்திரமா? கலைவாணன், ஆண்டிமடம் இரா.தமிழரசன், தியாக.முருகன், க.செந்தில், இரா. எ.இராமகிருட்டிணன், கோ.பாண் டியன், தா.பழுர் சொ.மகாலிங்கம், பி.வெங்கடாசலம், சி.தமிழ்சேகரன், இராமச்சந்திரன, ப.க. ஆசிரியர் ராசேந்திரன், அரியலூர் ஒன்றியம் மு.கோபாலகிருட்டிணன், பொறியா ளர் இரா.கோவிந்தராஜன், ந.செல்ல முத்து, ஒட்டக் கோவில் செந்தில், வழக்குரைஞர் சா.பகுத்தறிவாளன், செந்துறை மா.சங்கர், மு.முத்தமிழ் செல்வன், ப.இளங்கோவன், பெ.கோ. கோபால், இராச.செல்வக்குமார், ஆ.இளவழகன், லெ.தமிழரசன், சி.கருப்புசாமி, வெ.இளவரசன், மாவட்ட இளைஞரணி சு.அறிவன், தஞ்சை மாவட்ட தலைவர் வழக் குரைஞர் அமர்சிங், தஞ்சை மண் டல செயலாளர் அய்யனார், பெரம் பலூர் மாவட்ட தலைவர் தங்கராசு, பொதுக்குழு உறுப்பினர் ப.ஆறு முகம், நகரத்தலைவர் அக்ரி ஆறு முகம், விருத்தாசலம் மாவட்ட செயலாளர் முத்து.கதிரவன், மாநில இ.அ.து.செயலாளர் வெற்றிச் செல் வன், கடலூர் மண்டல தலைவர் ஆர்.பன்னீர்செல்வம், செயலாளர் தண்டபாணி, இரமாபிரபா ஜோசப், புலவர் இராவணன், கடலூர் மாவட்ட செயலாளர் தாமோதரன் உள்ளிட்ட ஏராளமான கழக நிருவா கிகளும் உறவினர்களும், நண்பர்க ளும் சிறப்பாக பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner