எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வேலூர்

வேலூர், வேலப்பாடி புன்னகை மருத்துவமனை சுயமரியாதை சடரொளி ஊத்தங்கரை அ.பழனியப்பன் நினைவு அரங்கில் 15.10.2017 காலை 10 மணியள வில் நடைபெற்றது.

வேலூர் மண்டல தலைவர் வி.சடகோபன் அவர்கள் தலைமையேற்று தலைமையுரையாற்றினார்.

வி.இ.சிவக்குமார், வேலூர் கழக மாவட்ட தலைவர் கு.இளங்கோவன், வேலூர் கழக மாவட்ட செயலாளர் ச.கி.செல்வநாதன், வேலூர் கழக மாவட்ட அமைப்பாளர் அ.இளங்கோ வன், செய்யாறு கழக மாவட்ட தலை வர் ஆ.நாகராசன், செய்யாறு கழக மாவட்ட செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெரியார் மருத்துவர் அணி பொதுச் செயலாளர் மரு.பழ.ஜெகன்பாபு விடு தலை சந்தா - 10, கழகப் பொதுக்குழு உறுப்பினர் க.சிகாமணி விடுதலை சந்தா - 10, போளூர் சு.பன்னீர்செல்வம், விடு தலை சந்தா - 5, மாவட்ட இளைஞரணி தலைவர் ந.கண்ணன் விடுதலை சந்தா - 4, ஆசிரியர் அணி க.வீராசாமி விடு தலை சந்தா - 1, காசோலை தருவதாக உறுதியளித்தனர். மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ந.தேன்மொழி பெண் ஏன் அடிமையானாள்? என்ற நூலினை 100 மகளிரிடம் சேர்ப்பேன் என்றார்.

கழக அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் தனது உரையில் விடுதலை யின் சிறப்புகளை எடுத்து ரைத்து கழக மாவட்டங்கள் விடுதலை சந்தா ஒதுக்கீட்டு அளவை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கழகப்பொதுச் செயலாளர் முனை வர் துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற் றினார்.

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரி யாரால் துவக்கப்பட்ட உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலை 83 ஆண் டுகளையும் கடந்து தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கிறது. பிற்படுத்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் பாது காப்பு கேடயமாக இடஒதுக்கீட்டின் பாதுகாவலனாக பல அரசுகளை வேலை வாங்கிய ஏடாக விளங்கிக் கொண்டுள்ளது.

இவ்விடுதலையின் ஆசிரியராக தொடர்ந்து 55 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் தலைவர் இருந்து வருவது உலகில் இல்லாத மிகப்பெரிய சிறப்பு. இத்தகைய சிறப்பு மிகு விடுதலையை வீடுதோறும் பரப்ப வேண்டும். வேலூர் மண்டலத்திற்கு ஒதுக்கப்பட்ட விடு தலை சந்தாக்களின் இலக்கை முடிக்க வேண்டும். இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் மட்டும் 69% இடஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோருக்கு இந்திய அளவில் 27% இடஒதுக்கீடு பெற்றுத்தந்த விடுதலையின் சிறப்புகளையும் தமிழர் தலைவரின் உழைப்பையும் சிறப் பையும் எடுத்துக்கூறி உரையாற்றினார்.

மகளிர் பாசறை சி.லதா நன்றி கூறினார். பெரியார் மருத்துவ அணி பொதுச் செயலாளர் மரு பழ.ஜெகன் பாபு அவர்கள் அனைத்து தோழர்களுக் கும் பிரியாணி விருந்து வழங்கினார்.

கலந்து கொண்ட தோழர்கள்:

மாவட்ட துணை தலைவர் உ.ச.குரு நாதன், நகர தலைவர் ச.கி.தாண்டவ மூர்த்தி, மாநகர ப.க.செயலாளர்

அ.மொ.வீரமணி, மாநகர ப.க. அமைப் பாளர் உ.விஸ்வநாதன், குடியாத்தம் நகர தலைவர் வி.மோகன், வேலூர் மாவட்ட ப.க. துணைத் தலைவர் ஆ. துரைசாமி, மாணவரணி அய்.சந்தீப், கோ.விநாயகம், ஆற்காடு ஒன்றிய தலைவர் மோ.அன்பரசன், இளைஞரணி செந்தமிழ் சரவணன், குடியாத்தம் ப.க. மு.ரேணு, பி.உமாபதி, எஸ்.குணாளன், ரே.தயாளன்.

மகளிரணி மீரா ஜெகதீசன், வடசேரி ச.கலைமணி பழனியப்பன் (மாவட்ட மகளிரணி செயலாளர்), மரு.தி.அனிதா ஜெகன் (மாவட்ட மகளிர் பாசறை துணைச் செயலாளர்), நா.விசயகுமாரி (செய்யாறு மாவட்ட மகளிரணி) சத்திய பூங்குழலி (குடியாத்தம் மகளிரணி) கலந்துரையாடலில் பங்கு பெற்றனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) செய்யாறு மாவட்டம், வடமணப் பாக்கம் சுயமரியாதைச் சுடரொளி நல் லாசிரியர் பி.கே.விஜயராகவன் அவர் கள் 7.10.2017 அன்று இயற்கை எய்தி னார். அன்னாருக்கு வீரவணக்கம் செலுத் தப்பட்டது.

2) நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களது அறிவுக் கொடையால் மலர்ந்த உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலையின் ஆசிரியராக 55 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தமிழர் தலைவர் அவர் களின் பிறந்த நாள் (2.12.2017) பரிசாக விடுதலை சந்தாக்கள் 1000க்கும் குறை யாமல் வழங்குவதென தீர்மானிக்கப் பட்டது.

3) வேலூர் மண்டலத்திற்குப்பட்ட வேலூர், செய்யாறு, திருவண்ணாமலை கழக மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தலா 250 சந்தாக்களை வழங்குவதென தீர்மானிக்கப்படுகிறது.

4) தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் பிறந்த நாள் (2.12.2017) அன்று வேலூர் மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவதெனவும், மரக்கன் றுகள் நடுவதெனவும் குருதிக் கொடை வழங்குவதெனவும் தீர்மானிக்கப்படு கிறது.

5) 2.12.2017 ஈரோட்டில் நடைபெற உள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு விடுதலை சந்தா வழங்கும் பிறந்த நாள் விழாவில் வேலூர், செய்யாறு, திருவண்ணாமலை கழக மாவட்டங்களின் தோழர்கள் பெரும்அளவில் கலந்து கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மண்டல புதுக் கோட்டை, அறந்தாங்கி கழக மாவட் டங்கள்) கழகக் கலந்துறவாடல் கூட் டம் மாவட்டத் திராவிடர் கழக அலு வலகத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார் தலைமை வகித்தார். மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலா ளர் மா.அழகிரிசாமி கருத்துரை வழங் கினார்.

மண்டலத் தலைவர் பெ.இரா வணன், மாவட்டத் தலைவர்கள் மு.அறிவொளி, அறந்தாங்கி க.மாரிமுத்து, மாவட்டச் செயலாளர்கள் புதுக் கோட்டை ப.வீரப்பன், அறந்தாங்கி இரா.இளங்கோ, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வெ.ஆசைத்தம்பி, மாநில மாணவரணி துணைச் செயலா ளர் வெ.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட அமைப்பாளர்கள் அறந் தாங்கி அ.தங்கராசு, புதுக்கோட்டை ஆசுப்பையா, மாவட்டத் துணைத் தலைவர் செ.இராசேந்திரன், ப.க. மாவட்டத் தலைவர் அ.சரவணன், திரு மயம் ப.க.அமைப்பாளர் க.மாரியப் பன், நகர இளைஞரணி அமைப்பாளர் பூ.சி.இளங்கோ, மாணவரணி பெ. அன்பரசன், கிளைச் செயலாளர்கள் வி.தங்கவேலு, வீ.கருப்பையா, மகளி ரணி வீர.வசந்தா, அறந்தாங்கி ஒன்றியத் தலைவர் சவுந்தரராசன், அறந்தாங்கி நகரச் செயலாளர் இரா.யோகராசு, பட் டாசு பாலு ஆகியோர் கலந்து கொண் டனர்.

இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தந்தை பெரியார் கொள் கையை உலக மயமாக்கும் பணியில் தன்னை முழுமையாக ஒப்படைத்து ஓய்வில்லாமல் உழைத்து வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் 85-ஆம் பிறந்தநாளை டிசம்பர் 2 (சுயமரியாதை நாள்) மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மிகச் சிறப்பாக கொண்டாடும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், அரசு மருத்துவ மனை உள் நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவது, குருதிக் கொடை வழங்குதல், கொள்கை விளக் கக் கூட்டங்களை நடத்துவது, உள் ளிட்ட மனிதநேயப் பணிகளை மேற் கொள்வது,

2 வீடுதோறும் விடுதலை, வீதி தோறும் பிரச்சாரம் தமிழர்களின் உரிமை மீட்பு ஏடான விடுதலை நாளி தழை மக்கள் மத்தியில் பெருமளவில் சேர்க்கும் வகையில் அறந்தாங்கி, புதுக் கோட்டை மாவட்டங்களில் தலா 250 சந்தாக்களை சேர்த்து 2017 டிசம்பர் 2-ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை நாள் விழாவில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 85-ஆவது பிறந்த நாள் பரிசாக வழங்கி மகிழ்வது,

3. மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும் மக்கள் மக்கள் மத்தியில் மண்டிக் கிடக் கும் மூடநம்பிக்கையை முறியடிக்கும் வகையில் பகுத்தறிவு பிரச்சாரங்களை அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டங் களில் பெருமளவில் நடத்துவது,

4. தந்தை பெரியாரின் இறுதி விருப்பமான அனைத்து ஜாதியினருக் கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டத்தின் வெற்றியாக அனைத்துச் ஜாதியினரையும் அர்ச்சகராக்கிய கேரள அரசை பாராட் டுவதுடன் கேரள அரசைப் பின்பற்றி பெரியார் பிறந்த தமிழ்நாட்டிலும் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கிட தமிழக அரசை இக்கூட்டததின் மூலம் கேட்டுக் கொள்வது, இல்லை யேல் தமிழர் தலைவர் வழிகாட்டுதல்படி சிறை நிரப்பும் போராட்டத்தில் அறந் தாங்கி, புதுக்கோட்டை மாவட்டங்க ளின் சார்பில் பெருமளவில் பங்கேற்பது,

5. 2017 நவம்பர் 9-ஆம் தேதி அறந் தாங்கியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொள்ளும் தந்தை பெரியாரின் 139-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தை அனைத் துக் கட்சியினரும் பங்கேற்கும் வகை யில் மிக எழுச்சியோடு நடத்துவது, நிகழ்ச்சியில் அனைத்து கழகத் தோழர் களுடன் குடும்பத்துடன் பங்கேற்பது டன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்ப தென்று முடிவு செய்யப்படுகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய பொறுப்பாளர்கள்

இந்நிகழ்வில் மேலும் புதிய பொறுப்பாளர்களாக புதுக்கோட்டை மாவட்ட மாணவரணி அமைப்பாளராக பெ.அன்பரசனும் அறந்தாங்கி மாவட்ட மாணவரணி அமைப்பாளராக எம்.யோகேஷ் ஆகியோரும் நியமிக்கப் பட்டனர். பெ.அன்பரசன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner