எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திண்டுக்கல்

திண்டுக்கல், அக். 22- திண்டுக்கல் மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் திண்டுக்கல், நாகல் நகர், தனலெட்சுமி பவனத்தில் 14.10.2017 அன்று மாலை 4.30 மணியளவில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மண்டலத் தலைவர் இரா.வீரபாண்டி யன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பெ.கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். திண்டுக்கல் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சுப.செகந் நாதன், பொதுக்குழு உறுப்பினர் இரா.நாராயணன், தேனி மாவட்ட செயலாளர் பூ.மணிகண்டன், பழநி மாவட்ட செயலாளர் நா.நல்லதம்பி, திராவிடர் தொழி லாளர் கழகப் பேரவை தலைவர் அ.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மண்டலச் செயலாளர் கறுப்புச்சட்டை சு.நடராசன், பழநி மாவட்ட அமைப்பாளர் சி.இராதாகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் ச.அங்கப்பன், திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் த.கருணாநிதி, மாவட்ட துணைச் செயலாளர் பழ.இராசேந்திரன், ப.க. மாவட்ட செயலாளர் மு.நாகராசன் ஆகியோரின் உரைக்கு பின்னர் திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கருத்துரை வழங்கினார்.  அவரது உரையில் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளான டிசம்பர் 2இல் ஈரோட்டில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் 15,000 சந்தாக்களை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு மாவட்டத்திற்கு 250 சந்தாக்கள் வீதம் 3 மாவட்டத்திற்கு 750 சந்தாக்களை வழங்க வேண்டும் என்று பலவேறு செய்திகளை விளக்கி உரையாற்றினார்.

கூட்டத்தில் திண்டுக்கல் நகரச் செயலாளர் அ.மாணிக் கம், துணைச் செயலாளர் இர.இரமேஷ்கண்ணா, துணைத் தலைவர் இரா.ஜவகர், பழநி நகரத் தலைவர் சு.அழகர்சாமி, போடி ம.சுருளிராசு, இரா.மாசாணம், ஒட்டன்சத்திரம் கா.சக்திவேல், வேடசந்தூர் சி.மாரி யப்பன், சின்னாளப்பட்டி கா.நாகேந்திரன், நகர ப.க. தலைவர் வி.இராமசாமி, கேஜிஎஸ்.ஜீவானந்தம், கருந்தீ, க.சந்திரன், டி.ஜெ.குமரன், செபாஸ்டின் சின்னப்பன், வாசுதேவன், வி.அய்யாசாமி, ந.சின்னச்சாமி மற்றும் பல கழகத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) இரங்கல் தீர்மானம்: பொதுக்குழு உறுப்பினர் பெரியார் பெருந்தொண்டர் சின்னாளப்பட்டி போ.செல் வராசு, தருமத்துப்பட்டி சி.வே.பழனிச்சாமி, தேனி மாவட்ட திராவிடர் கழக தலைவர் போடி ச.ரெகு நாகநாதன் அவர்களின் சகோதரியார் பாக்கியம் ஆகி யோரின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத்தையும் தெரிவிக்கிறது.

2) அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் வகையில் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தமிழக அரசு உடனடியாக நடைமுறைபடுத்தாவிட்டால் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் அறிவிக்கவுள்ள சிறை நிரப்பும் போராட்டத்தில் அனைத்து தோழர்களும் பங்கேற்பது என தீர்மானிக் கப்படுகிறது.

3) அறிவுலக பேராசான் தந்தை பெரியாரின் இலட்சி யங்களை உலக மயமாக்க ஓய்வின்றி உழைத்துவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 85ஆவது பிறந்த நாள் விழா டிசம்பர் 2இல் ஈரோட்டில் எழுச்சிகரமாக நடைபெற உள்ளது. அவ்விழாவில் அனைவரும் குடும் பத்துடன் பங்கேற்பது என முடிவு செய்யப்படுகிறது.

4) தந்தை பெரியார் நமக்கு தந்த அறிவாயுதம், உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ். "விடுதலை" ஏட்டிற்கு மாவட்டத்திற்கு 250 சந்தாக்கள் வீதம் 3 மாவட்டத்திற்கு 750 சந்தாக்களை டிசம்பர் 2ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்குவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

5) புதிய பொறுப்பாளர்கள்: திண்டுக்கல் நகரத் தலைவர்: அ.மாணிக்கம், திண்டுக்கல் நகரச் செயலாளர்: இர.இரமேஷ் கண்ணா, திண்டுக்கல் நகர துணைச் செயலாளர்: இரா.கருந்தீ தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஈரோடு

ஈரோடு, அக். 22- ஈரோடு -மண்டல திராவிடர் கழகக் கலந் துறவாடல் கூட்டம் 15.10-.2017 அன்று மாலை 5 மணியள வில் ஈரோடு பெரியார் மன்றத்தில் அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

மண்டல தலைவர் ப.பிரகலாதன், செயலாளர் அ.கு.குமார், ஈரோடு மாவட்ட தலைவர் இரா.நற்குணன், கோபி மாவட்ட தலைவர் இரா.சீனிவாசன், ஈரோடு மாவட்ட செயலாளர் கு.சிற்றரசு, கோபி மாவட்ட செயலாளர் சிவலிங்கம், நாமக்கல் மாவட்ட செயலாளர் சு.சரவணன், மாநில இளைஞரணி துனண செயலாளர் தே.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில திராவிடர் கழக அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் கலந்துகொண்டு கழகத்தலைவர் ஆசிரியர் அவர்களின் 85 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா எடுக்க வேண்டிய அவசியத்தை சிறப்பாக விளக்கிப் பேசினார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1)            அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் தத்து வங்களை உலகறியச் செய்திட ஓய்வின்றி உழைத்துவரும் தமிழர் தலைவர்,நமது குடும்பத்தலைவர் ஆசிரியர் அவர்களின் 85 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவை டிசம்பர் 2ஆம் நாளன்று ஈரோட்டில் நடத்துவதற்கு ஒப்புதல் அளித்த கழகத்தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் உளமார்ந்த நன்றியினை பெருமகிழ்வோடு தெரிவித்துகொள்கிறது.

2) தமிழர் தலைவர் அவர்களின் 85 ஆவதுஆண்டு பிறந்த நாள்விழா,உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலை ஏட்டிற்கு சந்தா வழங்கும் விழா,ஜாதி ஒழிப் புப் போரில் அரசியல் சட்டத்தை கொளுத்திய 60 ஆவது ஆண்டு விழா, உள்ளிட்ட முப்பெரும் விழாவினை மிகுந்த எழுச்சியோடு நடத்துவது எனவும்,முப்பெரும் விழாவை விளக்கி சுவரெழுத்துகள்,தட்டி,ஊடக விளம் பரங்கள் என தீவிரப் பிரச்சாரம் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

3) முப்பெரும் விழா சிறக்க கழகப் பொறுப்பாளர் களும், தோழர்களும், தமிழினப் பெருமக்களிடம் நன் கொடை திரட்டும் பணியை உடனே தொடங்வது என முடிவு செய்யப்பட்டது.

4) உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு மாவட்டத்திற்கு 250 சந்தாக்கள் வீதம் திரட்டி 750 சந்தாக் களை தமிழர் தலைவரிடம் பிறந்த நாள் பரிசாக வழங் குவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தவர்கள். பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து, மண்டல மகளிரணி செயலாளர் ராஜேஸ் வரி, மாவட்ட ப.க.தலைவர் ந.கிருட்டிணமூர்த்தி, மாவட்ட ப.க. அமைப்பாளர் பி.என்.எம்.பெரியசாமி, ஈரோடு கோ.திருநாவுக்கரசு,  நாமக்கல் மாவட்ட துணை செயலாளர் பொன்னுச்சாமி, வழக்குரைஞர் நம்பியூர் மு.சென்னியப்பன், மாவட்ட அமைப்பாளர் சிவகிரி கு.சண்முகம், நாமக்கல் நகர தலைவர் வை.பெரியசாமி, குமாரபாளையம் காமராஜ், மாவட்ட சுயமரியாதை திருமண நிலைய அமைப்பாளர் ப.சத்தியமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் மா.மணிமாறன், மாவட்ட இளைஞரணி தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் ராம்கண், ரெ.சண்முகம், மகளிரணியைச் சார்ந்த சங்கீதா, மாலதி பெரியசாமி, பவானி அசோக்குமார், அம்மாபேட்டை மணிகண்டன், தஞ்சை பா.வீரச்செல்வன், க.ரகுராமன், விஜயமங்கலம் மோகன்ராஜ், சசிதரன் ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.

இறுதியாக நாமக்கல் மாவட்ட செயலாளர் சு.சர வணன் நன்றி கூறினார்.கலந்துகொண்ட அனைவருக்கும் பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பி.என்.எம்.பெரிய சாமி அவர்களது குடும்பம் சார்பாக பச்சைப்பயிறும் தேநீரும் வழங்கினார்கள்.மாவட்ட தி.க.அமைப்பாளர் சிவகிரி கு.சண்முகம் அவர்கள் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு 5 லிட்டர் தேங்காய் எண்ணெய் மாநில திராவிடர் கழக அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் அவர்களிடம் வழங்கினார்.

சமூக விஞ்ஞானி தந்தை பெரியார் அவர்க ளின் 139ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா 17.9.2017 அன்று ஈரோட்டில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

அவ்விழாவில் பங்கேற்ற கழகப் பொதுக்குழு உறுப்பினர் கோ.பாலகிருட்டிணன், கோ.திருநாவுக்கரசு, மாநகர தலைவர் ந.சிவராமன் ஆகியோர் விழாவும் விருந்தும் சிறப்பிக்கப் பெருமளவு உதவி செய்தார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner