எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, அக். 22- 14.10.2017 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மதுரை வடக்கு மாரட் வீதி முருகானந்தம் பழக்கடை யில் மதுரை விடுதலை வாசகர் வட் டத்தின் 58வது நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் பொ. நடராசன் நீதிபதி (பணி நிறைவு) தலைமை தாங்கினார். வந்திருந்தோரை விடு தலை வாசகர் வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் கனி வரவேற்றுப் பேசினார். தந்தை பெரியாரின்139ஆவது பிறந்த நாள் விழா மலரை அறிமுகம் செய்து புத்தகத்தூதன் பா.சடகோபன் உரை யாற்றினார்.

"அம்பேத்கரும் அரசியல் சட்ட மும்" என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் இன்குலாப் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையில், அம்பேத்கர் அரசியல் சட் டத்தில் ஏற்படுத்திய சீர்திருத்த முற் போக்கான சட்டப்பிரிவுகளை புகுத் தியதை ஒவ்வொன்றாக தொகுத்து வழங்கினார்.

குறிப்பாக அரசியல் சட்டப்பிரிவு 14, 15, 330 முதல் 342 வரை  368, 370 ஆகிய பிரிவுகளை விளக்கி விரிவாக தொகுத்துரைத்தார். சிலர் "பெரியார் மற்றும் அம்பேத்கர் கருத்துகள் எக் காலத்திற்கும் பொருத்தமானவை" என்று விளக்கிப் பேசினார்.

நாடு விடுதலை அடையும்போது இஸ்லாமியருக்கு தனி நாடு அவசியம் என்று கூறியவர் அம்பேத்கர் என்றும், காந்தியார் கூட தீண்டாமையை ஆதரித்தவர் என்பதை நினைவூட்டி மலம் இருக்கலாம் ஆனால் நாற்றம் அடிக்கக்கூடாது என்றால் எப்படி என்ற பதிலை அம்பேத்கர் கூறியதை விளக் கினார்.

வேதங்களில் பார்ப்பனர் விவசா யம் செய்யக்கூடாது என்று கூறியிருந் தும் நிலம் முழுவதும் அவர்களிடம் தான் இருந்தது என்பதை அம்பேத்கர் விளக்கியதை எடுத்துக்காட்டினார். அம்பேத்கருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை செய் யப்பட்டபோது ஆறு மருத்துவர்களில் நான்கு பேர் பார்ப்பனர்கள் என்பதை சுட்டிக்காட்டினார்.

அரசியல் சட்டத்தை நமக்கு அளித்த அம்பேத்கரின் திருவுருவப் படம் நீதிமன்றங்களில் இல்லாதது பெரும் குறையாகும் என்று கூறினார். மொத்தத்தில் அம்பேத்கரின் சட்ட அறிவையும் அரசியல் சட்டம் அமைத் ததில் அவரது அறிவையும் ஆற்றலை யும் அருமையாக விளக்கி கூறினார். கூட்ட முடிவில் விடுதலை வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மா. பவுன்ராசா நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner