எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செங்கற்பட்டு, நவ.4 செங்கற் பட்டு கழக மாவட்ட தலைவர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் அ.கோ. கோபால்சாமி (91 வயது) அவர்கள் 2.11.2017 அன்று  மாலை  இயற்கை எய்தி னார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள், மறைந்த கோபால்சாமி அவர்களின் சிறப்பான செயற் பாடுகள் குறித்து குறிப்பிட்டு இரங்கல் செய்தி வெளியிட்டார்.  3.11.2017 அன்று மாலை 4.00 மணி யளவில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர்

வீ.அன்புராஜ் ஆகியோர் தலை மை கழகத்தின் சார்பில் கோபால் சாமி அவர்கள் உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரி யாதை செலுத்தினர். கோபால்சாமி அவர்களின் வாழ்விணையர் கவுசல்யா அம்மையாருக்கு ஆறு தல் கூறினர்.

(கடந்த  17.10.2017 அன்று கழகத்தலைவர் தமிழர் தலைவர் அவர்கள் , உடல்நலக்குறைவாக இருந்த கோபால்சாமி அவர் களையும், கவுசல்யா அம்மையார் ஆகியோரை சந்தித்து உடல் நலம் விசாரித்து சென்றார்)

கழகத் துணைத்தலைவர் கவிஞர் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.  தமிழர் தலைவரின் இரங்கல் செய்தியை வாசித்து கோபால்சாமி அவர் களின் முயற்சியால் பெரியார் சிலை நிறுவிய செய்திகளைக்கூறி கழகத் துணைத்தலைவர்  வீர வணக்கம் செலுத்தினார். கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ், கழகச் சொற்பொழிவாளர் காஞ்சி பா. கதிரவன் , செங்கை இரா. கோவிந்தசாமி , காஞ்சி மாவட்ட கழகத் தலைவர் டி.ஏ.ஜி.அசோகன், மறைந்த கோபால்சாமி அவர் களின் சகோதரர் கவிஞர் பார்த் திபன் ஆகியோர் இரங்கலுரை நிகழ்த்தி வீரவணக்கம் செலுத் தினர்.

காஞ்சி மண்டல கழகத் தலைவர் பு.எல்லப்பன் , காஞ்சி மாவட்ட செயலாளர் பூ. சுந்தரம், மதிவாணன் , சுஜாதா,  பொன். ராஜேந்திரன், தனசேகரன், தமிழ் மணி, இராமகிருஷ்ணன்,  ராஜன்,  கல்பாக்கம் ராமச்சந்திரன், பக்த வச்சலம் , குமரவேல் , சேகர் , அரக்கோணம் ஜீவன்தாஸ், பொதுக்குழு உறுப்பினர்  கி. இளையவேள்,  காஞ்சி மாவட்ட துணை செயலாளர் இ.ரவீந்திரன், செ.ரா.முகிலன் , ச.வேலாயுதம், சீத்தாவரம் மோகன், சென்னை மண்டல செயலாளர் பன்னீர் செல்வம், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தையன் , நீலாங் கரை வீரபத்திரன், மோகன்ராஜ், பொழிசை கண்ணன் ,  சென்னை மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை,  மறைமலைநகர் துரை. முத்து, முருகன், முடி யரசன், ஆசிரியர் சிவக்குமார், திருக்குறள் வெங்கடேசன், சமத்துவமணி,  கூடுவாஞ்சேரி கருணாகரன், நரசிம்மன், காட்டாங்குளத்தூர் கருணாநிதி, பெரியார் திடல் கலையரசன், கலைமணி, தி.மு.க நகர செயலாளர் ச. நரேந் திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ந. மனோகரன் , முன்னாள் நகர மன்ற தலைவர் பி. குப்பன் , ஆசிரியர் ந.வீரமணி உள்ளிட்ட ஏராளமானோர் மறைந்த கோபால்சாமி அவர் களின் உடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

திராவிடர் கழகத் தொண்டரின் தன்னலம்பாராத தொண்டுக்கு ஊரே திரண்டு வந்து மரியாதை செலுத்தியது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner