எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, நவ.12  பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10.11.2017 அன்று மாலை 5.30 மணி அளவில் பள்ளியின் என்.எஸ்.கே. கலை வாணர் அரங்கத்தில் 39ஆவது ஆண்டு விழா -தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்களின் தலைமையில் நடை பெற்றது.

வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் பதிவாளர் தனராஜ் முன்னிலையில், பெரியார் கல்வி குழும தலைவர் வீ.அன்புராஜ், பெரியார் நூற் றாண்டுக் கல்வி வளாக ஒருங்கிணைப்பாளர் தங்காத்தாள், பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாக இயக்குநர் ப.சுப்ரமணியன், பெரி யார் கல்விக் குழுமங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள், ஆசிரியப் பெருமக்கள் உடனிருக்க மொழி வாழ்த் துடன் இனிதே தொடங்கியது.

விழாவில் பள்ளி முதல்வர் எம்.இராதா கிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்கும் வண்ணம் வரவேற்பு நடன மும், சின்னஞ்சிறு மழலையர் பிஞ்சுகளின் நடனங்களும் அனைவரின் உள்ளத்தைக் கவர்ந்தன.

பள்ளியின் ஆண்டறிக்கை காணொலி காட்சி மூலம் அனைவரையும் கவரும் வண்ணம் திரையிடப்பட்டது. சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்த பின்னர் சென்ற ஆண்டு பள்ளியில் நூறு சதவீத வருகைப் பதிவேடு பெற்ற மாணாக்கர் களுக்கும், கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்களுக்கும் கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கரங்களால் சென்ற ஆண்டு பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் நூறு சதவீத தேர்ச்சி பெறச் செய்த ஆசிரியர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

விழாப் பேருரை

மதிப்பெண் மட்டும் பெறவேண்டும் என்ற எண்னத்தை கைகொள்ளாது எத் துறையில் அவர்களுக்கு ஈடுபாடு உள்ள தோ அத்துறையில் ஈடுபட்டு சிறந்து விளங்க பெற்றோர்கள் ஒத்துழைக்குமாறும், தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செல வழித்து சுதந்திரத்துடன் கட்டுக்கோப்பாக வளர்க்கும் வழி வகைகளையும் எடுத் துரைக்குமாறும், இன்றைய மாணவர்கள் பகுத்தறிவோடு பட்டறிவும் பெற்று வாழ் வில் சிறக்க வேண்டும் என்று வாழ்த்தி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விழா பேருரையாற்றினார்.

மாணவ மாணவியரின் பல்கலை கலைநிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்டு நடைபெற்றது. காண்பவரின் கண்களையும் கருத்தையும் கவர்ந்தன. நிறைவாக பள்ளி யின் துணை முதல்வர் ஏ.நிர்மலா நன்றி யுரை வழங்க நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner