எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவண்ணாமலை, நவ. 15 திருவண்ணாமலை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 12.11.2017 காலை 11 மணியளவில் செங்கம் நகர கழக செயலாளர் அ.குமரேசன் இல்லத் தில் மாவட்டத் தலைவர் வேட்ட வலம் பி.பட்டாபிராமன் தலை மையில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் ப.அண்ணாதாசன் அனைவ ரையும் வரவேற்றார், பொதுக்குழ உறுப்பினர் முனு.ஜானகிராமன், செங்கம் ஒன்றிய தலைவர்

கு.ராமன், மாவட்ட இளைஞரணி தலைவர் வேட்டவலம் இரா.திரு மலை ஆகியோர் முன்னிலை யில், செங்கம் நகர தலைவர் கு.பச்சையப்பன், புதுப்பாளை யம் ஒன்றிய தலைவர் அ.திரா விட பழனி, திருவண்ணாமலை நகர செயலாளர் மு.காமராஜ், செங்கம் நகர செயலாளர் அ.கும ரேசன்  உள்ளிட்டோர் கருத்துரை வழங் கினர்.

வேலூர் மண்டல தலைவர் வி.சடகோபன் விடுதலை சந்தா, கழக பணிகள், இயக்க வளர்ச்சி, புதிய உறுப்பினர் சேர்க்கை உள்பட பல்வேறு கருத்துகள் எடுத்து வைத்து எழுச்சி உரை நிகழ்த்தினார். கலந்துரையாடல் கூட்டத்தில் பல்வேறு தீர்மா னங்கள் ஒரு மனதாக நிறை வேற்றப்பட்டன. தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1: தந்தை பெரியார் பேருரையாளர் பேராசிரியர் மா.நன்னன் அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தீர்மானம் 2: நவம்பர் 26இல் பெரியார் திடலில் நடைபெறும் 60 ஆம் ஆண்டு ஜாதி ஒழிப்பு மாநாட்டிற்கு மாவட்ட பொறுப் பாளர்கள் கழக குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டு

விழாவை சிறப்பிக்க கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம் 3: தந்தை பெரி யாரின் தத்துவ வாரிசு தமிழர் தலைவர் ஆசிரியரின் 85ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா மகிழ் வாக திருவண்ணாமலை மாவட்ட கழகம் சார்பில் 250 விடு தலை சந்தாவை திரட்டி தருவது அதற்கு கழகத்தின் பொறுப் பாளர்களும்  உறுப்பினர்களும் விடுதலை சந்தாவை விரைவில் முடித்து தருவது எனவும் தீர் மானிக்கப்பட்டது.

தீர்மானம் 4: திருவண் ணாமலை மாவட்டத் தலைவர் வேட்டவலம் பி.பட்டாபிராம னின் பிறந்தநாள் விழா நவம்பர் 9 இல் கொண்டாடப்பட்டது அதற்கு இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் வாழ்த்துகள் தெரி விக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

போளூர் நகர செயலாளர் தா.சுந்தரமூர்த்தி, ரா.அன்பு, மாவட்ட இளைஞரணி செய லாளர் சி.இரா.வினோத்குமார், ப.க அமைப்பாளர் புலவர் ஏழு மலை,  பெரியார் பிஞ்சு அன்புச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டன.

முடிவில் செங்கம் நகர பொரு ளாளர் கு.ராஜா நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner