எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காஞ்சிபுரம், நவ. 15 12.11.2017 அன்று காலை 11 மணியளவில், சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் அருகில் தோழர் பா.தனசேகரன் இல்லத்தில், பா.தாயாரம்மாள் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி  நடைபெற்றது.

பெரியார் பெருந்தொண்டர் மறைந்த ஆசிரியர் வெங்கடேசன் அவர்களுடைய மகன் காஞ்சிபுரம் மாவட்ட  அரசு ஊழியர் சங்கச் செயலாளர் பகுத்தறிவாளர் வெ.லெனின் அவர்கள் தலை மையில் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தாயாரம்மாள் அவர்களின் மகன் பா. தனசேகரன் , மறைந்த ஆசிரியர் வெங்கடேசன், எல்லப் பனார் ஆகியோரால் பெரியார் கொள்கை வயப்பட்டதால் பார்ப் பனர் மறுப்பு நிகழ்ச்சியாக படத்திறப்பு நிகழ்ச்சி நடத்துவ தாகக் குறிப்பிட்டு  அனைவரையும் வரவேற்றார்.     காஞ்சி பச்சையப் பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி   பணிநிறைவு செய்த பேராசிரியர் முனைவர் ஜி. பாலன் தாயாரம் மாள் படத்தைத் திறந்து வைத்து உழைப்பின் உன்னதத் தையும் தாயாரம்மாள் அவர்களின் செயற்பாடுகள் குறித் தும் உரையாற்றினார்.

சி.பி.எம் தோழர் வாசுதேவன் உரைக்குப் பிறகு, திராவிடர் கழக சொற்பொழிவாளர் முனை வர் காஞ்சி பா.கதிரவன் தம் நினை வேந்தல் உரையில், இந்து மதத் தின் ‘காரியம்‘ தவிர்த்து படத் திறப்பு நடத்துவதன் சிறப்பு,  பார்ப்பனரை மறுத்து படத்திறப்பு மற்றும் தமிழர் இல்லத்தில் நடத் தும் பிற நிகழ்வுகளைச் செய்வ தில் உள்ள  தன்மான உணர்வு,  பார்ப்பனரை அழைத் துச் செய் வதன் இழிவு, தாயாரம் மாள் பிறந்த  1929 இல் தந்தை பெரியா ரால் நடத்தப்பட்ட  முதல் சுய மரியாதை மாநாட்டில்  நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இன்று  பெண்ணுரிமை, சமூகநீதி சட்டங்களாக இருக்கும்  செய்திகள் உள்ளிட்ட பல்வேறு செய்திகளை விளக்கமாக எடுத்து ரைத்தார்.

நிறைவாக, சி.பி.எம் தோழர் டி.இலட்சுமணன் அவர்கள் பெரி யாரின் பகுத்தறிவு கருத்துகள், மூடநம்பிக்கை ஒழிப்பு கருத் துகள், திருமணம், உடை  குறித்து பெரியாரின் கருத்துகள் முதலி யவற்றை  எளிதில் புரிந்து கொள் ளும் விதத்தில் உரையாற் றினார்.  மறைந்த தாயாரம்மாள் அவர் களின் இளையமகன் தயாளன் நன்றி கூறினார்.

படத்திறப்பு நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தோழர் கோபால், கல்பாக்கம் அரிகிருஷ்ணன், சி.அய்.டி.யூ இரா. மதுசூதனன் மற்றும் பாலகிருஷ்ணன்  முனுசாமி, தனகோட்டி அம்மாள், காமாட்சி, அம்சா உள்ளிட்ட  குடும்ப உறவினர்களும் நண்பர் களும் தாய்மார்களும் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner