எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, நவ. 19- பகுத்தறிவா ளர் கழக மேனாள் துணைத் தலைவரும், 'வீரமணி ஒரு வீரவிதை' என்ற ஆய்வு நூலின் ஆசிரியருமான கோ.அண்ணாவி (வயது 68) நேற்று 18-.11.-2017 மாலை 5 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். பகுத்தறிவாளர் கழகத்தில் அரும்பணி ஆற்றியவர்! எழுத் தாளர் ஜெயகாந்தன் அவர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு மேடையேற்றி ஆசிரியர் குறித்த அவரது நினைவுகளைப் பதியச் செய்த பெருமைக்குரியவர்!

ஆசிரியர் அவர்களின் இள மைக்காலப் பொதுவாழ்க்கை யைத் தொகுப்பதற்காக அரி தின் முயன்று பணியாற்றியவர்!

சிறிது காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, வீட்டில் சிகிச்சை பெற்று வந்த அவர் மறைவுற்ற செய்தியறிந்து கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் இன்று (19.11.2017) புரசைவாக்கம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார். உடன் கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்பு ராஜ், மாநில கழக அமைப்பா ளர் உரத்தநாடு இரா.குணசேக ரன், மாநில மாணவரணிச் செய லாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வடசென்னை மாவட் டத் தலைவர் வழக்கறிஞர் சு. குமாரதேவன், மாவட்டச் செயலாளர் தே. ஒளிவண்ணன்,  மகளிரணி பொறுப்பாளர்கள் கு.தங்கமணி, சி.வெற்றிச்செல்வி, பசும்பொன், பா.மணியம்மை, புரசைவாக்கம் அன்புச் செல்வன், ஓட்டேரி பாஸ்கர், தட்சணாமூர்த்தி, மணிவண் ணன், பெரியார் திடல் யுவ ராஜ், காரல்மார்க்ஸ், சீர்த்தி, முத்துராஜ், அசோக், பர்தீன், கலைமணி  உள்ளிட்ட தோழர் கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

முகவரி: எண். 106/107, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, புரசைவாக்கம், சென்னை - 600 007. தொடர்பு எண். 99626 13083

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner