எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மேட்டுப்பாளையம், நவ. 25 மேட்டுப்பாளையத்தில் 12.11.2017 மாலை 6 மணிக்கு வசந்தம் ஸ்டீல்ஸ் மாடியில் பகுத்தறி வாளர் கழக அமைப்புக் கூட்டம் நடைபெற்றது.

த.வீரமணி (வனச்சரகர் ஓய்வு) வரவேற்புரையாற்றினார். மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர் சு.வேலுசாமி தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் சாலை வேம்பு சுப்பையன், மாவட்ட செயலாளர் அர.வெள்ளிங்கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோபி.குமாரராசாவின் உரைக்குப்பின் மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் அழகிரிசாமி சிறப்புரையாற்றினார்.

பகுத்தறிவாளர் கழக அமைப்பு தொடங்கப்படுவதன் நோக்கம், செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். தந்தை பெரியார் பகுத்தறிவாளர் கழகத்தை மனிதர்கள் கழகம் என்று கூறிய பாங்கினை விளக்கமாக கூறினார். கூட்டத்தில் கலந்து கொண்ட கழகத் தோழர்கள் தாங்கள் பெரியார் இயக்கத்தில் இணைய காரணம் என்ன என்பதை விவரித்து பேசினார்கள்.

தீர்மானங்கள்

ஜனவரியில் நடைபெறுகின்ற உலக நாத்திகர்கள் மாநாட்டில் கலந்து கொள்வது, ‘மாடர்ன் ரேசனலிஸ்ட்' இதழுக்கு சந்தா சேர்ப்பது, மாவட்டத்திற்கு என ஒதுக்கப்பட்ட இலக்கை முடித்துக் கொடுப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தோழர் கே.எஸ்.ரங்கசாமி நன்றி கூறினார்.

மேட்டுப்பாளையம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவராக த.வீரமணி (வனச்சரகர் ஓய்வு), செயலாளராக திருவள்ளுவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேட்டுப்பாளையம் மாவட்ட அமைப்பாளர் செல்வராசு, நகர தலைவர் கோ.அர.பழனிசாமி, நகர செயலாளர் வெ.சந்திரன், நத்தகுமார், அன்பரசு, விக்னேஷ், நகர செயலாளர் வெ.சந்திரன், நந்தகுமார், அன்பரசு,

விக்னேஷ், மணி, முருகேசன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner