எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொத்தவாசல், நவ.26 நன்னிலம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளராகவும், கொத்த வாசல் தந்தை பெரியார் நற்பணி மன்ற செயலாளராகவும் பணி யாற்றி உடல்நலக்குறைவால் மறைந்த இளஞாயிறு அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி கொத்த வாசல் கிராமத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட கழக தலைவர்  கோபால் கலந்து கொண்டு இளஞாயிறு அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்.

திராவிட முன்னேற்ற கழகத் தைச் சேர்ந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மணிமாறன் தலைமை வகித்தார். நாகப்பட் டினம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் நெப்போலியன் முன் னிலை வகித்தார். திராவிடர் கழக சொற்பொழிவாளர் இராம. அன்பழகன் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் நாகை மாவட்ட செயலாளர் பூபேஷ்குப்தா, இளை ஞரணி தலைவர் இராச.முருகையன், திமுக திருவாரூர் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தியாகு, திருவாரூர் மாவட்ட துணைத் தலைவர் வீர.கோவிந்தராசு, மக்கள் அதி காரத்தைச் சேர்ந்த ஆசாத், தமிழர் தன்மானப் பேரவை இராசன், திருவாரூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர் கரிகாலன், தமிழர் கழகத்தைச் சார்ந்த அமிர் தலிங்கம், உட்பட பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள், கிராம வாசிகள், உறவினர்கள் கலந்து கொண்டனர். இளஞாயிறு அவர் களின் தம்பி இளஞ்சேரன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner