எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடியாத்தம், நவ.27  தேசியப் பள்ளிகளுக்கு இடையேயான 63ஆவது தேசியச் சதுரங்கப் போட்டிகள் தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் நடைபெற்றன. 10.11.2017 முதல் 14.10.2017 வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் சதுரங்க வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக  19 வயதிற்கு உட்பட்டோர் மாணவியர் பிரிவில் தேசியச் சதுரங்கப் போட்டியில் பங்குபெற்ற குடியாத்தம் பகுத்தறிவாளர் கழக செந்தமிழிச்சரவணன் சத்தியப்பூங்குழலி வாழ்விணையரின் மகள் செந்தமிழ்யாழினிக்கு கழக பொதுச் செயலாளர்  முனைவர் துரை.சந்திர சேகரன் பாராட்டி வாழ்த்துக் கூறினார்.

மாவட்ட தலைவர் வி.இ. சிவக்குமார், மாவட்ட ப.க செயலாளர் இர.அன்பரசன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ந.தேன்மொழி, விடுதலை வாசகர் வட்ட செயலாளர் வ.இரவிக்குமார், பகுத்தறிவாளர் கழக செந்தமிழ் சரவணன், நகர மகளிர் பாசறை தலைவர் சி.லதா, அன்னை மணியம்மையார் சிந்தனைக்களம் பொருளாளர் இர.உஷா நந்தினி ஆகியோர் உடன் இருந்தனர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner