எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடியாத்தம், டிச.4 குடி யாத்தம் நகரில் 25.11.2017 அன்று மாலை 6 மணியளவில் நெல்லூர்பேட்டை பகுதியில் கழக மகளிரணியினர்சார்பில் Ôபெண் ஏன் அடிமையானாள்?Õ புத்தக பரப்புரை இயக்கம் வெகுசிறப்பாக நடைபெற்றது.

வேலூர் மாவட்டத் தலைவர் வி.இ.சிவக்குமார் -- லதா ஆகியோரின் இல்லத்தில்  நடைபெற்ற பரப்புரை இயக் கம் குடியாத்தம் நகர பாசறைத் தலைவர் சி.லதா தலைமையில் நடைபெற்றது.

மணியம்மையார் சிந்தனை களம் செயலாளர்   ரேவதி, துணை செயலாளர் ரேணுகா, துணைத் தலைவர் மு.காந்திமதி முன்னிலையில், வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ந.தேன்மொழி வாழ்த் திப் பேசினார். இளைஞரணி தே.ஆ.ஓவியா சிறப்புரையாற் றினார். புத்தக பரப்புரை இயக்கத்தில் கலந்துகொண்ட அப்பகுதி வாழ் பெண்கள் அனைவரும் Ôபெண் ஏன் அடிமையானாள்?Õ புத்கத்தை வாங்கி பயன் பெற்றனர்.

மகளிர் நலன் பேணும் வினா விடை நிகழ்வில் முதல் பரிசு வென்ற மல்லிகா, ரேகா ஆகியோருக்கு பரிசுகள் வழங் கப்பட்டது. புத்தகப் பரப்புரை இயக்கத்தில் மணியம்மையார் சிந்தனைக் களம் உமாராணி, சாரதா, பாக்கியம், கலாவதி, மல்லிகா, ச.ரேவதி, கோமதி, ரேகா, தனலட்சுமி, மேகலா, சுதா, பரிமளா, லோகநாயகி, பூங்கொடி, உமா மற்றும் பகுதி வாழ் மகளிர் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner