எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருச்சி, டிச. 5 திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி யில் தமிழர் தலைவர் அவர் களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினையொட்டி மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையைவளர்க்கும் பெரியார் அறிவியல் கண்காட் சியை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி புல முதன்மையர் பேராசிரியர் முனைவர்

ஹா. முத்துராஜன் அவர்கள் 04.12.2017 அன்று காலை

9 மணியளவில் திறந்து வைத்து சிறப்பித்தார்.

தொடர்ந்து இரண்டு நாட் கள் நடைபெறும் இக்கண்காட் சியின் துவக்க விழாவிற்கு பெரியார் மருந்தியல் கல்லூரி யின் முதல்வர் முனைவர்

இரா. செந்தாமரை தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி புல முதன்மையர் பேராசிரியர் முனைவர்

ஹா. முத்துராஜன் அவர்கள் தமது சிறப்புரையில் அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் தங்களது படைப்புகளை வெளிப் படுத்துவதோடு நில்லாமல் அறிவியல் கண்டுபிடிப்பு களையும், அதன் நன்மைகளை யும் மக்களிடத்திலே கொண்டு சேர்க்க வேண்டும்.

மேலும் ஆராய்ச்சி இதழ் களில் தங்களின் அறிவியல் தொடர்பான கட்டுரைகளை பிரசுரிப்பதிலும், காப்புரிமை பெறுவதிலும், தமிழ்நாடு ஆராய்ச்சிக் கழகம் மற்றும் மத்திய உயர்தொழில் நுட்ப துறை போன்ற கழகங்களிலி ருந்து மானியங்களைப் பெற் றும் மருந்தியல் துறையில் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேரா சிரியர் முனைவர் அ.மு. இஸ் மாயில், துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ண மூர்த்தி, பெரியார் அறிவியல் கண்காட்சியின் ஒருங் கிணைப்பாளர் பேரா. கே. சக்தி வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக முனைவர் த. சிறீவிஜய கிருபா வரவேற்றார். முனைவர்

பி. கவிதா அவர்கள் நன்றியுரை யாற்ற விழா இனிதே நிறை வுற்றது.

பெரியார் அறிவியல் கண்காட்சியில் நானோ தொழில் நுட்பம்,  விவசாய மேம்பாடு, நீர் மேலாண்மை, காற்று மாசுபாடு, நோயில்லா ஆரோக்கியமான சமுதாயத்தை படைக்கும் விதமான உடலு றுப்புக் கொடை, டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு, புற்று நோய், மறதி நோய், சர்க்கரை நோய், கருப்பை நோய் எய்ட்ஸ், வைரஸ் தடுப்பு முறைகள், மூலிகை மருத்துவம், ஸ்டெம் செல் ஆராய்ச்சி போன்ற மருந்தியல் முன்னேற்றத்தை பறைசாற்றும் விதமான படைப்புகள்போன்ற 55க்கும் மேற்பட்டவை கண் காட்சியில் காண்போரை கவரும் விதமாக இடம் பெற்றிருந்தன. பெரியார் அறிவியல் கண்காட்சியானது தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் திருச்சி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner