எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, டிச.5 திருச்சி  பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அய்யாவின் 85ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 04.12.2017 அன்று காலை 10 மணியளவில் பள்ளியின் கலை அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குப் பள்ளியின் முதல்வரும் பெரியார் கல்விக் குழுமங்களின் இயக்குநருமான எம்.இராதாகிருட்டிணன் தலைமை தாங்கினார்.  மொழி வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் முன்னதாக பள்ளி யின் துணை முதல்வர் நா.அருண்பிரசாத் வரவேற்புரை ஆற்றி வருகை புரிந்தோரை வர வேற்றார். தொடர்ந்து அய்ந்தாம் வகுப்பு மாணவி செல்வி.ஓவியா தன் மழலைக் குரலில் "தமிழர் தலைவரின் வாழ்வும் தொண்டும்" என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றியது குறிப்பிடத் தகுந்ததாக இருந்தது.

பள்ளியின் முதல்வர், ம.இராதாகிருட்டிணன் சிறப் புரை ஆற்றுகையில்: "இன் றைய  மாணவர்கள் இந்த அளவு சுதந்திரமாக தாங்கள் விரும்பிய படிப்பினைப் படிப் பதற்கும் பெண்கள் கல்வியறிவு பெற்றதற்கும் காரணம் தந்தை பெரியாரும் பச்சை தமிழர் காமராசரும் தான், அவர்கள் காட்டிய வழியில் இன்றைக்கு 120 கல்வி நிறுவனங்களுக்கும் மேலாக அமைத்து கல்விப் பணியாற்றி வரும் தமிழர் தலைவர் தம் 10 வயதில் பெரி யாரின் கொள்கை முழக்கத்தால் ஈர்க்கப்பட்டு கடந்த 75 ஆண்டு களாக அரும் சாதனைகளையும், தொண்டுகளையும் புரிந்து வரு வதாகக் கூறி, அவரது பிறந்த நாளை இன்று நாம் கொண் டாடுவது நமக்கெல்லாம் கிடைத்த ஒரு நல் வாய்ப்பு என்றும், அவர் வழியில் தொடர்ந்து சென்றால் என்றென் றும் வெற்றிதான்" என்றும் உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து ஆசிரியரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியின் அணிகளுக்கிடையே நடைபெற்ற உள்ளரங்க விளை யாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு வெற்றி கோப்பைகள் வழங்கப் பட்டன. ஒட்டுமொத்த வெற் றிக்கான சுழற் கோப்பையை பச்சை அணியினர் (நிக்ஷீமீமீஸீ பிஷீusமீ) பெற்றனர்.

இறுதியில் பள்ளியின் துணை முதல்வர்  அ.நிர்மலா நன்றி கூற நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களைப் பள்ளியின் மழலையர் பிரிவு ஒருங்கிணைப்பாளர்  ச.விஜயலெட்சுமி, நடன ஆசிரியர்  ஜெ.பிரான்சிட்டா ஆகியோர் சிறப்பாகச் செய் திருந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner