எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விருகம்பாக்கம், டிச. 9 27.11.2017 காலை 10 மணி அளவில் சென்னை விருகம் பாக்கம், கணபத்ராஜ் நகரில் பெரியார் பெருந்தொண்டர் குடந்தை நாதன் அவர்களின் 'திரு.ராஜம்மாள் இல்லத்'தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். இல்லத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த குடந்தை நாதன் அவர்களின் தாயார் 'திரு.ராஜம்மாள்' படத்தையும் திறந்துவைத்தார். உடன் 'திரா விட இயக்க தமிழர் பேரவை' பொதுச் செயலாளர் பேராசிரி யர் சுப.வீரபாண்டியன் அவர் களும் பங்கேற்றார்.

மழையின் காரணமாக வாழ்த்துரைக்கு பதிலாக அனைவரும் நேரிடையாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். ஆசிரியர் அவர் களும் சுப.வீ. அவர்களும் குடும்பத்தினருடனும் தோழர் களுடனும் கலந்துரையாடினர் ஆசிரியர் அவர்கள் குடந்தை நாதன் அவர்களின் கொள்கை உறுதியையும், அவரின் துணை வியார் அவர்களை 1980களில் நடைபெற்ற சைதாப்பேட்டை 'சமூக நீதி' மாநாட்டின் பேரணியின்போது (தியாகராயர் நகர்) மாடு முட்டி, காயம் ஏற்பட் டதை நினைவு கூர்ந்தார். தி.மு.க. தோழர்கள் பெரு மளவில் கலந்து கொண்டு ஆசிரியர் அவர்களுக்கும், சுப.வீ. அவர்களுக்கும் சால் வைகளை அணிவித்தனர்.

ஆசிரியர் அவர்களுக்கு குடந்தை நாதன் அவர்கள் சால்வை அணிவித்து ஒரு சவரன் தங்க மோதிரத்தை 'பெரியார் உலக' நிதியாக வழங்கினார்.

கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, கழக பொதுக் குழு உறுப்பினர் ஆர்.டி.வீரபத் திரன், மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர்  செ.ர.பார்த்தசாரதி, அமைப் பாளர் மு.ந.மதியழகன், துணைத் தலைவர் சி.செங்குட்டுவன், துணைச் செயலாளர் கோ.வீ. ராகவன், சா.தாமோதரன், குடந்தை புவனேந்திரன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன், தி.மு.க.பகுதி செயலாளர் ம.இராசா, சு.இளங்கோவன் (முன் னாள் மாமன்ற உறுப்பினர்} தி.மு.க. பகுதி துணைச் செய லாளர் சா.நாகராசன், தி.மு.க. 128ஆவது வட்டச் செயலாளர் மு.கோவிந்தராசன், ஆர்.டி.நல் லேந்திரன், முத்தையா, வி.ச.சங் கரன், வி.பி.காசிநாதன், ஆர்.சுரேஷ், தங்கவேலு, மு.திருமலை, பெரியார் மாணாக்கன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வழி நெடுக கழகக் கொடிகள் நடப் பட்டு, நெகிழித்திரைகளும் வைக்கப்பட்டிருந்தன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner