எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீடாமங்கலம், டிச. 14 பட்டுக் கோட்டை கழக மாவட்டம் நீடாமங் கலம் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி, திராவிடர் கழகத்தின் சார்பில் 30.11.2017 அன்று மாலை 6 மணியளவில் நீடாமங்கலம் நிஷா திருமண மண்டபத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதியுள்ள ‘பெரியார் கொட்டிய' போர் முரசு என்ற நூலும் திருநெல்வேலி பேராசிரியர் அ.திருநீலகண்டன் அவர்கள் எழுதி யுள்ள ‘நீடாமங்கலம் ஜாதிய கொடு மையும் திராவிட இயக்கமும்' என்ற இரு நூல்கள்அறிமுக விழா மறைந்த பெரியார் பெருந்தொண்டர் ஆ.சுப்பிர மணியன் அவர்களின் நினைவு மேடை யில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ப.க. மாவட்டப் புரவலர் ப.சிவஞானம்  தலைமை வகித்தார். மாநில பகுத்தறிவு ஆசிரிய ரணி அமைப்பாளர் சி.இரமேசு, மாவட்ட ப.க. தலைவர் த.வீரமணி, ஒன்றிய கழக தலைவர் கோ.கணேசன், ஒன்றிய கழக செயலர் நா.ரவிச்சந்திரன், நகரத் தலைவர் பி.எஸ்.ஆர்.அமிர்தராஜ், மு.ஒன்றியச் செயலாளர் ம.பொன்னு சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஅய் ஒன்றியச் செயலாளர் நடேச.தமிழார்வன், வி.சி.க. ஒன்றியச் செய லாளர் பெ.இராஜப்பா (எ) புதியவன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்டச் செயலாளர் பி.கந்த சாமி, த.மு.எ.ச. மாவட்ட துணை செயலாளர் பி.அம்பிகாபதி ஆகியோர் நூல்களைப் பெற்றுக்கொண்டு கருத் துரை ஆற்றினார்கள்.

முனைவர் அன்பழகன்

பெரியார் கொட்டிய போர்முரசு நூலை அறிமுகம் செய்து கழகப் பேச் சாளர் முனைவர் அதிரடி அன்பழகன் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எங்கு, எந்த இடத்தில் ஆபத்து வந்த போதெல்லாம் எல்லாம் போர்முரசு கொட்டி நம்மை காத்தவர் பெரியார். பார்ப்பனர்கள் தமிழ்தாத்தா வேடம் பூண்டு வந்தாலும், எவ்வடிவில் வந்தா லும் குறிவைத்துத் தாக்கியவர் பெரியார். அரசியலில், கல்வியில், பொருளாதாரத் தில், சமூகத்தில் என எந்தத் திசையில் ஆபத்து வந்தாலும் போர்முரசு கொட் டிக்காத்தவர் பெரியார். அதை இளைய தலைமுறை அறியும் வகையில் ஆசிரி யர் தொகுத்து இருக்கிறார் என அறி முகம் செய்து பேசினார்.

எழுத்தாளர் வே.மதிமாறன்

நீடாமங்கலம் ஜாதிய கொடுமையும் திராவிட இயக்கமும் என்ற நூலை அறிமுகம் செய்து வைத்துப் பெரியாரி யல் எழுத்தாளர் வே.மதிமாறன் அவர்கள் பார்ப்பனியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் பெரியார் அம்பேத்கர் கண்ணாடி கொண்டு பார்த்தால்தான் புரியும். எந்த வகையில் எல்லாம் ஒடுக்கு முறைவருகிறதோ அதை அடியோடு களையும் வரை உழைத்தவர் பெரியார். தாழ்த்தப்பட்ட சமூகத்தவரான பாவாடை என்பவரை நீடாமங்கலம் நகர்மன்ற உறுப்பினராக்கி சமமான நிலையை ஏற்படுத்தி இந்தியா விற்கே சமூக நீதிக்கு வழிகாட்டியது பெரியாரியம். அரசியலில் விமர்சிக்கும் பார்ப்பனர்களைவிட அதிகம் ஆபத்து நிறைந்தவர்கள் இந்த இலக்கிய பார்ப்பனர்கள் அவர்களை அடையாளம் காண வேண்டும். எந்த வகையிலும் இந்துத்துவா தலையெடுக்காத வண்ணம் திராவிட இயக்கம் பாடுபட்டது. இப்போதும் பாடுபடுகிறது எனவும் இந்நூலை ஆய்வு செய்த பேராசிரியரைப் பாராட்டியும், நூல்விலை குறைக்க வேண்டும். மேற்கோள்களில் கூறிய வரின் பெயரை அச்சிட வேண்டும். சுயமரியாதைக்காரர்களை சு.ம என்று இருப்பதை மாற்ற வேண்டும். எனவும் கூறி அறிமுகம் செய்து சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை தலைவர் கோரா.வீரத்தமிழன், ஒன்றிய இளைஞரணித் தலைவர் க.சேகர், நீடாமங்கலம் நகர இளை ஞரணி செயலாளர்அய்யப்பன், இளை ஞரணி துணை செயலாளர் க.இராஜேஷ் கண்ணன், நீடாமங்கலம் கழக இளை ஞரணி க.பூபாலதாஸ், ப.க. நகரத் தலைவர் அ.கலைச்செல்வன், நகர ப.க. செயலர் வா.சரவணன், மாணவரளி பவு.பரமசிவம், பூவனூர் சந்திரசேகரன், மாணவரணி தினேஷ், ப.க. ஒன்றியச் செயலாளர் நா.உ.கலியாணசுந்தரம், ஆசிரியரணி தோழர்கள், ஆதனூர் இளையராஜா, நீடாமங்கலம் அருண், சத்தியமூர்த்தி, அய்யப்பன் போன்ற தோழர்களும், நீடாமங்கலம் நகர பொதுமக்களும் ஏராளமாக பங்கேற்றுச் சிறப்பித்தனர். நீடாமங்கலம் நகரச் செயலாளர் கி.இராஜேந்திரன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner