எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னகுணம், டிச. 15 விழுப்புரம் மாவட்டம் சென்ன குணம் திராவிடர் கழக பெரியார் பெருந்தொண்டர் ஆ.மு.இராமானுசம் நினை வேந்தல் - படத்திறப்பு நிகழ்ச்சி 10.12.2017 அன்று காலை 11 மணியளவில் ஜெயம் அண்ணா மலை மண்டப வளாகத்தில் சென்னகுணம் கழகத் தலைவர் வி.சுந்தரமூர்த்தி தலைமையில் நடந்தது. இரா.சித்தார்த்தன் வரவேற்புரை ஆற் றினார்.

முன்னதாக தந்தை பெரியார் சிலைக்கும், ஆ.மு.இராமானு சம் நினைவிடத்திலும் மாலை அணிவித்து கொள்கை முழக் கம் செய்யப்பட்டது. மாநாடு போல் கழக கொடிகளும், பதா கைகளும் கட்டப்பட்டிருந்தன. பெருமளவில் மக்கள் திரண்டி ருந்தனர்.

மறைந்த இராமானுசத்தின் படத்தினை திறந்து வைத்து மூடநம்பிக்கைகளை, சடங்கு சம்பிரதாயங்களை விளக்கி கழகப்பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேரன் நினைவுரையாற்றினார். பார்ப் பனர்களின் பணம் பறிக்கும் தந்திரங்கள் பற்றியும், பெரியார் தொண்டர்களின் அருமை, பெருமை பற்றியும் விளக்க மாகப் பேசினார். தேவரடியார் குப்பம் முனுசாமி, மண்டல கழக தலைவர் க.மு.தாஸ், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் பி.பட்டாபிராமன், கல்லக்குறிச்சி மாவட்ட தலை வர் ம.சுப்பராயன், விழுப்புரம் மாவட்ட தலைவர் ப.சுப்ப ராயன், மாவட்ட செயலாளர் கோபண்ணா, திருக்கோவிலூர் கழக தலைவர் தி.பாலன், செயலாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர் கருப்புச்சட்டை ஆறுமுகம், வேட்டவலம் நகர தலைவர் இரா.திருமலை, விழுப்புரம் நகர தலைவர் பூங்கான், நல்லாப் பாளையம் ஏழுமலை, கடலூர் மண்டல இளைஞரணி செயலாளர் வி.திராவிடன், பகுத்தறிவு ஆசிரி யரணி தண்டபாணி, விழுப் புரம் ப.க. தலைவர் கார் வண்ணன், கொள்ளூர் சக்தி வேல் ஆகியோர் நினைவுரை யாற்றினர். மு.இரா.அன்பரசு நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியை செவிமடுத்த பொது மக்களில் சிலர் இயக்கத்தில் இணைந்து செயல்பட ஆர்வம் தெரிவித்த னர். பெரும் பிரச்சார வாய்ப் பாக நிகழ்ச்சி அமைந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner