எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வேகாக்கொல்லை, டிச.18 கடலூர் மாவட்டம் வேகாக் கொல்லை கழக தலைவர் ப.கதிர்வேல் தாயார் ப.மணி யம்மாள் நினைவேந்தல் -  படத்திறப்பு 28.11.2017 அன்று காலை 11 மணியளவில் வேகாக்கொல்லையில் மாவட்ட கழக செயலாளர் நா.தாமோதரன் தலைமையில் மாவட்ட தலைவர் தென் சிவக்குமார், மண்டல செய லாளர் சொ.தண்டபாணி ஆகி யோர் முன்னிலையில் நடந் தது. மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல் வரவேற்புரை யாற்றினார்.

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அம்மையாரின் படத்தினை திறந்து வைத்து நினைவு ரையாற்றினார். வடலூர் கழக தலைவர் புலவர் ராவணன், மண்டல இளைஞரணி செய லாளர் வி.திராவிடன், குறிஞ்சிப்பாடி கழக தலைவர் தா.கனகராசு, மாவட்ட இளை ஞரணி தலைவர் நா.உதய சங்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.பஞ்சமூர்த்தி, வேகாக்கொல்லை கழக செயலர் வேணுகோபால், அப் பியம் பேட்டை கழக தலைவர் கோ.தனசேகரன், செயலாளர் கோ.வேலு, இந்திரா நகர் கிளை தலைவர் இரா.கண்ணன், செயலாளர் கனகராசு, குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளர் இரா.குணசேகரன் ஆகியோர் நிகழ்வில் பங்கேற் றனர். முடிவில் ப.கதிர்வேல் நன்றி கூறினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner