எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காஞ்சிபுரம், ஜன. 4, சுயமரி யாதைச் சுடரொளி மிசா டி.ஏ.கோ பாலன் அவர்களின் வாழ்விணை யரும் காஞ்சிபுரம் கழக மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் டி.ஏ.ஜி. அசோகன்   அவர்களின் அன்னையாருமான பர்வதம்மாள் அவர்களின் படத்திறப்பு நினை வேந்தல் நிகழ்ச்சி கடந்த  6.12.2017 அன்று காலை 10 மணியளவில், பெரிய காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சங்க பொன்விழா கட்டிடத்தில் நடைபெற்றது.

திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங் குன்றன் அவர்கள் பர்வதம்மாள் அவர்களின் படத்தைத் திறந்து வைத்தார்.

டி.ஏ.ஜி குடும்பமும் அம்மை யாரும் ஆற்றிய தொண் டுகள் அவர்களின் குடும்பத்தினரால்  தொடர வேண்டுமென்றும் தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகி யோரி டம் கொண்ட மதிப்பு, கொள்கை ஈர்ப்பு தொடர வேண்டும் என்றும் கவிஞர் தம் உரையில் குறிப் பிட்டார்.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சி.வி.எம்.அ. சேகரன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் தொகுதி  சட்ட மன்ற உறுப்பி னருமான க.சுந்தர்,  மாநில மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வழக்குரைஞர் சி.வி.எம்.பி. எழிலரசன்,  நகர செயலாளர் சன்பிராண்ட் கே. ஆறுமுகம், தி.மு.க சொற்பொழி வாளர் புஞ்சை. வில்லாளன்  முதலியோரும் காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஜி.வி. மதியழகன்,  காங்கிரஸ் மூத்த முன்னோடி வி.பன்னீர்செல்வம் ஆகியோரும், ம.தி.மு.க சார்பில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் த.மகேஷ், ராமதேவன், சம்பத் ஆகியோரும் இந்திய பொது வுடைமைக் கட்சி சார்பில் மாவட்ட துணை  செயலாளர் சீனிவாசன், முற்போக்கு சமூக நீதிப் பேரவை நிறுவனர் மருத் துவர் விமுனாமூர்த்தி, கோதண் டன் ஆகியோரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க செயல்தலைவர் தே.தயாளன், மா.பெ.பொ.க. சார்பில் மாவட்ட செயலாளர் நடராஜன், ஜெய பிரகாஷ், திருக்குறள் பேரவை குறள்அமிழ்தன், பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் காஞ்சி அமுதன்,  டி.ஏ.ஜி குடும் பத்தினர் சார்பில் மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் பொது மேலாளர்  வி.இராதா கிருஷ்ணன்  முதலியோர்  நினை வேந்தல் உரையாற்றினர்.

காஞ்சி மண்டல தலைவர் பு.எல்லப்பன் , அரக்கோணம் மாவட்ட கழக அமைப்பாளர்  ஜீவன்தாஸ், திருவள்ளூர் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மணி, செயலாளர்  அறிவுச்செல் வன், தலைமை கழகச் சொற் பொழிவாளர் பொதட்டூர் புவி யரசன், திருவள்ளூர்   ஸ்டாலின், தாம்பரம் மாவட்ட தலைவர்  ப. முத்தையன், செயலாளர்  நாத் திகன், மறைமலைநகர் துரை.முத்து, கருணாநிதி, செய்யாறு மாவட்ட கழகத் தோழர்கள் வட மணப்பாக்கம் வெங்கட்ராமன், பேராசிரியர் முனைவர் தமிழ் மொழி,   காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தோழர்கள் ரவீந்திரன், வேலாயுதம், செ.ரா. முகிலன், இரா. சக்திவேல், அரவிந்தன், பிரபாகரன், தங்கராஜ்,  அறிவு மணி,  ஏகாம்பரம், கு. வினோத்,  ஆ.மோகன்,  சுங்குவார்சத்திரம் நட்ராஜ், கல்பாக்கம் பக்தவச்சலம், ஆ.குமார், ஒலிஒளி அமைப் பாளர்கள் அருணாச்சலம், சேகர்,  ஆசிரியர் கிறிஸ்டோபர் பத்மசிங் முதலிய தோழர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  ஏராளமான கழகத்தோழர்கள் , பல்வேறு அரசியல் கட்சியினரும் குடும்ப உறவினர்களும் நிகழ்வில்  பங் கேற்றனர்.

கலந்துரையாடல் கூட்டம்

பிற்பகல் 2 மணியளவில் காஞ்சிபுரம், தாம்பரம், மாவட்ட கழகத் தோழர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் கழகத் துணைத்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

மறைந்த கழகத் தோழர்கள் வெற்றிஎழிலன்,  காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் த.சத்தியா, செங்கற்பட்டு கழக மாவட்ட தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அ.கோ.கோபால்சாமி, காஞ்சி நகர தொழிலாளரணி அமைப் பாளர் குழந்தைவேலு,  டி.ஏ.ஜி. பர்வதம்மாள், முன்னாள் மாவட்ட செயலாளர் அரங்க. ஜானகிராமன்  ஆகியோர் மறை வுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது.

ஆர்ப்பாட்டம்

மாலை 4 மணியளவில் காஞ்சிபுரம் காந்திசாலையில் உள்ள பெரியார் நினைவுத்தூண் அரு கில்,  மனிதநேய மக்கள் கட்சி சார்பில்,  பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து  நடந்த ஆர்ப்பாட் டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் டி.ஏ.ஜி. அசோகன், துணை செயலாளர் இ. ரவீந்திரன்,  தாம்பரம் மாவட்ட தலைவர் ப. முத்தையன், செயலாளர் நாத்தி கன் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner