எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஜன.9 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 44 ஆம் ஆண்டு நினைவு நாளான 24.12.2017 அன்று தமிழகம் முழுவதும் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

சாத்திப்பட்டு

அண்ணாகிராம ஒன்றியம் சாத்திப்பட்டு கிராமத்தில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.கந்தசாமி தலைமையில் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை யணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. க.அமுதா, க.திராவிடமணி, கு.பிரபஞ்சன், சா.கார்குழலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருவாமூர்

பண்ருட்டி ஒன்றியம் திருவாமூரில் பெரியார் சமத்துவ புரத்தில் தந்தை பெரியார் சிலைக்கு இரா.சிவா தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இரா.தசரதன், சே.தேவசுந்தரம், சு.குமரேசன், இரா.சிவசங்கர், கோ.நிதிஷ், கு.லோகேஷ், பிரபாகரன் மற்றும் விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம்

குடியாத்தம் - சிறகுகள் பண்பலை வானொலியில் தந்தை பெரியார் நினைவுநாள் நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச்செயலாளர் க.அருள்மொழி, பகுத்தறிவாளர் கழகம் சி.சரவணன், திராவிட முன்னேற்ற கழக தலைமை கழக பேச்சாளர் வி.எ.அன்பு ஆகியோர் பங்கேற்றனர்.

பெரியாரின் 44ஆவது ஆண்டு நினைவு நாள் அன்று குடியாத்தம் சிறகுகள் பண்பலை வானொலியில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது, நிகழ்ச்சியை ஹரி ஹரன் ஏற்பாடு செய்து தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பெரியாரின் கடவுள் மறுப்புத் தத்துவம் பற்றிய கேள்வி களுக்கு அருள்மொழியும், சி.சரவணனும் விளக்கமளித் தனர். நீட் தேர்வு ஒழிப்பு, இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு பற்றியும் திராவிட கட்சிகளின் ஆட்சியில் பெரியாரின் கொள்கைகள் செயல் படுத்தப்பட்டது பற்றியும் மூவரும் விளக்கமளித்தனர். மூட நம்பிக்கைகள், பெண்விடுதலை, அரசியலில் பெண்களுக் கான இடஒதுக்கீடு, ஆகியவை பற்றி சரமாரியாக ஹரி ஹரன் தொடுத்த கேள்விகளுக்கு அருள்மொழி, சரவணன், அன்பு ஆகிய மூவரும் தெளிவான விளக்கங்களை கொடுத்தனர். தந்தை பெரியார் நினைவுநாளில் பெரியாரின் சிந்தனைகளை பரப்ப சிறகுகள் வானொலி எடுத்த முயற் சிக்கு பாராட்டுகளை தெரிவித்து அருள்மொழி நன்றி கூறினார்.

 

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 44ஆவது நினைவு நாள் விழா 24.12.2017 காலை 10 மணியளவில் மாவட்டத் தலைவர் பி.பட்டா பிராமன் தலைமையில், மாவட்ட செயலாளர் ப.அண்ணா தாசன்,மாவட்ட ப.க.தலைவர்.பா.வெங்கட்ராமன், மாவட்ட அமைப்பாளர் சு.ஏழுமலை, மாவட்டத்துனை தலைவர் சா.கிருட்டிணன், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.திருமலை, ஆகியோர் முன்னிலையில், திருவண்ணாமலை அண்ணா சிலை அருகிலிருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதை தொடர்ந்தது பெரியாரின்சிலையின் முன் உறுதி மொழி எடுக்க தந்தை பெரியாரின் சிந்தனைகளையும், வரலாற்று சுவடுகளையும், எடுத்துரைத்த மாவட்டத் தலைவர் வேட்டவலம் பி.பட்டாபிராமன் அவர்களின் உரையை   தொடர்ந்து உறுதி மொழி  ஏற்கப்பட்டது,   இந்நிகழ்ச்சியில்  பொதுக்குழு உறுப்பினர் முனு.ஜானகி ராமன், போளூர் நகர தலைவர் ப.பழனி, செங்கம் ஒன்றிய தலைவர் கு.ராமன், போளூர் ஒன்றிய தலைவர் எம்.எஸ்.பலராமன், போளூர் நகரசெயலாளர் ஓகூர் சுந்தர மூர்த்தி, புகைப்பட கலைஞர் மு.ராஜீவ்காந்தி, வேட்டவலம் அருண்குமார், துரை.செந்தில்குமார், மேல்செங்கம் கிளை தலைவர் பலராமன், வேட்டவலம் மகளிரணி தி.அம்பிகா, க.சண்முகம், ஆ.சக்திவேல், திமுக நகர பொறுப்பாளர்கள், கழக தோழர்கள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் நகர செயலாளர் மு.காமராஜ் நன்றி கூறினார்.

அவிநாசி

திருப்பூர் மாவட்ட அவிநாசியில் தந்தை பெரியாரின் 44ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தாலுகா அலு வலகம் முன்பு பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் ஆ.பொன்னுசாமி, பு.ப.பழனிசாமி, ஜெயராஜ், இளம்குமரன், காட்டாறுகுழு கிளாகுளம் செந்தில்குமார் ஆகியோர்.

புள்ளம்பாடி

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் நினைவு நாள் 24.12.2017 புள்ளம்பாடியில் கடைப்பிடிக்கப்பட்டது.

காலை 10 மணியளவில் புள்ளம்பாடி பெரியார் படிப் பகத்தில் அமைந்துள்ள பெரியாரின் முழுஉருவ சிலைக்கு புள்ளம்பாடி நகர மக்கள் நல இயக்கத்தின் தலைவர் ரெ.இராதாகிருஷ்ணன் மாலை அணிவித்தார். உடன் மாவட்ட கழக துணை செயலாளர் த.செல்வம், ஒன்றிய கழகத் தலைவர் மு.இளங்கோ, நகர தலைவர் கவிஞர் பொற்செழியன் சமூக ஆர்வலர் பெ.கோவிந்தராசு மற்றும் ஏராளமான பொதுமக்களும், ஊர் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

 

செங்கல்பட்டு

செங்கல்பட்டு நகரில் பழைய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட துணைத் தலைவர் இரா.கோவிந்தசாமி தலைமையில் மாவட்ட செயலாளர் செங்கை பூ.சுந்தரம் மாலை அணி வித்தார். மாவட்ட அமைப்பாளர் பொன்.இராசேந்திரன், க.தனசேகரன், தமிழாசிரியர் நா.வீரமணி, மாவட்ட இளை ஞரணி தலைவர் ம.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றும் திமுக பொறுப்பாளர்கள், அதிமுக பூக்கடை பாலாஜி, மு.மனோகரன் (சிபிஅய்) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

குடியாத்தம்

24.12.2107 அன்று காலை 11 மணியளவில் குடியாத்தம் புவனேசுவரிபேட்டை ஓவிஸ் பொலிவு நிலையத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் நினைவு நாள் அன்றே, வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் இர.அன்பரசன் அவர்களின் தந்தை ந.இரத்தினம் அவர்கள் மறைந்துள்ளதால், தந்தை பெரியார், ந. இரத்தினம் ஆகி யோரின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி அன்புமொழி இல்லத்தின் சார்பில் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார் தலைமை தாங்கினார், வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ந.தேன்மொழி வரவேற்புரையாற்றினார், ஓவியா  அன்பு மொழி தொகுப்புரை வழங்கினார், தே.அ.புவியரசு, க.சவு. இந்துஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர், ந.இரத்தினம் படத்தினை அவரது இணையர் இர.லட்சுமியம்மாள் அவர்களும், தந்தை பெரியார் படத்தினை அன்னை மணியம்மையார் சிந்தனை களம் தலைவர் ச. கலைவாணி அவர்களும் திறந்துவைத்தனர். வேலூர் மண்டல தலைவர் வி.சடகோபன், மாவட்ட மகளிரணி தலைவர் ச.ஈஸ்வரி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் க.அருள்மொழி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மா.அழகிரிதாசன், மகளிர் பாசறை ச.இரம்யா, திராவிடர் கழக இளைஞரணி சரேவதி ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர். வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் இர.அன்பரசன் நன்றி கூறினார். நகர திராவிடர் கழக தலைவர் வி.மோகன், மனிதநேய அறக்கட்டளை செயலாளர் வ.இரவிக்குமார், அன்னை மணியம்மையார் சிந்தனை களம் செயலாளர் ரேவதி, நகர மகளிர்பாசறை தலைவர் சி.லதா, அன்னை மணியம்மையார் சிந்தனைக் களம் பொருளாளர் இர.உஷாநந்தினி, திராவிடர் கழகம் ஓவியர் சிவா, இராமு, மற்றும் திராவிடர் கழக தோழர்களும், அன்னை மணியம்மையார் சிந்தனைக் களம் உறுப்பி னர்களும், மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

 

உல்லியக்குடி

அரியலூர் மாவட்டம்  உல்லியக்குடி பெரியார் சிலைக்கு தி.மு.க ஒன்றியசெயலாளர் சவுந்தரராஜன் அவர்களால் மாலை அணிவிக்கப்பட்டது. மற்றும் தி.மு.கழக பிரமுகர்கள் சி.நேத்திரசாமி, சி.கணேசன், வை.சாமிதுரை, பூ.இராஜேந் திரன், பெ.இராமச்சந்திரன், ந.இராமச்சந்திரன், சா.சுப்பிர மணியன், பெ.முத்துசாமி மூ.செல்வராசு, மற்றும் திராவிடர் கழக வா.சிற்றரசு மற்றும் கழக முன்னணியினர் கலந்து கொண்டனர்.

மும்பை

அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 44 ஆவது ஆண்டு நினைவு நாள் 24.12.2017 அன்று மாலை 7.30 மணிக்கு மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் தாராவி குறுக்குச்சாலையில் உள்ள பெரியார் சதுக்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மும்பை கழக தலைவர் பெ.கணேசன் தலைமை வகித்தனர். முன்னதாக மும்பை கழகச் செயலாளர் இ.அந்தோணி கடவுள் மறுப்புக்கூறி அனைவரையும் வரவேற்றார்.

மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச் சந்திரன் தொடக்கவுரையாற்றினார். மும்பை திமுக பொரு ளாளர் சா.பொன்னம்பலம் அய்யா படத்திற்கு மாலை அணிவித்தார். புறநகர் திமுக சொற்பொழிவாளர் முகமதலி ஜின்னா, ஜெய்பீம் அறக்கட்டளைத் தோழர்கள், சுரேஷ் குமார், இராஜாகுட்டி, நித்தியானந்தம், விடுதலை சிறுத் தைகள் கட்சி தோழர்கள் பன்னீர்செல்வம், கா.வை.ரமணி, இராஜேசு, கழகத் தோழர் இராதாகிருஷ்ணன், பொரு ளாளர் அ.கண்ணன், விழித்தெழு இயக்கத்தோழர் பிரான் சீஸ், கவிஞர் மு.கனகராஜ் ஆகியோர் பெரியார் அரும் பணியை நினைவு கூர்ந்தார்கள். நிகழ்ச்சியில் பிரசாத், ம.நடராசன், பி.சரண்ராஜ், கே.செல்வரத்தினம், வெள்ளைச் சாமி, ப.இராசேந்திரன் உட்பட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தோழர் ரோபின் செல்வராஜ் நன்றி கூறினார்.

கோபி

தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள் கோபி கழக மாவட்டத்தில் எழுச்சியுடன் நடைபெற்றன. கோபி நகரில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்டத் தலைவர் இரா.சீனிவாசன் தலைமையில் காலை 9.30 மணியளவில் கழகத் தோழர்களுடன் இணைந்து மாலை அணிவிக்கப்பட்டது.

நம்பியூர்

நம்பியூரில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு நம்பியூர் ஒன்றியக் கழகத் தோழர்களுடன் இணைந்து மாவட்டச் செயலாளர் ந.சிவலிங்கம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. கோபி நிகழ்வுகளில் பொதுக்குழு உறுப்பினர்கள் க.மு.பூபதிநாதன், க.யோகானந்தம், மண்ட லச் செயலாளர் பெ.இராசமாணிக்கம், கோபி ஒன்றியத் தலைவர் எழில் இராமலிங்கம், ஒன்றியச் செயலாளர் கே.எம்.சிவக்குமார், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் கே.எம்.கருப்பனசாமி, மாவட்டச் செயலாளர் வெ.குணசேகரன், மாவட்ட பொருளாளர் வி.சிவக்குமார், மாவட்ட ஆசிரியர் அணி அமைப்பாளர் குப்புசாமி, ஈரோடு பெரியார் புத்தக நிலைய பொறுப்பாளர் சீனு. மதிவாணன் ஆகியோருடன் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கோ.ப.வெங்கிடு அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மகளிரணியைச் சேர்ந்த சுமா சிவக்குமார் மற்றும் மதிவதனி ஆகியோரும் பங்கு பெற்றனர்.

திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் என்.நல்லசிவம் தலைமையில் ஏராளமான திமுக தோழர் கள் கலந்து கொண்டு கோபி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். கோபி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பாகவும் ஆதி தமிழர் பேரவை சார்பாகவும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களும், தோழர்களும் மாலை அணி வித்தனர்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி, புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் சிலைக்கு 44ஆவது நினைவு நாளன்று, மண்டலச் செயலாளர் சு.கிருட்டினமூர்த்தி தலைமையில் நகரத் தலைவர் தி.குணசேகரன், நகரச் செயலாளர் ப.நாகராசன் ஆகியோர் முன்னிலையில் பெரியார் பிஞ்சுகள்இரா.கு.கலிநிலவு, இரா.கு.தென்றல், தி.பு.அறிவு புதல்வன், ஆகியோர் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் பெரியார் பெருந் தொண்டர் சு.பழனிவேலு, பகுத்தறிவாளர் கழகம் ரெ.புகழேந்தி, காட்டூர் சி.இளங்கோ, ஒன்றிய  தலைவர் சு.சித்தார்த்தன், ஒன்றிய செயலாளர் இர.அறிவழகன், மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ்முரளி, தலைஞாயிறு ஒன்றிய அமைப்பாளர் அய்.பாஸ்கர், இளைஞரணி டெல்டா மாதவன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆர்.ஜெ.உமாநாத், எம்.பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேசிய முற்போக்கு திராவிடர் கழக சார்பில் மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் வீ.வீ.கிரி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மற்றும் நகரச் செயலாளர் மே.மதன்குமார், ஒன்றிய செயலாளர் டி.சுரேந்தர், வழக்குரைஞர் அணி தலைவர் அய்.ஜெ.கார்த்தி, ஒன்றிய பொருளாளர் என்.குமார், மாணவரணி செயலாளர் எம்.அய்யப்பன், கேப்டன் மன்ற செயலாளர் சி.இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

கோட்டூர்

கோட்டூரில் உள்ள பெரியார் சிலைக்கு ஒன்றிய தலைவர் சு.கிருட்டிணமூர்த்தி, மண்டல செயலாளர் வி.புட்பநாதன் மாலை அணிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner