எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடியாத்தம், ஜன.13 குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டையில் உள்ள லிட்டில் பிளவர் மெட்ரி குலேசன் பள்ளியில் 12-.1.-2018 அன்று  மாணவர்களின் கண்கவர் சமத்துவப் பொங்கல் விழா கலை நிகழ்ச்சியுடன் சிறப்பாக கொண் டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளியின் தாளா ளர்  வி.சடகோபன்  தலைமை தாங்கினார். சிறப்பு அழைப் பாளர்களாக பேராசிரியர் பா.சம் பத் குமார்  (தமிழ்த்துறை, திரு மகள் ஆலைக்கல்லூரி),   புலவர் ச.தண்டபாணி (செயலாளர், முத்தமிழ்ச் சுவைச் சுற்றம்) வருகை புரிந்து மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் ஆசிரியர் பி.தனபால் அவர்களும், வி.மோகன் சிலம்பு மாஸ்டர்கள்  செல்வர் என்.ஜம்புலிங்கம் செண்பகராமன் கவிஞர் சந்தீப் அவர்களும் முன் னிலை வகித்தனர். விழாவில் வரவேற்புரையை டி.வனரோசா (மூத்த முதல்வர்) வழங்கினார்.

விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை பள்ளியின் செயலாளர் எஸ்.ரம்யா கண்ணன், நிர்வாக முதல்வர் எல்.ஜமுனா, கல்விசார் முதல்வர் எஸ்.சுகன் ஆகியோர்கள் செய்து விழாவினை ஒருங்கிணைத்தனர்.

விழாவில் தூய தமிழ்ப் பெயர் கொண்ட மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவும்,அறிவியல் கண்காட்சி (ம) குழந்தைகள் தினவிழாவில் பங்கேற்ற மாண வர்களுக்கு பரிசளிப்பு விழாவும், கோலப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

தமிழர்களின் பாரம்பரிய நடனங் களான ஒயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம்,  பொய்க் கால் குதிரை, மயிலாட்டம், சிலம் பாட்டம், புலியாட்டம் என அனைத்து நடன நிகழ்ச்சி களும் நடைபெற்றன.

இறுதியாக எம்.சதானந்தம் (தமிழாசிரியர்) நன்றியுரை கூற விழா இனிதே நிறையுற்றது.

இவ்விழாவில் எராளமான பெற்றோர்களும், நலன் விரும் பிகளும் பங்கேற்று நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner