எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புலியாண்டூர், ஜன. 19- கிருட்டி னகிரி மாவட்டம் காவேரிப் பட்டணம் ஒன்றிய திராவிடர் கழகத் துணைச் செயலாளர் புலியாண்டூர் சி.இராசா அவர் களின் வாழ்விணையர் சுயமரி யாதைச் சுடரொளி ஆர்.காளியம் மாள் அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி 8.1.2018 அன்று காலை 11.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடை பெற்றது.

காளியம்மாள் அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் கோ.திராவிட மணி தலைமை வகித்துப் பேசி னார்.

ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் சி.சீனிவாசன் அனைவ ரையும் வரவேற்றுப் பேசினார்.

தருமபுரி மண்டலத் தலைவர் பெ.மதிமணியன், மாவட்டத் துணைத் தலைவர் த.அறிவரசன், பன்னியாண்டி, சமூகநல சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.மாயாண்டி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட திரா விடர் கழக இணைச் செயலாளர் சு.வனவேந்தன், மாவட்ட அமைப்பாளர் ப.முனுசாமி, தருமபுரி மாவட்ட மனித உரிமைகள் கட்சி தலைவர் தமிழ்மணி, கிருட்டினகிரி நகர செயலாளர் கா.மாணிக்கம், தருமபுரி மண்டல இளைஞரணி செயலாளர் வ.ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி தலைவர் இல.ஆறுமுகம், ஒன்றிய ப.க.செயலாளர் நா.சதீஸ்குமார் ஆகியோர் சுயமரியாதைச் சுட ரொளி காளியம்மாளை நினைவு கூர்ந்து பேசினர்.

சுயமரியாதை சுடரொளி ஆர்.காளியம்மாள் அவர்களின் படத்தினை தலைமை கழகச் சொற்பொழிவாளர் பழ.வெங்க டாசலம், இந்திய மனித உரிமைகள் கட்சி மாநில செயல் தலைவர் துரைராஜ் ஆகியோர் திறந்து வைத்து நினைவேந்தல் வீரவணக்க உரையாற்றினர்.

சந்தாக்கள்

மாவட்ட இணைச் செயலாளர் சு.வனவேந்தன் மூலம் வருகை தந்த இளைஞர் ஓசூர் இரா.அறிவழகன், மாவட்டச் செய லாளர் கோ.திராவிடமணி முன் னிலையில் தன்னை இயக்கத்தில் இணைத்து கொண்டார். அவ ருக்கு கைத்தறி ஆடை அணிவித்து சிறப்பித்தார் மாவட்டச் செய லாளர். இயக்கத்தில் இணைந்த தின் மகிழ்வாக அறிவழகன் உண்மை ஆண்டு சந்தா ஒன்றும், அரையாண்டு விடுதலை சந்தா ஒன்றும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிரமணியம், மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.புகழேந்தி, மாவட்ட ப.க. துணைத் தலைவர் செ.ப.மூர்த்தி, பெரியார் சமூக காப்பணி மகளிர் இயக்குநர் ஊற்றங்கரை வெ.அழகுமணி, ஒன்றியச் செயலாளர் சிவ.மனோகர், ஒன்றிய அமைப் பாளர் பெ.செல்வம், கிருட்டி னகிரி ஒன்றிய தலைவர் த.மாது, அரசம்பட்டி த.சக்திவேல், சி.அஞ்சலி, பெரியார் பிஞ்சு தி.அ.அறிவுக்கனல் பஞ்சம்மாள், ஆர்.காளியம்மாளின் பிள்ளைகள் இரா.சக்திவேல், இரா.மணி மேகலை உட்பட உற்றார் - உறவி னர்கள் கலந்து கொண்டு சுயமரி யாதை சுடரொளி காளியம் மாளோடு பழகியதைப் பற்றி அவருடைய செயல்கள் பற்றி நினைவு கூர்ந்தனர்.

இறுதியாக காவேரிப் பட் டணம் ஒன்றிய துணைச் செய லாளர் சி.இராசா நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner