எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தூத்துக்குடி, ஜன.19 தூத்துக் குடி உண்மை வாசகர் வட்டம் 2ஆவது கூட்டம் தூத்துக்குடி பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கில் 23.12.2017 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

உண்மை வாசகர் வட்டச் செயலாளர் சு.காசி அனை வரையும் வரவேற்று, மாதாந்திர அறிக்கையையும் படித்தார். தலைமையேற்ற மாவட்டக் கழகத் தலைவர் பேராசிரியர் தி.ப.பெரியாரடியான் தம் தலை மையுரையில் பெண்ணுரிமைப் போரில் பெரியாரின் பங்கினைக் கோடிட்டுக் காட்டினார்.

சிறப்புரையாக மண்டலத் தலைவரும், உண்மை வாசகர் வட்டத் தலைவருமான மா.பால்ராசேந்திரம் ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற தலைப் பில் கருத்துரை வழங்கினார்.

அவர்தம் உரையில்: கற்பு, காதல், கல்யாண விடுதலை, மறுமணம், விபச்சாரம், வித வைகள் நிலை, சொத்துரிமை, கர்ப்பத்தடை, ஆண்மை அழி யட்டும் என்ற தலைப்புகளின் விளக்கங்களைச் சான்றுகளுடன் எடுத்துக் கூறினார். ‘கற்பு’ என்றால் கெடாதது, மாசற்றது எனில் அது இருபாலருக்கும் உரித்தாவதே நியாயமாகும் என் றார். காதலென்பது தெய்வீக மானதென்பது போலிக்கூப்பாடு; ஒருவருக்கு ஏற்பட்டு இன் னொருவருக்கு ஏற்படாது போவது எப்படி? என்றார். கல்யாணமென்பதும் சொர்க் கத்தில் நிச்சயிக்கப்படுவதல்ல. பெண்ணை அடிமை கொள்ளவே கல்யாணம். அவள் அறியாதி ருக்கவே அச்சமூட்டும் சடங்குகள் என்றார். மணமென்பதே வாழ்க் கைக்கான ஒப்பந்தமே. ஒப்பந்தக் காரர்கள் சரியில்லையாயின் மாற்றம் செய்து கொள்வது வாழ்க்கைக்கு அவசியம் என்றார். சட்டப்படி நான்கு வரையறையில் பெண்ணை நீக்கி மறுமணம் செய்திடும் உரிமை பெற்ற ஆண்கள் அதே உரிமையைப் பெண்ணும் பெற்றிட வழி இருக்க வேண்டும் என்றார்.

பெண், வேறு ஆணை நினைத்தாலே விபச்சாரி என்ற ஒதுக்கிடும் சமுதாயம் ஆணைத் தண்டனைக்குரியவனாக்க மறுப் பது ஏன்? என்றார். உடன்கட்டை ஏறுவதை விடக்கொடியது விதவைக் கோலம். மனைவியை இழந்த முதியவர் கூட இளங் கன்னியரை மறுமணம் செய் திடும் சமூகத்தில் பால்ய விவா கத்தால் வாழ்க்கையையிழந்த பருவமடையாச் சிறுமியைக் கூட விதவைக் கோலத்தில் வைத்து மகிழ்கிறது என்றார். பெண்களின் எல்லாவித அசவுகரியங்களும் ஒழிந்து போக, அவர்களுக்குச் சொத்துரிமைத் தரப்படல் வேண்டும் என்றார். கர்ப்பத் தடைக்குச் சமூகம் கூறும் கார ணங்களை விடப் பெண்களுக்கு விடுதலையும், சுயேட்சையும் அவசியமென்ற நியாயமே முதன் மையானதாகும் என்றார். கடவுள், படைப்பிலேயே விபச்சாரி களாய்ப் பெண்களைப் படைத்து விட்டார் என்று பொய்கூறிப் பெண் சமுதாயத்தையே அழித் திடும் ஆண்மை அழிந்தால் பெண்மை தலை நிமிரும் என்றார்.

அத்தனையும் தந்தை பெரி யாரின் கருத்துக்களே; அதனால் தான் பெண்ணினம் கூடி 1938 நவம்பர் 13இல் ‘பெரியார்’ என்ற பட்டத்தைச் சொல்லிலும், எழுத் திலுமென வழங்கிச் சிறப்பித்த னர் என்று கூறி நிறைவு செய்தார். நிறைவாக ஆ.மாரி முத்து நன்றி கூறிட கூட்டம் நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் மாநகரப் ப.க.தலைவர் ப.பழனிச்சாமி, செயலாளர் சு.சுப்புராஜ், மாவட்ட கழக துணைச்செயலாளர் த.பெரி யார்தாசன், திருவை ஒன்றியத் தலைவர் ச.திருமலைக்குமரேசன், குறுக்குச்சாலை ப.க.தலைவர் இரா.அய்யம்பெருமாள், மகளி ரணி இரா.சிவகாமிசுந்தரி, பொதுக் குழு உறுப்பினர் பெ.காலாடி, துவரந்தை சா.முத்துராஜ், வழக் குரைஞர் ந.செல்வம், மய்யப் பாதுகாவலர் பொ.போசு உட் படத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner