எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வேலூர், ஜன. 25 தமிழர் தலைவர் அவர்கள் கலந்து கொள்ளும் திராவிடர் மாணவர்களின் சந்திப்போம் சிந்திப் போம் நிகழ்வு வேலூரில் வரும் 11.2.2018 அன்று காலை நடைபெற உள்ளதை முன்னிட்டு திராவிடர் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் வேலூர், வேலப்பாடி, புன்னகை மருத்துவமனை பழனியப்பன் நினைவரங்கத்தில் 19.1.2018 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

செந்தமிழ் இன்மொழி வரவேற்புரை யாற்றினார்.

வேலூர் மண்டல தலைவர் வி.சட கோபன் தலைமையேற்று உரையாற்றி னார். திராவிடர் கழக மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில்:-

தமிழர் தலைவரின் பல்வேறு சிறப்பி யல்பினை எடுத்துரைத்து மாணவர்களி டையே அமைப்பு ஏற்படுத்த வேண்டிய அவசியம் பற்றியும் நிகழ்ச்சியை எவ்வாறு சிறப்பாக நடத்துவது என்பது பற்றியும் தோழர்கள் எழுச்சி பெற்று பெரும் பணியாற்ற வேண்டும் என்றும் கூறினார். தனது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.

மாநில பா.க. துணை தலைவர் அண்ணா சரவணன் மாணவர்களை அமைப்பில் சேர்த்தல் பற்றி உரை யாற்றினார். கலந்து கொண்ட அனைத்து தோழர் களும் தங்களது கருத்துக்களை கூறினார்கள்.

நிகழ்வில் கலந்து

கொண்டோர்

வி.இ.சிவக்குமார் (மாவட்ட தலைவர்), கு.இளங்கோவன் (மாவட்ட செயலாளர்), உ.ச.குருநாதன் (மாவட்ட  துணைத் தலைவர்), இர.அன்பரசன் (மாவட்ட ப.க. செயலாளர்), க.சிகாமணி (பொதுக்குழு உறுப்பினர்), கோ.விநாயகம் (ஆற்காடு ஒன்றிய தலைவர்), அ.மொ.வீரமணி (மாநகர ப.க. செயலாளர்), வி.மோகன் (குடியாத்தம் நகர தலைவர்), க.வீராசாமி, ந.சந்திரசேகரன், வீ.பெரியார் செல்வம், மோ.அன்பரசன், பொ.இரவீந்திரன், செ.பார்த்திபன், வீ.அரிகிருஷ்ணன், செந்தமிழ்ச் சரவணன், ச.கலைமணி பழனியப்பன் (மாவட்ட மகளிர் அணி செயலாளர்), ந.தேன்மொழி (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்), மரு. தி.அனிதா (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்), சி.லதா (குடியாத்தம் நகர  மகளிர் பாசறை தலைவர்), சத்திய பூங்குழலி அ.ஜெ. ஓவியா, செந்தமிழ் யாழினி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner