எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அப்பியம்பேட்டை, ஜன.26 குறிஞ்சிப்பாடி ஒன்றியம் அப்பியம் பேட்டையில் 14.1.2018 அன்று பொங்கல் விழா கொண் டாடப்பட்டது.

காலை 9 மணிக்கு பெரியார் சிலைக்கு மாலையினை கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் அணிவித்தார். பட்டாசு வெடித்து மகிழ்ச்சி பொங்க - பொது மக்களுக்கு சர்க் கரை பொங்கல் வழங்கப்பட்டது.

விழாவில் பங்கு பெற்ற தோழர்கள் அனைவருக்கும் மாவட்ட இளைஞரணி தலைவர் நா.உதயசங்கர் இல்லத்தில் பொங் கல் விருந்து அளிக்கப்பட்டது.

மாவட்ட தலைவர் தென்.சிவக்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் வெ.செந்தில்குமார், வடலூர் மு.கருணாமூர்த்தி, மண் டல இளைஞரணி செயலாளர் வி.திராவிடன், மாவட்ட இளை ஞரணி செயலாளர் நா.பஞ்சமூர்த்தி, மாவட்ட பெரியார் வீரவிளையாட்டுக் கழக தலைவர் இரா.மாணிக்கவேல், அப்பியம் பேட்டை கிளைக்கழக நிர் வாகிகள் கோ.தனசேகர், கோ. வேலு, சத்தியா, குணசுந்தரி, ஏழை முத்து, வேகாக்கொல்லை கதில்வேல், வேணுகோபால் ஆகி யோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner