எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காரைக்குடி, ஜன. 27 சிவகங்கை மண்டல திராவிடர் கழகத் தலைவர் காரைக்குடி சாமி திராவிடமணி - செயலட்சுமியின் மூத்த மகனும், தமிழர் தலைவர் ஆசிரியரின் பேரன்புக்குரிய வருமான, பகுத்தறிவாளர் கழக வெளியுறவுச் செயலாளராக இருந்து மறைந்த சுயமரியாதைச் சுடரொளி தி.பெரியார் சாக்ரடீசு வின் இல்லத்திற்கு திரைப்பட நடிகர் "இன முரசு" சத்யராஜ் (25.1.2018 அன்று மாலை) வருகை தந்தார். அவரை தலைமைக் கழகப் பேச்சாளர் தி.என்னாரசு பிராட்லா மற்றும் குடும்பத்தினர் சால்வை அணிவித்து அன்புடன் வரவேற்றனர்.

"இனமுரசு" சத்யராஜின் நெருங்கிய நண்பராக சென்னையில் பழகிய தி.பெரியார் சாக்ரடீசு உருவப்படத்திற்கு அவர் மாலை வைத்து மரியாதை செய்தார். பின்னர் அவருக்கு "செம்மொழி சிற்பிகள்" எனும் 100 தமிழறிஞர்களின் வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய நூல் ஒன்றை பரிசாக வழங்கப்பட்டது. குடும்பத் தாருடன் சுமார் ஒரு மணி நேரம் கலந்துறவாடிய பின் விடை பெற்றுச் சென்றார்.

"இனமுரசு" சத்யராஜ் காரைக்குடியில் திரைப்படக்காட்சி படப்பிடிப்புக்காக வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner