எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காரைக்குடி பிப்.3 காரைக் குடி கழக மாவட்டத்தின் சார்பில் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு சிறப்பு கூட்டம் மாவட்ட தலைவர் ச.அரங்க சாமி தலைமையில் நடை பெற்றது.

மண்டல தலைவர் சாமி.திராவிடமணி,மாவட்ட செயலாளர் கும.வைகறை ஆகி யோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் தி.கலைமணி வரவேற்றார்.தலைமை கழக சொற்பொழிவாளர் தி.என்னா ரசு பிராட்லா தொடக்கவு ரையாற்றினார்.அவரை தொடர்ந்து தலைமை கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரை நிகழ்த்தினார்.

அண்மையில் பெரும் பர பரப்பை ஏற்படுத்திய "ஆண் டாள்" குறித்த கருத்துக்களை தக்க விளக்கங்களோடு எடுத்து வைத்து பேசினார்.பொது மக்கள் பெருமளவில் திரண்டு நின்று உரையினை கேட்டனர். கூட்டத்தில்  சிறப்பு விருந் தினராக மகாராஷ்டிரா மாநில திராவிடர் கழக தலைவர் பெ.கணேசன் பங்கேற்றார். மேலும் மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், மாவட்ட ப.க.தலைவர் எஸ்.முழுமதி,மாவட்ட ப.க. செயலாளர் ந.செல்வராசன், ப.சுந்தரம், மாவட்ட ப.க. துணை செயலாளர் ந.குமரன் தாஸ், நகர அமைப்பாளர் கி.மணிவண்ணன்,மாவட்ட தி.க.து.செயலாளர் இ.ப.பழ னிவேலு,தேவகோட்டை நகர அமைப்பாளர் வீர.முருகப்பன், தி.தொ.ச.சேகர், தி.தமிழமுதன், மாவட்ட இ.அ.அமைப்பாளர் தி.புரூனோ என்னாரசு, திரா விடர் இயக்க தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் தமிழினியன், நகர செயலாளர் ந.நவில், தி.மு.க.வட்ட செயலா ளர்கள் மா.கருணாநிதி, இரா.இராதா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் ந.செகதீசன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner