எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில்  Ôநீட்Õ தேர்வை ரத்துசெய்யக்கோரி

தமிழகமெங்கும் நடைபெற்ற மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

 

 

சென்னை, பிப். 8- ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு கூட்ட மைப்பின் சார்பில் Ôநீட்Õ தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகமெங்கும் நடைபெற்ற மக்கள் பெருந்திரள் ஆர்ப் பாட்டம் பின் வருமாறு:

சென்னை

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் 5.2.2018 அன்று காலை Ôநீட்Õ தேர்வு ரத்துசெய்யக்கோரி  நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில்  அனைத்துக் கட்சித் தலைவர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவரையும் வரவேற்றார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன்,   சிபிஅய் மாநில செயலாளர் இரா.முத்தரசன், சிபிஎம் மாவட்ட செயலாளர் அ.பாக்கியம், காங்கிரசு கட்சி மூத்த தலைவர் இலக்கியச்செல்வர் குமரி அனந்தன், மாநில துணைத் தலைவர் தாமோதரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மனிதநேய மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது, இந்திய யூனியன் முசுலீம் லீக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் முகம்மது அபுபக்கர், எஸ்.டி.பி.அய். கட்சி மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி, இந்திய சமூகநீதி இயக்க நிறுவனர் பேராயர் எஸ்றா சற்குணம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் உரையாற் றினார்கள்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்று நிறைவுரையாக எழுச்சியுரையாற்றினார்.

கலந்துகொண்டவர்கள்

சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுதர் சனம், மீனவரணித் தலைவர் மு.தம்பிதுரை, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பா.செந்தமிழ்செல்வன், விடு தலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வெள்ள துரை,  திராவிட இயக்க தமிழர் பேரவை மாறன், விழி கள் வேணுகோபால், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் கோ.கருணா நிதி, திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் வீ.கும ரேசன், அமைப்புச்செயலாளர் வெ.ஞானசேகரன்,  மாண வரணி மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரி யார், சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம்.

மகளிரணி

வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி,  தலைமை செயற்குழு உறுப்பினர் பொறியாளர் ச.இன்பக் கனி, பெரியார் களம் இறைவி, பா.மணியம்மை,  வி. வளர்மதி, பி.அஜந்தா, கோ.குமாரி, பசம்பொன் செந்தில் குமாரி, பூவை செல்வி, கற்பகம், சே.மெ.மதிவதனி, பெரியார் பிஞ்சு நனிபூட்கை.

தென்சென்னை

இரா.வில்வநாதன், செ.ர. பார்த்தசாரதி, சைதை எம்.பி.பாலு, தமிழ்சாக்ரட்டீஸ், டி.ஆர்.சேதுராமன் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், க.தமிழ்செல்வன், ஈ.குமார், ச.மகேந்திரன், சி.செங்குட்டுவன்,  அ.பாபு,  சூளைமேடு இராசேந்திரன்,  கோ.செல்வராஜ்,  இரா.பிரபாகரன்,  மயிலை மோகன்,  மாணவரணி பிரேம்,  மு.ந.மதியழகன், மு.இரா.ரவி, சேத்பட் பாபு

தாம்பரம்

ப.முத்தையன், கோ.நாத்திகன், சு.மோகன்ராஜ்,   ஆ. இர.சிவசாமி, சைதை ரவி, விடுதலைநகர் செயராமன், மா.குணசேகரன், வழக்குரைஞர் ஆர்.உத்திரகுமார், தாம்பரம் லட்சுமிபதி, கு.சோமசுந்தரம், செஞ்சி கதிர வன், ஜெனார்த்தனன், ராகுல், மடிப்பாக்கம் பாண்டு

கும்மிடிப்பூண்டி

புழல் த.ஆனந்தன், ந.ஜனாதிபதி, க.ச.க.இரணியன், சு.நாகராஜன், ஆ.சிவக்குமார், பொன்னேரி வே.அருள்,  மீஞ்சூர் முருகன், சோ.பாலு

ஆவடி

பா.தென்னரசு, உடுமலை வடிவேல், கலைமணி, பெரியார்மாணாக்கன், பட்டாளம் பன்னீர், இளவரசு, நடராசன், ஸ்டீபன், மணிகண்டன், பவன்குமார்,  இரா. கோபால், பகலவன், தமிழ்மணி, முத்து நைனார்.

வடசென்னை

தே.ஒளிவண்ணன், ஆ.வெங்கடேசன், கி.இராமலிங் கம், ந.இராசேந்திரன், பெரு.இளங்கோவன், கோ.தங்க மணி, தே.செ.கோபால், தி.செ.கணேசன், சு.செல்வம், ஒளிபடக் கலைஞர் பா.சிவக்குமார், நா.பார்த்திபன், ஏ.மணிவண்ணன், தளபதிபாண்டியன், அமுதரசன், புரசை அன்புச்செல்வன், முரளி, பெரியார் திடல் சுரேசு, ரெ.யுவராஜ், நாகை காமராஜ்.

திராவிடர் கழகம், திமுக, காங்கிரசு கட்சி, மதிமுக, சி.பி.அய்., சி.பி.எம்., இந்திய யூனியன் முசுலீம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமுமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

திருச்சி

‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு  விலக்களிக்க கோரி சென்னையில் நடைபெற்ற  திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு கலந்துரையாடல் கூட்டத்தின் முடிவின் படி தமிழ்நாடு முழுவதும்  அனைத்து கட்சியினர் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மேலச் சிந்தாமணி அண்ணா சிலை அருகே பெருந்திரள் ஆர்ப்பாட்டம்  நேற்று (பிப்.5) காலை 11 மணியளவில்திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், தலைமையில் நடை பெற்றது.

கே.என்.நேரு

தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.என். நேரு முன்னிலை வகித்து பேசுகையில்,   ‘நீட்’ தேர்விலிருந்து  தமிழ்நாட்டுக்கு கட்டாயமாக மத்திய அரசு விலக்களிக்க வேண்டும். அப்படி விலக்களிக்காமல் இருந்துவிட்டால், கட்டாய மாக ஆட்சி மாற்றத்தை உருவாக்கி  ‘நீட்’ தேர்வுக்கு தி.மு.க. அரசு கட்டாயமாக விலக்களிக்கும்.

மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாத தமிழ்நாடு அரசு மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசு நிச்சயமாக மாற்றப்பட வேண்டும். அப்பணியில் நாம் ஈடுபட வேண்டுமென்றால், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் உருவாக்கிய இந்த கூட்டமைப்பின் ஒற்று மையை போல, வருகின்ற தேர்தலிலும் நாம் ஒற்றுமையாக செயல்பட்டால் நிச்சயமாக ஆட்சி மாற்றம் கொண்டு வர முடியும். அந்த ஆட்சி மாற்றத்தால் தி.மு.க. அரசு பல நன்மைகளை செய்யும் என்று அவர் கூறினார்.

மேலும்இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் இந்திரஜித், விடுதலை சிறுத்தை மாநகர செயலாளர் வழக்குரைஞர் அருள், ம.ம.ம.க.  மாவட்ட செயலாளர் அப்துல் ரகீம், தமுமுக மாவட்ட செயலாளர் உதுமான் அலி, ம.திமுக மாவட்ட செயலாளர் வெல்ல மண்டி சோமு, புலவர் முரு கேசன்,  காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜவகர், இந்திய யூனியன் முஸ்லீம் மாணவரணி பொதுச் செயலாளர் அன்வர், தி.இ.த.பே  மாவட்ட செயலாளர் தீனதயாளன், எஸ்.டி.பி.அய். மாவட்ட செயலாளர் சபியுல்லா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி தலைமை கழக பேச்சாளர் வழக்குரைஞர் பூவை புலிகேசி பேசுகையில், தமிழ்நாடு அரசு இரண்டு மசோதாக்களை நிறைவேற்றினார்கள். அந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும். அதன்மூலம் தமிழ்நாட்டு மாணவர்களை பாதுகாக்க வேண்டும். அப்படி செய்யாமல் விட்டு விட்டால், ஆட்சி மாற்றம் தான் தீர்வு என்ற நிலை ஏற்பட்டால் அதற்கான மக்கள் கருத்தையும், திராவிடர் கழகம் உருவாக்கும் என்று அவர் பேசினார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில்வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் காடு வெட்டி தியாகராஜன்,  திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் சவுந்தர பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, கே. என்.சேகரன், இலால்குடி மாவட்ட தி.க தலைவர் வால் டேர், மண்டல தலைவர் மு.நற்குணம், மண்டல செயலாளர் ப.ஆல்பர்ட்,  பொதுக் குழு உறுப்பினர்கள் மு.சேகர், ரெஜினா பால் ராஜ், மாநகர தலைவர் மருதை, செயலாளர் சத்தியமூர்த்தி,  அமைப்புசார தொழிற்சங்க செயலாளர் திராவிடன் கார்த்திக், மண்டல மகளிரணி செயலாளர் கிரேசி, மணியன், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்ச் சுடர், பெல் ம.ஆறுமுகம், செ.பா.செல்வம், நேதாஜி, குணசேகரன், விடுதலை கிருஷ்ணன், காட்டூர் சங்கிலி முத்து, ராஜேந்திரன், கனக ராஜ், முத்து, சேவியர், பிரான் சிஸ், சிறீரங்கம் நகர தலைவர் கண்ணன், தேவா, மாவட்ட துணை தலைவர் அட்டலிங்கம், அமிர்தம், சத்தியமூர்த்தி, பெரியசாமி, மார்ட்டீன், முசிறி ரத்தினம், வீரமணி, தமிழ்செல்வன், வசந்தகுமாரி, இலால்குடி ஒன்றிய செயலாளர் பிச்சை மணி, அக்ரி சுப்ரமணியன், ப.க.பாலசுப்ரமணியன், அரங்கநாயகி, ஜெயராஜ், ராஜ சேகர், போளூர் பன்னீர்செல்வம், மகாமணி உள்ளிட்ட தி.க., திமுக. மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள்,  மனித நேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.அய். காங்கிரஸ், தி.இ.த.பே. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து கட்சியிலிருந்து ஏராளமான தொண் டர்களும் பொறுப்பாளர்களும் திரளாக கலந்து கொண் டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய,  பிஜேபி அரசே! ‘நீட்’ என்ற பெயராலே சமூக நீதியை ஒழிக்காதே! வஞ்சிக் காதே! வஞ்சிக்காதே! தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராம மக்களை வஞ்சிக்காதே! உள்ளிட்ட முழக்கங் கள் எழுப்பப்பட்டன.

நிறைவாக மாவட்ட செயலாளர் இரா.மோகன் தாஸ் நன்றி கூறினார்.

ஈரோடு

ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலையருகில் நீட் தேர்வு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் 05:03:2018 காலை 10:30 மணிக்கு நடைபெற்றது.

திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக மாநில பொருளாளர் அ. கணேசமூர்த்தி, திமுகழக மாநகர செயலாளர். மு.சுப் பிரமணி, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர். ஈ.பி. ரவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஜாபர் அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர். சி.எம். துளசிமணி, எஸ்.டி.பி.அய். மாநில துணைத் தலைவர். அம்ஜத் பாஷா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர். முஹம்மது ஆரிப், மனித நேய மக்கள் கட்சி யின் மாவட்ட செயலாளர். சலீம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற கழக மாவட்ட செய லாளர். சித்திக், திராவிட இயக்க தமிழர் பேரவை மாவட்டசெயலாளர். ஆ.தமிழ்க்குமரன், ஆதி தமிழர் பேரவை தலைமை நிலைய செயலாளர். ஆனந்தன், ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

பின்பு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான தோழர்களும் பொதுமக்களும் நீட் தேர்விற்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர் இறுதியில் கோபி மாவட்ட திராவிடர் கழக செயலாளர்  ந.சிவலிங்கம் நன்றியுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக சார்பில் மண்டலத் தலைவர் ப.பிரகலாதன் செயலாளர் பெ.ராஜமாணிக்கம் மாவட்ட தலைவர்கள் இரா.நற்குணன்(ஈரோடு) இரா.சீனிவாசன் (கோபி) மாவட்ட செயலாளர் கு.சிற்றரசு பொதுக்குழு உறுப்பினர் கோ.பாலகிருஷ்ணன் மாநில இளைஞரணி துணைச்செயலாளர்.தே.காமராஜ் ஈரோடு மாவட்ட ப.க தலைவர் ந.கிருஷ்ணமூர்த்தி மாவட்ட அமைப்பாளர் கு.சண்முகம் வீ.தேவராஜ் கோ.திருநாவுக் கரசு  சா.ஜெபராஜ் நம்பியூர் சென்னியப்பன் நசியனூர் து.நல்லசிவம் ஈரோடு அறிவுக்கன்பன் குருவை.கணேசன் மாணிக்கம்பாளையம் கணேசன் மகளிரணி மாலதி பெரியசாமி த தங்கராஜ் முத்தூர் கோ.அருணாச்சலம் பவானி அ.அசோக்குமார் கவுந்தப்பாடி பாலு கோபி டி.ஆனந்த்ராஜ் புத்தக கடை சீனு.மதிவாணன் நம்பியூர் ப.வெற்றிவேல் வீராசேட்  வீரன் திருப்பூர் ஜீவா திமுகழக சார்பில் பகுதி செயலாளர்  தண்டபானி பிஎன்எம்.பெரிய சாமி , பெ. ரா.பாலு குணசேகரன் காந்திசிலை குணா வீரமணி, ஜெயக்குமார் பிஆர்.சந்திரசேகர் மார்க்கெட் சேகர் அம்பேத்கார் கோடிஸ்வரன் மகேஸ்வரன் ஆறு முகம் கே.வி.கணேசன் மதிமுக சார்பில் மாவட்ட செய லாளர்கள் நா.முருகன்(மாநகர் மாவட்டம்) பெமு. குழந்தைவேலு (கிழக்கு) மா.கந்தசாமி (மேற்கு) குண சேகரன் முட்டு பெரியசாமி பா.இராமகிருஷ்ணன் விஎம்.கந்தசாமி மு.அறிவழகன் பிவி.செல்வராஜ் மு.சுப் பிரமணி எம்.முகமது சாதிக் சென்னிமலை சென்னியப்பன் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.ஆர். ராஜேந்திரன் ஜாபர் சாதிக் கண்ணப்பன் (மாவட்ட செயலாளர்) சிபிஅய் மாவட்ட செயலாளர் கே.ஆர்.திருநாவுக்கரசு விபி.குணசேகரன் எம். குணசேகரன் வீ. செல்வராஜ்.விடுதலை சிறுத்தைகள் கட்சி மருத்து வர் கி.கலைச்செல்வன் திராவிடர் இயக்கதமிழர் பேரவை மாவட்ட செயலாளர் அ.தமிழ்க்குமரன், சுந்தரமூர்த்தி இந்திய யூனியன் முஸ்லிம்லீக் நூர்முகமது சேட்(மாவட்ட தலைவர்) இனாயத்துல்லா அலாவுதீன் சேட் எஸ்.டி.பி.ஐ. பர்ஹான் அஹமது லுக்மானுல் ஹக்கீம் அப்துல் ரஹ் மான் மன்சூர் ஆதிதமிழர் பேரவை ஊடக பிரிவுசெயலாளர் வீரவேந்தன் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் மருத்துவக் கல்வியில் தேசியத் தகுதி நுழைவிலிருந்து (நீட்) தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் மாபெரும் மக்கள்திரள் ஆர்ப் பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல திராவிடர் கழகத் தின் தலைவர் பெ.இராவணன் தலைமை வகித்தார். திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, திமுகவின் சார்பில் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் ராயல்முருகேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் சசி.கலை வேந்தன், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் அப்துல் கனி, தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் முகம்மது அசரப் அலி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மேலும் திமுக மாநில இலக்கிய அணிச் செயலாளர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைச் செயலாளர் தெ.கலைமுரசு ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். மேலும் திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட அமைப்பாளர் ஆ.சுப்பையா, பொதுக்குழு உறுப்பினர் இர.புட்பநாதன், தி.இராசமாணிக்கம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வெ.ஆசைத்தம்பி, மாவட்ட ப.க.தலைவர் அ.சரணவன், திமுக சார்பில் கீரை.தமிழ்ராசா, மாவட்டத் துணைச் செயலாளர் மதியழகன் அப்புக்காளை, இந்திய கம்யூனிஸ் கட்சியின் சார்பில் மாவட்டத் துணைச் செயலாளர் கே.ஆர்.தருமராசன், மாவட்டப் பொருளாளர் பி.திருநாவுக்கரசு, நகரச் செயலாளர் சிற்பி மா.உலக நாதன், மாவட்டக் குழு எஸ்.ஜெயக்குமார், கனகராஜ், க.செல்வராஜ், இராஜகோபால், த.செல்வக்குமார், மாவட்ட நிருவாகக் குழு பாலச்சந்திரன், ஆர்.முரு கானந்தம், எம்.என்.இராமச்சந்திரன், இராமமூரத்தி, பா. பாண்டியராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார் பில் பாவாணன், சின்னுபழகு ஷாஜகான், அண்ணாதுரை, திலீபன்ராஜா, சங்கர தமிழ்ச்செல்வன், கதிர்வளவன்,  வீரக்குமார், இளங்கோவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

சேலம்

நீட்  நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விளக்கு அளிக்கக்கோரி தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் மத்திய அரசு - குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கக்கோரி வலியு றுத்தும் போராட்டம் 5.2.2018 அன்று சேலம்  தபால் நிலையம் முன்பு மாவட்ட தலைவர் ஜவஹர் தலை மையில் நடைபெற்றது.

மண்டல செயலாளர் இளவழகன் அனைவரையும் வரவேற்றார். தலைமை செயல்குழு உறுப்பினர் பழனி புள்ளையண்ணன் துவக்க உரை ஆற்றினார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி ம.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் வந்தியத்தேவன் உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்திற்கு ராவண பூபதி நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர்: மேட்டூர் மாவட்டம் கவிஞர் சி.சுப்பிரமணி, ஆசிரியர் கிருஷ்ண மூர்த்தி, சவுந்திரம், முத்து, குமார், மாதேஷ், கிருஷ்ணபிரபு, ஏழுமலை, பிரசாந்த், முல்லைவேந்தன், ஜெயபாலா, கா.நா.பாலு, சண்முகசுந்தரம், மாநகர மாவட்டத்தின் சார்பாக சிவகுமார், ராவண பூபதி, இளவரசன், தமிழர் தலைவர், வடிவேல், தமிழ்செல்வம், கடவுள் இல்லை சிவகுமார், பரமசிவம், வைரம், கந்தசாமி ஆசிரியர், கமலம், ஆத்தூர் கழக மாவட்டம் சார்பாக வானவில், விடுதலை சந்திரன், சுரேஷ், அண்ணாதுரை, செந்தில், திமுக சார்பாக முன்னாள் துணை மேயர் சுபாஷ், அவைத் தலைவர் கலைஅமுதன், மதிமுக சார்பாக ஆனந்தராஜ், லிபியா சந்திரசேகரன், அன்னை அன்னான், சூளை நடராஜ், இளைஞர் அணி கார்த்தி, மாணவர் அணி விஜயகுமார், இளைஞர் அணி நாகேந்திரன், மகளிர் அணி கற்பகவல்லி,விஜயகுமார், மாதவன், சுரேஷ், காங்கிரஸ் சார்பாக மகளிர் ஆணை சாரதாதேவி  மாணிக்கம், ஜெயப்ரகாஷ், தேன்மொழி, ஷேய்க் இமாம், பச்சப்பட்டி பழனிசாமி, சாந்தமூர்த்தி, சிவகுமார், வரதராஜன், மிட்டாய் சீனு, மல்லிகா அர்ஜுன், ராமலிங்கம், ஏகாம்பரம், சந்திரசேகரன், பாண்டியன், முருகன், எம்.ஆர்.சுரேஷ், திருமுருகன், சரவணன், மலர்க்கொடி, சிவகுமார், முஸ்லீம் லீக் சார்பாக அன்சார் பாஷா, அப்சல் அகமது மற்றும்  திராவிடர் கழகம், திமுக, காங்கிரஸ், சிபிஎம், இந்திய யூகியன் முஸ்லீம் லீக், மதிமுக, சமூக நீதி ஆர்வலர்கள் பெருந்திரளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner