எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தாம்பரம், பிப்,14- மாணவர்களே! இளைஞர்களே! இந்த இயக்கத்துக்கு வந்தால் என்ன கிடைக்கும்? மானமும் அறிவும் கிடைக்கும் என்று கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் குரோம் பேட்டையில் நடைபெற்ற மாணவர் கழக சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றினார்.

அறிஞர் அண்ணாவின் நினைவு நாளை ஒட்டி, தாம்பரம் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் குரோம் பேட்டையிலுள்ள பெரியார் படிப்பகத் தில் 4.2.-2018 அன்று மாலை 6 மணிக்கு சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. நிகழ்ச்சியில் செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி மாணவி க.கனி மொழி வரவேற்புரை ஆற்றினார். மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி மாணவி ச.எழிலரசி தலைமை வகித்து சிறப் பித்தார். மாநில மாணவரணிச் செயலா ளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணிச் செயலாளர் அ.ரா.சிவசாமி, மாநில மாணவரணி துணைச்செயலாளர் நா, பார்த்திபன், மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணியம்மை, மாநில இளைஞரணி துணைச்செயலாளர் கு.கண்ணன், சென்னை மண்டலச் செயலாளர் வி.பன் னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.  நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பெரியார் சமூகக்காப்பு அணியைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் சி.பரசுராமன் தொடக்கவுரையாற்றினார். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் ஒருங் கிணைப்பாளரான கழக அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் அவர்கள் மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில், திராவிடர் மாணவர் கழகத் தின் அருமை, பெருமைகளைக் கூறி அனைவருக்கும் உற்சாகத்தை ஊட் டினார். தொடர்ந்து கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் திராவிடர் மாணவர்களின் உரிமையும், கடமையும் என்ற தலைப் பில் உரையாற்றினார்.

மேற்கோள் காட்டிப் பேசாதவர் தந்தை பெரியார் மட்டும்தான்!

துணைத்தலைவர் தனது உரையில், நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத் திருந்த மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் அவர்களைப் பாராட்டிப் பேசினார். தொடர்ந்து அவர், அண்ணா அவர்கள் மாணவராக இருந்தபோது, தந்தை பெரியார் அவரை ஈரோட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்ட சம்பவத்தை அண்ணாவின் தாயார், என் மகனை ஈரோட்டுச் சாமியார் அழைத்துச் சென்று விட்டார் என்று குறிப்பிட்டதையும், ஏ.எஸ்.பி.அய்யர், ஆசியநாட்டில் மேற் கோள் காட்டிப்பேசாத ஒரே தலைவர் தந்தை பெரியார்தான் என்று குறிப் பிட்டதையும், மாற்றுக்கருத்துள்ள குன்றக்குடி அடிகளாரோடும் இணக்க மாக தந்தை பெரியார் இருந்ததையும் எடுத்துக் கூறி தந்தை பெரியாரையும், திராவிடர் இயக்கத்தையும் பற்றி ஏராள மான அரிய தகவல்களைப் பட்டிய லிட்டார். அதைத்தொடர்ந்து அப்படிப் பட்ட இந்த இயக்கத்தில் மாணவர்களே! இளைஞர்களே! நீங்கள் சேர்ந்தீர்கள் என்றால் உங்களுக்கு பதவிகள் கிடைக் காது; பவிசுகள் கிடைக்காது; மாறாக மானமும் அறிவும் கிடைக்கும் என்று முத்தாப்பு வைத்தாற்போலக் கூறினார். அனைவரும் அதை அமோதித்ததைப் போல பலமாக கைதட்டி அந்த கூற்றை முழுமையாக ஆதரித்தனர்.

பேதமற்ற இடம்தான்

மேலான இடம்!

மேலும் அவர், திராவிடர் இயக்கத் தின் உன்னதமான கொள்கைகளான, பேதமற்ற இடம்தான் மேலான திருப் தியான இடம் என்று தந்தை பெரியார் சொன்னதைக் கூறி, அத்தகைய மேலான நிலையை அடைய மாணவர்கள், இளைஞர்கள்  திராவிடர் இயக்கத்தை பலப்படுத்த வேண்டும் என்று கேட் டுக்கொண்டதோடு, இன்றைய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வு போன்றவற்றிலும் திராவிடர் கழகத்தின் இன்றைய பணி களையும், எதிர்காலத் திட்டங்களையும் நினைவூட்டி,  அனைவரையும் வாழ்த்தி தனது உரையை நிறைவு செய்தார்.

மாவட்ட இளைஞரணித் தலைவர் விஜயகுமார் நிகழ்ச்சியில் இணைப்புரை வழங்கி ஒருங்கிணைத்தார். இறுதியாக வேல்டெக் பொறியியல் கல்லூரி மாணவர் ச.பிரபாகரன் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்ச் சியில் மாவட்டத் தலைவர் ப.முத்தை யன், மாவட்டச் செயலாளர் கோ.நாத் திகன், ஆர்.எஸ்.அன்பழகன், மு.திரு மலை, ஆர். அரவிந்த, சி.சட்டநாதன், மு.தயாநிதி, சோமசுந்தரம், பூங்கணி யன், சு.மோகன்ராஜ், மாங்காடு முத்து, ந.விஜய்ஆனந்த், சன்.யுவராஜ், செ.இரா சன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், வ.ம.வேலவன், கி.மணிமேகலை, பாலமுரளி (எ) இளமாறன், நிர்மலா, அபிநயா சுருதி, கோவன் சித்தார்த், இறைவி, வீரப்பார் சுரேஷ், கரைமாநகர் சுரேஷ், சிவாஜி, பம்மல் கோபி, அனகை ஆறுமுகம், சன்.சரவணன், ப.கண்ணதாசன், அரும் பாக்கம் சா. தாமோதரன், க.தமிழ்ச் செல்வன், தாம்பரம் சீ.இலட்சுமிபதி, கூடுவாஞ்சேரி மா.இராசு, தாம்பரம் மா.குணசேகரன் மற்றும் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். --------

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner