எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாகர்கோவில் பிப்.14 குமரி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 1.2.2018 அன்று மாலை 5 மணிக்கு நாகர்கோவில், ஒழுகினச்சேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது.

நகர கழக துணைத் தலைவர் கவிஞர் எச்.செய்க் முகமது கடவுள் மறுப்பு கூறினார். மாவட்ட செயலாளர் சி.கிருஷ்னேஸ்வரி தலைமை தாங்கி உரையாற்றினார். திருநெல்வேலி மண்டல செயலாளர் கோ.வெற்றிவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், நகர அமைப்பாளர் ச.நல்லபெருமாள், தக்கலை ஒன்றிய தலைவர் இராஜீவ்லால், ப.க. அமைப்பாளர் இரா.லிங்கேசன் தோழர்கள் சந்தோஷ், டெனிபோஸ், சி.சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நாகர்கோவில் தளவாய்புரத்தைச் சேர்ந்த புதிய தோழர் ஜோஸ் மில்ட்டன் தன்னை திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொண்டவர். செல்லையா நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) தோவாளை வட்டம் செண்பகராமன் புதூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அத்து மீறி விநாயகன் சிலை வைக்கத்துணை போன தோவாளை வட்டாட்சியரை இக்கூட்டம் வன்மையாக கண்டிப்பதோடு அதற்கு துணை போன அரசு அதிகாரிகளையும் இக்கூட்டம் கண்டிக்கிறது. உடனடியாக அத்துமீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலையை அகற்ற வேண்டும் என இக்கூட்டம் மாவட்ட ஆட்சியரைக் கேட்டுக் கொள்கிறது.

2) குமரி மாவட்டம் முழுவதும் தொடர் பகுத்தறிவு பிரச்சாரம் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் விடுதலை வாசகர் வட்டம் தலைவர் பொறியாளர் ஜே.ரி.ஜீனியஸ், செயலாளர் ச.பழனி சங்கர நாராயணன், கழக மகளிர்பாசறை அமைப்பாளர் ப.சுதா

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner