எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, மார்ச் 14 விடுதலை வாசகர் வட்டம் திருவரங்கம் 42ஆவது மாதாந்திர சிறப்பு கூட்டத்தில் தமிழர் திருநாள் தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு விழா -திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி - பரிசளிப்பு விழா 18.2.2018 அன்று மாலை 6.30 மணிக்கு திருச்சி திருவரங்கம் சிறீராம் கல் யாண மகாலில் மு.மீனாட்சிசுந்தரம் தலைமையில் (தலை வர் வி.வா.வ) மிக சிறப்பாக நடைபெற்றது. ச.ஹரிஹரன் அனைவரையும் சிறப்பான உரையோடு வரவேற்றுப் பேசினார்.

எம்.சித்தார்த்தன், கே.பன்னீர்செல்வம், ராமதுரை.ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தார்கள்.

மேனாள் அமைச்சர் கே.என்.நேரு (தெற்கு மாவட்ட கழக செயலாளர், தி.மு.க.) தொடக்கவுரையாற்றி, மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். மத்தியரசு துறையில் மாணவர்கள் பின் தள்ளப்பட்டு வருகிறார்கள். நீட் என்ற நுழைவு தேர்வை மத்திய அரசு தமிழ்நாட்டு மாணவர் மாணவிகள் மீது திணித்ததால் பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த் தப்பட்டவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். விடுதலை வாசகர் வட்டம் போன்ற அமைப் புகள் செயல்பட வேண்டும். அதற்கு என்னால் வேண்டிய உதவிகளை செய்து தருகிறேன் என உறுதிக்கூறி உரையை நிறைவு செய்தார். மு.அன்பழகன் (மாநகர செயலாளர் தி.மு.க.)  வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர் இ.சூசை (இணைப் பேராசிரியர் தூய வளனார் கல்லூரி திருச்சி)விரிவான உரை நிகழ்த்தினார்.

தந்தை பெரியாரின் போர்வாள் அறிஞர் அண்ணா என்ற தலைப்பில் வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்திற்கு வருகைதந்தோர் எம்.என்.சத்தியமூர்த்தி, ப.ஆல்பர்ட், எஸ்.பெரியசாமி, பா.சங்கர், மு.கருணாநிதி, க.அன்பழகன், சிவக்கண்ணன், இரா.மோகன்தாஸ், சா.கண் ணன், ப.இராமநாதன், இரா.முருகன், மு.இராசேந்திரன், விடுதலைசெல்வம், தா.ஜெயராஜன் ஸ்டைல்ராஜ் எம்.நேருஜீ, டி.என்.பி.பிரகாசமூர்த்தி, க.ராசேந்திரன், மூக்கப்பிள்ளை, தாளக்குடி ராசலிங்கம், திருச்சி சுரேஷ், குறள்மொழி ப.மாணிக்கம், ராஜேஷ், ச.திருநாவுக்கரசு டி.மணிவேல் மற்றும் 400 பேருக்கு மேற்பட்ட இயக்க தோழர்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் பெரும் திரளாக திரண்டு விழாவை சிறப்பித் தார்கள். சு.பாசுகரன் நன்றி உரை வழங்கினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner